அருள்மிகு சீதேவி அம்மன் திருக்கோயில், காஞ்சிக்கோயில்

அருள்மிகு சீதேவி அம்மன் திருக்கோயில், காஞ்சிக்கோயில், ஈரோடு மாவட்டம்.

+91 96550 99100 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சீதேவி அம்மன்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்பு
ஊர் காஞ்சிக்கோயில்
மாவட்டம் ஈரோடு
மாநிலம் தமிழ்நாடு

காஞ்சிக்கோயில் சீதேவி அம்மனின் தங்கை பாரியூர் கொண்டத்து காளியம்மன். விவசாயி ஒருவன் கொண்டத்துக் காளியம்மனை, தன் மந்திரச் சொல்லால் கட்டி அடிமைப்படுத்தினான். மந்திரத்துக்கு காளி கட்டுப்படும் வழக்கமுடையவள். ஒருமுறை காஞ்சிக்கோயில் திருவிழாவிற்கு சீதேவியம்மன், காளியம்மனை அழைக்க சென்றாள். அடிமைப்பட்டிருந்த தங்கையின் நிலை கண்டு கொதித்த அவள், மந்திரவாதியை அழித்தாள். சர்வசக்தியும் வாய்ந்த அவளுக்கு கோயில் கட்டப்பட்டது. விஜயநகர மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட கோயில் இது.

குப்பண்ணசாமி, வீரமாத்தி சின்னம்மன், பெரிய காண்டிஅம்மன், கரிச்சி, அப்பிச்சி சுவாமிகள், வேடன் சின்னாரி, புலிக்குத்தி வீரன், கருப்பண்ணசாமி, கன்னிமார், மாகாளியம்மன், காமாட்சியம்மன் போன்ற பிரகார தெய்வங்களை வணங்கியபிறகு, மூலவர் சீதேவியம்மனை வணங்க வேண்டும்.

செம்பொன், முளசி கண்ணன், கண்ணன் ஆகிய மூன்று குதிரைகள் கோயில் வாசலில் எழுந்தருளியுள்ளன. ராஜகோபுரத்தை கடந்து சென்றதும் லட்சுமி, பார்வதி, சரசுவதி சிற்பங்கள் உள்ளன. வடக்கு திசை நோக்கிய கருவறையில், கோபுரத்தின் கீழ் எட்டுக்கைகளுடன் சீதேவியம்மன் வடக்குநோக்கி எழுந்தருளியுள்ளாள். அம்மனுக்கு எதிரே நந்தியும், பலிபீடமும் உள்ளன.

அருள்மிகு சரஸ்வதி கோவில், வடக்கன்பரவூர்

அருள்மிகு சரஸ்வதி கோவில், வடக்கன்பரவூர், எர்ணாகுளம் மாவட்டம். கேரளா மாநிலம்.

+91- 484-552 6710 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 5 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சரஸ்வதி
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்பு
ஊர் வடக்கன்பரவூர்
மாவட்டம் எர்ணாகுளம்
மாநிலம் கேரளா

பரவூர் தம்பிரான் என்ற மூகாம்பிகை பக்தர், மாதம் ஒருமுறை கொல்லூர் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்து வருவது வழக்கம். வயதான காலத்தில் இவரால் கொல்லூர் செல்ல முடியவில்லை.

மிகவும் வருத்தத்துடன் இருந்த அவரது கனவில் மூகாம்பிகை தோன்றி,”நீ இருக்கும் இடத்தருகே ஒரு கோயில் கட்டு. அங்கு நான் கலைவாணியாக அமர்ந்து அருள்பாலிக்கிறேன்என்றாள்.
அதன்படி தாமரைப் பூக்கள் அடங்கிய குளம் அமைக்கப்பட்டு, நடுவில் சரஸ்வதிக்கு கர்ப்பக்கிரகம் அமைக்கப்பட்டது.

கன்னிமூலையில் கணபதி, பிரகாரத்தில் சுப்ரமணியர், விஷ்ணு, யட்க்ஷி, ஆஞ்சநேயர், வீரபத்திரர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.