அருள்மிகு ஜெகநாதன் திருக்கோயில், நாதன் கோயில்
அருள்மிகு ஜெகநாதன் திருக்கோயில், நாதன் கோயில் என்ற நந்திபுர விண்ணகரம்-612 703 தஞ்சாவூர் மாவட்டம்.
+91- 435-241 7575. 98430 95904, 94437 71400 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | ஜெகநாதன், விண்ணகரப்பெருமாள், நாதநாதன் |
உற்சவர் | – | ஜெகநாதன் |
தாயார் | – | செண்பகவல்லி |
தல விருட்சம் | – | செண்பக மரம் |
தீர்த்தம் | – | நந்தி புஷ்கரிணி |
பழமை | – | 1000-2000 வருடங்களுக்கு முன் |
புராணப் பெயர் | – | நந்திபுர விண்ணகரம் |
ஊர் | – | நாதன்கோயில் |
மாவட்டம் | – | தஞ்சாவூர் |
மாநிலம் | – | தமிழ்நாடு |
திருப்பாற்கடலில் மகாலட்சுமி எப்போதும் திருமாலின் பாதத்தின் அருகே இருந்து சேவை செய்து வந்தார். அவருக்கு திடீரென திருமாலின் திருமார்பில் இடம் பிடிக்க ஆசை வந்தது. எனவே செண்பகாரண்யம் என்ற இத்தலத்தில் வந்து தவம் செய்தாள். திருமகளின் பிரிவை தாங்காத திருமால், ஐப்பசி மாதம் வளர்பிறை வெள்ளிக்கிழமையில் திருமகளைத் தன் திருமார்பில் ஏற்றுக்கொண்டார். எனவே ஐப்பசி வெள்ளிக்கிழமைகளில் இங்குள்ள தாயாருக்கு செய்யப்படும் அபிஷேகங்கள் பக்தர்களின் வேண்டுதலை விரைவில் நிறைவேற்றும் என்பது நம்பிக்கை.
கிழக்கு நோக்கித் தவம் செய்த திருமகளை திருமால் ஏற்றதால், இத்தலப் பெருமாள் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். செண்பகாரண்ய தலத்தில் இலட்சுமி தவம் செய்ததால், இத்தலத் தாயாரின் திருநாமம் “செண்பகவல்லி” ஆனது. இங்குள்ள பெருமாளின் திருநாமம் ஜெகநாதன். இவர் திருநாமத்திலேயே இவ்வூர் “நாதன் கோயில்” என்று ஆனது.
அருள்மிகு ஹரசாப விமோசன பெருமாள் திருக்கோயில், கண்டியூர்
அருள்மிகு ஹரசாப விமோசன பெருமாள் திருக்கோயில், கண்டியூர்– 613202. தஞ்சாவூர் மாவட்டம்.
+91- 93446 08150 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 8.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | ஹரசாப விமோசன பெருமாள், கமல நாதன் |
உற்சவர் | – | கமல நாதன் |
தாயார் | – | கமலவல்லி நாச்சியார் |
தீர்த்தம் | – | கபால மோட்ச புஷ்கரிணி |
ஆகமம் | – | வைகானசம் |
பழமை | – | 1000-2000 வருடங்களுக்கு முன் |
புராணப் பெயர் | – | கண்டன க்ஷேத்திரம், பஞ்ச கமல க்ஷேத்திரம் |
ஊர் | – | கண்டியூர் |
மாவட்டம் | – | தஞ்சாவூர் |
மாநிலம் | – | தமிழ்நாடு |
சிவனுக்கு ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் என்று ஐந்து திருமுகங்கள் உண்டு. இதே போல் பிரம்மனுக்கும் ஐந்து முகங்கள் இருந்த காலம் அது. அதனால் சிவனுக்கு ஈடாகத் தன்னையும் நினைத்து கர்வத்துடன் பிரம்மா செயல்பட்டு வந்தார். இதனால் கோபம் கொண்ட சிவன் பிரம்மனின் நடுத்தலையைக் கிள்ளியெறிந்தார். அதனால் சிவனை பிரம்மகத்தி தோஷம் பிடித்துக்கொண்டது. இந்த தோஷத்தைத் தொலைக்க, கையில் ஒட்டிய பிரம்மனின் கபாலத்துடன் தீர்த்த யாத்திரை கிளம்பினார். ஒரு இடத்தில் அந்த கபாலம் விழுந்தது. அங்கே விஷ்ணு இருந்தார். அந்த தலமே பூரணவல்லி தாயார் சமேத ஹரசாப விமோசனப் பெருமாள் கோயில்.