Category Archives: சிவ ஆலயங்கள்

சுகவனேஸ்வரர் திருக்கோயில், சேலம்

அருள்மிகு சுகவனேஸ்வரர் திருக்கோயில், சேலம், சேலம் மாவட்டம்.

+91-427-245 0954, 245 2496

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சுகவனேஸ்வரர், வனநாதர், கிளிவண்ணமுடையார்
அம்மன் சுவர்ணாம்பிகை, மரகத வல்லி, பச்சை வல்லி
தல விருட்சம் பாதிரி மரம்
தீர்த்தம் அமண்டுகம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் சுகவனம், சதுர்வேதமங்கலம்
ஊர் சேலம்
மாவட்டம் சேலம்
மாநிலம் தமிழ்நாடு

அருணகிரி நாதர் திருப்புகழில் இத்தலத்து முருகனைப் பாடியுள்ளார்.

பிரம்மதேவன் தன் படைப்பில் ஒவ்வொன்றும் எவ்வாறு வித்தியாசமாக இருக்க முடிகிறது என்ற இரகசியத்தை சொல்ல அதை கேட்டுக்கொண்டிருந்தவர்களில், சிவநெறிகளில் சிறந்த சுகர் என்ற முனிவர் சரஸ்வதியிடம் போய் சொல்லிவிட்டார். கோபம் கொண்ட பிரம்மன், சுகர் முனிவரைக் கிளியாக்கி சாபம் கொடுத்துவிட்டு, பாபநாசப்பகுதியில்(இப்போதைய கோயில் பகுதி) வந்த சுயம்புமூர்த்தியாகிய சிவபெருமானை வழிபட்டுவந்தால் சாபம் நீங்கும் என்றும் கூறினார். அதேபோல் வந்து எண்ணற்ற கிளிகளோடு தானும் ஒரு கிளியாக சுகர் முனிவர், சிவபெருமானை வழிபட்டு வரும் வேளையில் வேடன் ஒருவன் கிளிகளை விரட்டியடிக்க, அவை புற்றின் மீது பதுங்கின. கோபம்கொண்ட வேடன் புற்றை வெட்டினான். கிளிகள் எல்லாம் செத்தன. அப்போது இராசகிளி(சுகர்) மட்டும் சுயம்பு மூர்த்தியின் முடிமீது சிறகை விரித்து, காத்தது. வேடன் கிளியைவெட்ட இரத்தம் பீறிட்டது. கிளி இறக்க சுயம்புவின் தலையில் இரத்தம் பீறிட்டது. சுயம்புவாகிய இறைவனை உணர்ந்த வேடன் தன் வாளால் தன்னைத்தானே வெட்டி மாய்த்துக்கொண்டான். சிவனடி சேர்ந்ததால் கிளியுருவம் மறையப்பெற்ற சுகர் முனிவர், “பெருமானே, நீங்கள் சுகவனேஸ்வரராக இத்திருத்தலத்தில் இருந்து அனைவருக்கும் அருள் தர வேண்டும்என்று கேட்டுக் கொள்ள, அதன்படியே இறைவனும் அருளியதாக வரலாறு கூறுகிறது.

சுகந்தவனேஸ்வரர் திருக்கோயில், பெரிச்சிகோயில்

அருள்மிகு சுகந்தவனேஸ்வரர் திருக்கோயில், பெரிச்சிகோயில், கண்டரமாணிக்கம் வழி, சிவகங்கை மாவட்டம்.

+91- 4565 – 255 373, 94866 71544, 97863 67380.

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சுகந்தவனேஸ்வரர்
உற்சவர் சோமாஸ்கந்தர்
அம்மன் சமீபவல்லி
தல விருட்சம் வன்னி
தீர்த்தம் கிணறு
ஆகமம் சிவாகமம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் பெரிச்சிகோயில்
மாவட்டம் சிவகங்கை
மாநிலம் தமிழ்நாடு

இப்பகுதியை மாறவர்மன் சுந்தரபாண்டிய மன்னர் ஆட்சி செய்து வந்தார். ஒருசமயம், ஒரு போரில் வெற்றி பெற்றார். அதற்கு காணிக்கையாக, சிவனுக்கு கோயில் கட்ட விரும்பினார். அவருக்கு எந்த இடத்தில் கோயில் கட்டுவதென குழப்பம் ஏற்பட்டது. அவரது கனவில் தோன்றிய சிவன், ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு இலிங்கம் இருக்குமெனவும், அங்கேயே கோயில் எழுப்பலாம் என்றும் சொன்னார். குறிப்பிட்ட அந்த இடத்தில் இலிங்கத்தைக் கண்ட மன்னர் கோயில் எழுப்பினார். வாசனை மிக்க மலர்கள் நிறைந்த வனத்தின் மத்தியில் எழுந்தருளியவர் என்பதால் சுவாமி, “சுகந்தவனேஸ்வரர்என்று பெயர் பெற்றார்.