Category Archives: சிவ ஆலயங்கள்

கோகர்ணேஸ்வரர்(பிரகதாம்பாள்) திருக்கோயில், திருக்கோக(வ)ர்ணம்

அருள்மிகு கோகர்ணேஸ்வரர்(பிரகதாம்பாள்) திருக்கோயில், திருக்கோக()ர்ணம், புதுக்கோட்டை மாவட்டம்

+91-4322-221084, 9486185259

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் கோகர்ணேஸ்வரர் , மகிளவணேஸ்வரர்
அம்மன் பிரகதாம்பாள், மங்களாம்பிகை
தல விருட்சம் மகிள மரம்
தீர்த்தம் மங்கள தீர்த்தம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் புதுக்கோட்டை
ஊர் திருக்கோக()ர்ணம்
மாவட்டம் புதுக்கோட்டை
மாநிலம் தமிழ்நாடு

காமதேனுவுக்கு தேவேந்திரனால் சாபம் ஏற்பட்டு தேவலோகத்திலிருந்து பூலோகத்துக்கு வந்து சேர்ந்தது. பின்பு கபில மகரிஷி, மங்கள மகரிஷி ஆகியோரை வணங்கி ஆலோசனை கேட்டது. அதற்கு, அவர்கள்,”தினந்தோறும் காசி போய் கங்கை நீரை கொண்டு வந்து ஈஸ்வரனுக்கு அபிஷேகம் செய்து விட்டு, மீதியை பாறையை கீறி அதில்விட்டு விடுஎன்று சொல்கிறார்கள். பசுவின் பக்தியை சோதிக்க ஈஸ்வரன் புலியின் ரூபம் எடுத்து திருவேங்கை வாசல் வந்து சோதிக்கிறார். பசுவின் பக்தியை அறிய, “உன்னை சாப்பிட்டுவிடுவேன்என்று இறைவன் பயமுறுத்தினார். காமதேனுவோ,”விரத பூஜையை முடித்து விட்டு வருகிறேன்என புலியாகிய ஈசனிடம் சொல்லிவிட்டு இங்குள்ள சுவாமியை வணங்க வருகிறது. வணங்கியபின் மீண்டும் தன் சொல்லைக்காக திருவேங்கைவாசல் வருகிறது. அங்கு, காமதேனுவுக்கு, புலியாகிய இறைவனின் காட்சியும், மோட்சமும் கிடைக்கிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோயில் மிகச் சிறந்த குடைவறைக் கோயிலாக இன்றும் திகழ்கிறது.

கவுதமேஸ்வர் திருக்கோயில், காரை

அருள்மிகு கவுதமேஸ்வர் திருக்கோயில், காரை, வேலூர் மாவட்டம்.

+91- 97901 43219, 99409 48918.

காலை 6 மணி முதல் மாலை 6.30 மணி வரை திறந்திருக்கும். முன்கூட்டியே அர்ச்சகரை தொடர்பு கொண்டால், வசதிப்படி சிவனைத் தரிசிக்கலாம்.

மூலவர் கவுதமேஸ்வரர்
அம்மன் கிருபாம்பிகை
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் காரைமரைக்காடு
ஊர் காரை
மாவட்டம் வேலூர்
மாநிலம் தமிழ்நாடு

தன் மனைவி மீது ஆசை கொண்ட இந்திரனை கவுதம முனிவர் சபித்து விட்டார். இச்சம்பவம் அவரது மனதை மிகவும் பாதித்தது. மன அமைதிக்காக இலிங்க வழிபாடு செய்தார். அபிஷேகம் செய்வதற்காக கங்கையை இவ்விடத்தில் பொங்கச்செய்தார். கவுதமரின் வேண்டுதலுக்காக வந்த இந்நதி, “கவுதமிஎனப் பெயர் பெற்றது. காலப்போக்கில், பாலாற்றில் இந்த நதி ஐக்கியமாகி விட்டது. கவுதமர் பூஜித்த சிவன் இங்கு கவுதமேஸ்வரர்என்ற பெயரில் அருளுகிறார்.

அம்பாள்கிருபாம்பிகை சிவன் சன்னதி முன்புள்ள மண்டபத்தில் காட்சி தருகிறாள். ஒரே சமயத்தில் சிவன், அம்பிகை இருவரையும் தரிசிக்கும் வகையில் கோயிலின் அமைப்பு இருக்கிறது. கோயில் முகப்பில் கவுதம மகரிஷி அமர்ந்த நிலையில் உள்ளார்.