Category Archives: சிவ ஆலயங்கள்

காசி விஸ்வநாதர் திருக்கோயில், ஊட்டி

அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில், ஊட்டி, நீலகிரி மாவட்டம்.

+91-423-244 6717

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் காசிவிஸ்வநாதர்
அம்மன் விசாலாட்சி
பழமை 500 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருக்காந்தல்
ஊர் ஊட்டி
மாவட்டம் நீலகிரி
மாநிலம் தமிழ்நாடு

இங்குள்ள சித்தர்கள் மடத்தை 1882 ல் ஏகாம்பர தேசிகர் என்பவர் தோற்றுவித்தார். சிதம்பரத்தில் பணியிலிருந்த இவர் திடீரென தன்னை மறந்த ஒரு ஞான நிலையில் உலகியல் வெறுத்து துறவு பூண்டார். அதன்பிறகு நீலகிரி முழுக்க காடுகளிலும், மலைகளிலும் மனம் போன போக்கில் சுற்றித் திரிந்து தவம் செய்ய வந்தார்.

இறைவனை நினைத்து அடிக்கடி சமாதி நிலை அடைந்து தவத்தில் மூழ்கி விடுவதால் இவரின் சீடர்கள் இவரது பணியை கவனித்தனர். பின்பு இவரது காலத்துக்குப்பின் வழிவழியாக வந்த சீடர்கள் சித்தர்கள் மடத்தைக் கவனித்து வந்தனர். ராய போயர் என்பவர் காலத்தில் இப்போதுள்ள பாணலிங்கம் பிரதிஷ்டை செய்து கோயில் கட்டி வழிபாடு ஆரம்பமானது. இங்கு வாழ்ந்த சித்தர்களின் சமாதி அனைத்தும் கோயில் வளாகத்திற்குள் உள்ளது.

காசி விஸ்வநாதர் திருக்கோயில், காசி(வாரணாசி)

அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் ,காசி, வாரணாசி, உத்தரப்பிரதேசம் மாநிலம்.

காலை 2.30 மணி முதல் இரவு 11 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் காசி விஸ்வநாதர்
அம்மன் விசாலாட்சி
தீர்த்தம் கங்கை நதி (64 தீர்த்தக்கட்டங்கள்)
பழமை 3000 வருடங்களுக்கு முன்
ஊர் காசி
மாவட்டம் வாரணாசி
மாநிலம் உத்திரப்பிரதேசம்

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிவபெருமானால் உருவாக்கப்பட்ட நகரம் காசி. இத்தலம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ளது. இவ்வூருக்கு வாரணாசி, மகாமயானம், அபிக்தம், ஆனந்த பவனம் ஆகிய பெயர்களும் உள்ளன. மிகவும் பழமை வாய்ந்த நகரம். வாரணா, ஹசி என்ற நதிகளுக்கும் இடையில் இவ்வூர் அமைந்துள்ளதால் வாரணாசி என்ற பெயர் வந்தது. இவ்வூரை பனாரஸ் என்றும் சொல்வார்கள். கல்வியை வழங்கும் கிரகமான புதன், காசிவிஸ்வநாதரைப் பூஜித்ததன் பயனாக நவக்கிரகங்களில் ஒருவராக கிரகபதவி பெற்றார். கல்வியில் சிறந்து விளங்க மாணவர்கள் காசிவிஸ்வநாதரை வழிபாடு செய்வது சிறப்பாகும். காசி என்றால் ஒளிநகரம் என்பது பொருள்.