அருள்மிகு சக்குளத்துகாவு பகவதி அம்மன் திருக்கோயில், சக்குளத்துக்காவு

அருள்மிகு சக்குளத்துகாவு பகவதி அம்மன் திருக்கோயில், சக்குளத்துக்காவு, கோட்டயம் மாவட்டம், கேரளா மாநிலம்.

காலை 5 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சக்குளத்துக்காவு
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்பு
ஊர் சக்குளத்துக்காவு
மாவட்டம் கோட்டயம்
மாநிலம் கேரளா

தற்போது கோயில் இருக்கும் சக்குளம் பகுதி ஒரு காலத்தில் பெரும் காடாக இருந்தது. ஒருநாள், வேடன் ஒருவன் தன் மனைவியுடன் காட்டிற்கு விறகு வெட்ட வந்த போது, ஒரு பாம்பு சீறி வந்தது. பயந்து போன வேடன், அதை தன் கோடரியால் வெட்ட முயன்ற போது, அது தப்பி ஓடியது. கொல்லாமல் விட்டதால், பாம்பு தன்னை பழிவாங்கி விடும் என பயந்த வேடன் அதைக் கொல்லும் முடிவுடன் விரட்டினான்.

ஒரு புற்றை நோக்கி ஓடிய பாம்பு, அதன் மீது ஏறி புற்றில் இருந்த துளைக்குள் செல்ல முயன்ற போது, வேடன் அதை வெட்டினான். ஆனால், பாம்பு வெட்டுப்படவே இல்லை. மாறாக சீறிக்கொண்டு படமெடுத்தது. சற்று நேரத்தில் புற்றிலிருந்து ஒரு தண்ணீர் ஊற்று கிளம்பியது. பாம்பு மறைந்து விட்டது.

அருள்மிகு சாரதாம்பாள் திருக்கோயில், சிருங்கேரி

அருள்மிகு சாரதாம்பாள் திருக்கோயில், சிருங்கேரி – 577 139, சிக்மகளூர் மாவட்டம். கர்நாடகா மாநிலம்.

+91 8265 – 250 123, 250 192 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 2 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சாரதாம்பாள்
தீர்த்தம் துங்கபத்ரா
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்பு
ஊர் சிருங்கேரி
மாவட்டம் சிக்மகளூர்
மாநிலம் கர்நாடகா

மாகிஷ்மதி நகரில் மண்டனமிசிரர் என்ற விசுவரூபரிடம் ஆதிசங்கரர் வேதம் குறித்து வாதம் செய்தார். வாதத்திற்கு விசுவரூபரின் துணைவி உபயபாரதி நடுவராக இருந்தார். இவர் சரசுவதி தேவியின் அவதாரம். வாதத்தில் சங்கரர் தோற்றால் துறவறம் விடுத்து இல்லறம் மேற்கொள்ள வேண்டும். விசுவரூபர் தோற்றால் துறவறம் மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் நிபந்தனை.

வாதம் ஆரம்பிக்கும் முன் சங்கரருக்கும் விசுவரூபருக்கும் மாலைகளை அணிவித்து, யாருடைய மாலை முதலில் வாடுகிறதோ அவரே தோற்றவர் என அறிவிக்கப்பட்டது.