Category Archives: சிவ ஆலயங்கள்

சகல தீர்த்தமுடையவர் திருக்கோயில், தீர்த்தாண்டதானம்

அருள்மிகு சகல தீர்த்தமுடையவர் திருக்கோயில், தீர்த்தாண்டதானம், இராமநாதபுரம் மாவட்டம்.

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் தீர்த்தமுடையவர்
அம்மன் பெரியநாயகி
தீர்த்தம் சகல தீர்த்தம்
ஆகமம் சிவாகமம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் தீர்த்தாண்டதானம்
மாவட்டம் இராமநாதபுரம்
மாநிலம் தமிழ்நாடு

இராமபிரான், இலட்சுமணனுடன் சீதா பிராட்டியை தேடி இவ்வழியே இலங்கைக்கு சென்றார். அப்போது, இங்கு சற்றுநேரம் இளைப்பாறினார். அவருக்கு தாகம் எடுக்கவே, வருணபகவான் ஒரு தீர்த்தம் உண்டாக்கிக் கொடுத்தார். அந்த நீரைப் பருகிய இராமபிரான் மனம் மகிழ்ந்தார்.

இராமபிரான் வந்திருப்பதை அறிந்த அகத்திய முனிவர் இங்கு வந்தார். இராவணன் சீதையை சிறையெடுத்து சென்றதால், ராமனின் மனம் புண்பட்டுள்ளதை அறிந்த அகத்திய மாமமுனிவர் ராமனுக்கு ஒரு யோசனை சொன்னார். “இராமா! இராவணன் சிறந்த சிவ பக்தன். ஆகையால் சிவன் அருள்பெற்றால் தவிர அவனை வெல்லமுடியாது. நீ இங்கே குடிகொண்டிருக்கும், என்றும் பழம்பதிநாதராகிய, சகலதீர்த்தமுடையவரை ஐந்து முறை வணங்கிச்செல். வெற்றி கிடைக்கும்எனக் கூறினார். அவ்வாறே இராமபிரான் வழிபட சிவபெருமான் தேவியுடன் காட்சியளித்தார்.

உருத்ரகோடீஸ்வரர் திருக்கோயில், சதுர்வே(த)தி மங்கலம்

அருள்மிகு உருத்ரகோடீஸ்வரர் திருக்கோயில், சதுர்வே()தி மங்கலம், சிவகங்கை மாவட்டம்.

+91- 4577- 246170, 94431 91300 +91-4577-242 981, 98420-82048

காலை 5.30 மணி முதல் 12 மணி வரை, மாலை மணி 4 முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் உருத்ரகோடீஸ்வரர்
அம்மன் ஆத்மநாயகி
தல விருட்சம் எலுமிச்சை
தீர்த்தம் சூரிய, சந்திர தீர்த்தம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் மட்டியூர்
ஊர் சதுர்வேதமங்கலம்
மாவட்டம் சிவகங்கை
மாநிலம் தமிழ்நாடு

ஒரு யாகம் நடத்துவது தொடர்பான பிரச்னையில் பிரம்மா, கோபக்கார முனிவரான துர்வாசரின் சாபத்திற்கு ஆளானார். சாபவிமோசனம் பெறப் பல இடங்களுக்கும் சென்று சிவபெருமானை வழிபட்டு வந்தார். ஓரிடத்தில், ஆங்கீரசர் எனும் முனிவர் தவம் செய்து கொண்டிருந்ததை கண்டார். அவரது ஆலோசனையின்படி, அந்த இடத்தில், சிவனைப் பிரதிஷ்டை செய்து வணங்கி சாபம் நீங்கப்பெற்றார்.

கலைமகளை இவ்விடத்தில் சிவனை சாட்சியாக வைத்து திருமணம் செய்தார். அவரது திருமணத்திற்கு வந்த கோடி உருத்திரர்கள் வந்தனர். இவர்கள் சிவனின் அம்சங்கள். பிரம்மாவால் படைக்கப்பட்ட இந்த உருத்ரர்களுக்கு அழிவு என்பதே கிடையாது.