Category Archives: சிவ ஆலயங்கள்

சங்கமேஸ்வரர் திருக்கோயில் , கோட்டைமேடு

அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில் , கோட்டைமேடு, கோயம்புத்தூர் மாவட்டம்.

+91- 422- 239 3677

காலை 6.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சங்கமேஸ்வரர்
அம்மன் அகிலாண்டேஸ்வரி
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் கோட்டைமேடு
மாவட்டம் கோயம்புத்தூர்
மாநிலம் தமிழ்நாடு

சிவபக்தனான கரிகால் சோழ மன்னன் தனக்குப் பின் நாட்டை ஆள, புத்திரன் இன்றி தவித்தான். தனக்கு ஏற்பட்ட குறை நீங்கவேண்டி, சிவனிடம் மனம் உருகி வழிபாடு செய்து முறையிட்டான். அவ்வாறு அவன் வழிபட்டு வர, ஓர்நாள் இரவில் தன் கனவில் சிவன் அற்புதங்கள் புரிந்த சில தலங்களில் ஆலயங்கள் எழுப்புவது போல கனவு கண்டான். இது குறித்தும், வாரிசு இல்லாமை நீங்க செய்ய வேண்டிய பரிகாரம் குறித்தும் அவன் தனது குருவிடமும், ஆன்றோர்களிடமும் ஆலோசனை கேட்டான். அவர்களது ஆலோசனையின் படி, சிவன் அற்புதங்கள் புரிந்த இடங்களில் எல்லாம் கோயில்களை எழுப்பி வணங்கினான். அவன் கட்டிய 36 சிவத்தலங்களில் இத்தலம் 31வது தலமாக விளங்குகிறது.

சாம்பமூர்த்தீஸ்வரர் திருக்கோயில், ஏத்தாப்பூர்

அருள்மிகு சாம்பமூர்த்தீஸ்வரர் திருக்கோயில், ஏத்தாப்பூர், சேலம் மாவட்டம்.

+91- 4282 – 270 210

காலை 9.30 மணி முதல் 12 மணி வரை, மாலை மணி 5 முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சாம்பமூர்த்தீஸ்வரர்
உற்சவர் உமாமகேஸ்வரர்
அம்மன் மனோன்மணி
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் வசிஷ்டநதி
ஆகமம் காமிகம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் வசிஷ்டாரண்யம்
ஊர் ஏத்தாப்பூர்
மாவட்டம் சேலம்
மாநிலம் தமிழ்நாடு

சிவனுக்கு அழைப்பு விடுக்காமல், தட்சன் தன்னலம் கருதி ஒரு யாகம் நடத்தினான். யாகத்திற்கு செல்ல வேண்டாம் என அம்பாளிடம், சிவன் சொல்லியிருந்தும் அவர் மனம் பொறுக்காமல் சென்றுவிட்டார். இதனால், சிவன் கோபம் கொண்டார். தனித்திருந்த அவர், மனஅமைதி வேண்டி இத்தலத்தில் தங்கினார். அம்பாள், சிவனின் கோபம் தணிக்க வேண்டி தனது அண்ணன் மகாவிஷ்ணுவுடன் வந்து சுவாமியை வணங்கி தவமிருந்தார். இங்குள்ள வில்வ மரத்தின் அடியில் சிவன் காட்சி தந்து அம்பாளை மன்னித்தார். இவ்விடத்தில், சுவாமி சுயம்புவாக எழுந்தருளியுள்ளார். பிரகாரத்தில் இம்மரம் உள்ளது. பிரிந்துள்ள தம்பதியர்கள் இம்மரத்தை சுற்றி வந்து சுவாமியை வணங்கினால் ஒற்றுமையாக வாழ்வர் என்பது நம்பிக்கை.

பஞ்சபூத தலங்களில் இது நீர் தலம். வசிஷ்டமுனிவர் இங்கு வந்து நதியில் நீராடி சுவாமியை வணங்கி சென்றுள்ளார்.