அருள்மிகு கோலவில்லி ராமர் திருக்கோயில், திருவெள்ளியங்குடி
அருள்மிகு கோலவில்லி ராமர் திருக்கோயில், திருவெள்ளியங்குடி – 612 102, தஞ்சாவூர் மாவட்டம்.
+91- 435-245 0118, 94433 96212 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | கோலவில்லி ராமர், ஸ்ரீராப்தி நாதன் |
உற்சவர் | – | சிருங்கார சுந்தரர் |
தாயார் | – | மரகதவல்லி (ஸ்ரீதேவி, பூதேவி) |
தல விருட்சம் | – | செவ்வாழை |
தீர்த்தம் | – | சுக்கிர தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், பரசுராம தீர்த்தம், இந்திர தீர்த்தம் |
ஆகமம் | – | வைகானசம் |
பழமை | – | 1000-2000 வருடங்களுக்கு முன் |
புராணப் பெயர் | – | பார்கவ க்ஷேத்திரம் |
ஊர் | – | திருவெள்ளியங்குடி |
மாவட்டம் | – | தமிழ்நாடு |
மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்து மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் கேட்டார். வந்திருப்பது இறைவன் என்பதை அறியாத மன்னன் தாரை வார்த்து கொடுக்க சம்மதிக்கிறான். ஆனால், உண்மைநிலை அறிந்த அசுரகுல குரு சுக்கிராச்சாரியார், தாரை வார்க்கும் செம்புக்குடத்தின் துவாரத்தை ஒரு வண்டாக உருவெடுத்து அடைத்து விட்டார். குருவின் இந்த செயல் அறிந்த பகவான் ஒரு தர்ப்பைப்புல்லால் துவாரம் வழியாக குத்த, ஒரு கண்ணை இழக்கிறார் சுக்கிரன். ஒளியிழந்த கண்ணுடன் பல தலங்களுக்கு சென்று வழிபட்டு கடைசியாக இத்தலத்துப் பெருமாளை வழிபட்டு மீண்டும் பார்வை பெற்றார். இதனால் தான் இத்தலம் “வெள்ளி(சுக்கிரன்)யங்குடி” என அழைக்கப்படுகிறது.
சுக்கிரன் இத்தலத்தில் வந்து தவம் செய்வதற்கு மற்றொரு காரணமும் உண்டு. தேவ சிற்பியான விஸ்வகர்மா பெருமாளுக்கு அழகாக கோயில்களை கட்டி முடித்தார். இதே போல் தன்னால் கோயில்கள் கட்ட முடியவில்லையே என அசுரகுல சிற்பி மயன் வருத்தப்பட்டு பிரம்மனிடம் வேண்டினார்.
அருள்மிகு கஜேந்திர வரதன் திருக்கோயில், கபிஸ்தலம்
அருள்மிகு கஜேந்திர வரதன் திருக்கோயில், கபிஸ்தலம்– 614203, தஞ்சாவூர் மாவட்டம்.
+91- 4374 – 223 434 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | கஜேந்திர வரதர் (ஆதிமூலப்பெருமாள், கண்ணன்) |
உற்சவர் | – | செண்பகவல்லி |
தாயார் | – | ரமாமணி வல்லி, பொற்றாமரையாள் |
தல விருட்சம் | – | மகிழம்பூ |
தீர்த்தம் | – | கஜேந்திர புஷ்கரிணி, கபில தீர்த்தம் |
ஆகமம் | – | வைகானசம் |
பழமை | – | 1000-2000 வருடங்களுக்கு முன் |
ஊர் | – | கபிஸ்தலம் |
மாவட்டம் | – | தஞ்சாவூர் |
மாநிலம் | – | தமிழ்நாடு |
இந்திராஜும்னன் எனும் மன்னன் மிகச்சிறந்த விஷ்ணு பக்தனாக இருந்தான். சதா சர்வகாலமும் விஷ்ணு சிந்தனையிலேயே இருப்பான். விஷ்ணுவை கும்பிடாமல் எந்த ஒரு செயலையும் செய்யமாட்டான். ஒரு நாள் அவன் இவ்வுலகத்தையே மறந்த நிலையில் விஷ்ணு பூஜை செய்து கொண்டிருந்தான். இது போன்ற நேரங்களில் யாரும் அவனை காண வருவதுமில்லை. இவனும் யாரையும் காண்பதுமில்லை.
இப்படி அவன் பூஜை செய்து கொண்டிருந்த வேளையில் துர்வாச முனிவர் அவனைக்காண வந்தார். இவர் வந்து வெகு நேரம் ஆனது. ஆனாலும் மன்னன் தன் பூசையறையை விட்டு வெளியே வரவில்லை. பொறுத்துப் பொறுத்து பார்த்த துர்வாசர், மன்னன் இருந்த அறைக்குள் சென்று அவன் முன்னால் நின்றார். அப்போதும்கூட துர்வாசர் வந்திருப்பதை அறியாமல் மன்னன் ஆழ்ந்த பக்தியில் மூழ்கியிருந்தான்.