அருள்மிகு சரஸ்வதி திருக்கோயில், கூத்தனூர்
அருள்மிகு சரஸ்வதி திருக்கோயில், கூத்தனூர்– 609 503. திருவாரூர் மாவட்டம்.
+91-4366-238445,+04366- 239909, 9444635427, 9976215220 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | சரஸ்வதி |
பழமை | – | 500-1000 வருடங்களுக்கு முன்பு |
ஊர் | – | கூத்தனூர் |
மாவட்டம் | – | திருவாரூர் |
மாநிலம் | – | தமிழ்நாடு |
பிரம்மனும், சரஸ்வதியும் சத்தியலோகத்தில் வாழ்ந்து தேவர்களுக்கு அருள்பாலித்து வந்தனர். அப்போது கலைவாணி, “இந்த சத்தியலோகமே, கல்விக்கரசியான தன்னால் தான் பெருமையடைகிறது,” என்றாள். பிரம்மாவோ, தான் படைக்கும் தொழிலைச் செய்வதால்தான் பெருமையடைகிறது என்றும், தனது துணைவி என்பதாலேயே சரஸ்வதி பெருமையடைகிறாள் என்றும் சொன்னார்.
இருவருக்கும் இதுகுறித்து வாதம் ஏற்பட்டது. இது பெரும் பிரச்னையாகி, பிரம்மனும் சரஸ்வதியும் ஒருவரையொருவர் சபித்துக் கொண்டனர். இதனால் இருவரும் பூலோகத்தில் சோழநாட்டில் புண்ணியகீர்த்தி, சோபனை என்னும் அந்தண தம்பதியினருக்கு, பகுகாந்தன் என்ற மகனாகவும், சிரத்தை என்ற மகளாகவும் அவதரித்தனர். இவர்களுக்கு திருமண வயது வந்ததும் பெற்றோர்கள் இவர்களுக்கேற்ற வரன் தேடினர். அப்போது இவர்கள் இருவருக்கும் தாங்கள் யார் என்பது நினைவுக்கு வந்தது.
சகோதர நிலையிலுள்ள தாங்கள் திருமணம் செய்து கொண்டால் உலகம் பழிக்குமே என அஞ்சினர். தம்பதிகள் ஒற்றுமையாக இல்லாவிட்டால், இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலைகளைச் சந்திக்க நேரிடும் என்பதை உலகத்திற்கு எடுத்துக்காட்டவே இப்படி ஒரு நாடகத்தை உலகத்தின் முன்னால் அவர்கள் நடத்திக்காட்டினர்.
பெற்றோருக்கு இவ்விஷயம் தெரியவந்தது. அவர்களை சமாதானம் செய்யும் விதத்தில், சிவனை நினைத்து உள்ளம் உருகிப் பிரார்த்தனை செய்தனர். சிவபெருமான் அவள் முன்தோன்றி,”இப்பிறவியில் சகோதரர்களாக அவதரித்த நீங்கள், திருமணம் செய்வதென்பது இயலாத காரியம். எனவே, நீ மட்டும் இங்கே தனியாகக் கோயில் கொண்டிரு. இங்கு வரும் பக்தர்களுக்கு கல்விச்செல்வத்தை வழங்கு” என்று அருள்பாலித்தார். அதன்படி கன்னி சரஸ்வதியாக இக்கோயிலில் இவள் அருள்பாலிக்கிறாள்.
அருள்மிகு சரசுவதிஅம்மன் திருக்கோவில், பனிசிகாடு
அருள்மிகு சரசுவதிஅம்மன் திருக்கோவில், பனிசிகாடு, கோட்டயம் மாவட்டம், கேரளா மாநிலம்.
+91-0481 – 233 0670, 233 0020 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 5.30 மணி முதல் 9.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | சரசுவதி அம்மன் |
பழமை | – | 1000-2000 வருடங்களுக்கு முன்பு |
ஊர் | – | பனிசிகாடு |
மாவட்டம் | – | கோட்டயம் |
மாநிலம் | – | கேரளா |
இவ்வூரில் ஒரு பெருமாள் கோயில் இருந்தது. கிழுப்புரம், கரிநாடு, கைமுக்கு என்ற மூன்று நம்பூதிரி குடும்பத்தினர் பூஜை செய்து வந்தனர்.
இவர்களில் கிழுப்புரம் தாமோதரன் குடும்பத்தினருக்கு வாரிசு இல்லை.
இதுகுறித்து, சரசுவதியின் சொரூபமான கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்குச் சென்று அம்பாளிடம் தன் குறை சொல்லி, அங்கேயே தங்கி வழிபட்டார்.
ஒரு நாள் அவரது கனவில் தோன்றிய அம்பிகை, “பூர்வ ஜென்ம வினைப்பயனால் இப்பிறவியில் உனக்கு குழந்தை பாக்கியம் இல்லை. உன் வீட்டின் அருகில் உள்ள நம்பூதிரியின் வீட்டில் ஒரு குழந்தை பிறக்கும். அதைத் தத்தெடுத்து வளர்த்து வா” என்றாள். அதன்படி பக்கத்து வீட்டில் பிறந்த குழந்தையைத் தத்து கொடுக்கும்படி கேட்டார் தாமோதரன்.
அவர்களோ தங்களுக்கு அடுத்த குழந்தை பிறந்தால், தத்து கொடுப்பதாகச் சொல்லிவிட்டனர்.
வருத்தமடைந்த தாமோதரன், மூகாம்பிகை கோயிலுக்கு, தான் கொண்டு சென்ற குடையுடன் பெருமாள் கோயிலுக்கு வந்தார். குடையை ஓரிடத்தில் வைத்து விட்டு, கோயில் குளத்தில் நீராடினார். திரும்பி வந்து குடையை எடுத்த போது அதை எடுக்க முடியவில்லை.