அருள்மிகு சவுமிய நாராயணப்பெருமாள் திருக்கோயில், திருக்கோஷ்டியூர்
அருள்மிகு சவுமிய நாராயணப்பெருமாள் திருக்கோயில், திருக்கோஷ்டியூர் – 630 211, சிவகங்கை மாவட்டம்.
+91- 4577 – 261 122, 94862 – 32362 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | சவுமியநாராயணர் |
தாயார் | – | திருமாமகள் |
தீர்த்தம் | – | தேவபுஷ்கரிணி, மகாமக தீர்த்தம் |
பழமை | – | 1000-2000 வருடங்களுக்கு முன் |
புராணப் பெயர் | – | திருக்கோட்டியூர் |
ஊர் | – | திருக்கோஷ்டியூர் |
மாவட்டம் | – | சிவகங்கை |
மாநிலம் | – | தமிழ்நாடு |
பிரம்மாவிடம் வரம் பெற்ற இரண்யன் எனும் அசுரன் தேவர்களைத் தொடர்ந்து துன்புறுத்தினான். கலங்கிய தேவர்கள் தங்களை காக்கும்படி மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். அவர், இரண்யனை வதம் செய்வது குறித்து ஆலோசனை நடத்த தேவர்களை அழைத்தார். இரணியன் பிரம்மாவிடம், தன்னை தெய்வங்களோ, தேவர்களோ, மனிதர்களோ, மிருகங்களோ அழிக்க இயலாத அளவுக்கு வரம் பெற்றிருந்தான்.
எனவே, ஒரு வித்தியாசமான உருவத்தை எடுக்க வேண்டியது பற்றி தீவிரமாக ஆலோசிக்க வேண்டியிருந்தது. ஆனாலும் பயந்த முனிவர்கள், இரண்யனின் தொந்தரவு இல்லாத இடத்தில் ஆலோசிக்க வேண்டும் என்றனர். சுவாமியும் அவர்களது கோரிக்கையை ஏற்றார்.
அருள்மிகு ஸ்ரீமூர்த்தி திருக்கோயில், திருசாளக்கிராமம்
அருள்மிகு ஸ்ரீமூர்த்தி திருக்கோயில், திருச்சாளக்கிராமம், நேப்பாளம் (சாளக்கிராமம்)
மூலவர் | – | ஸ்ரீமூர்த்தி – (முக்திநாத் / முக்தி நாராயணன்) (ஸ்வயம்பூ மூர்த்தி) |
கண்டவர்கள் | – | ப்ரம்மா, ருத்ரர், கண்டகி |
தாயார் | – | ஸ்ரீதேவி நாச்சியார் |
விமானம் | – | கனக விமானம் |
தீர்த்தம் | – | ஸ்ரீசக்ர தீர்த்தம் |
பாடியவர்கள்:
பெரியாழ்வார் – 2பாசுரங்கள்
திருமங்கையாழ்வார் 10பாசுரங்கள்.
சாளக்கிராம க்ஷேத்ரம் – கண்டகி நதிப்படுகையில், கணக்கிலடங்கா சாளக்கிராம சிலைகள் விளங்குகின்றன. பாக்கியமுள்ள பக்தர்கள் அங்கு சென்று சாளக்கிராம மூர்த்திகளை, தாங்களே சேகரித்து எடுத்து வருகின்றனர். பக்தர்கள் வழிபாடு செய்ய எம்பெருமான் சாளக்கிராம மூர்த்தியாக விளங்கி அருள்பாலித்து வருகிறார்.
அர்ச்சனை செய்யப்படும் மூர்த்திகளில்(விக்ரகம்) புனிதம் ஏற்பட முதலில் பிரதிஷ்டை செய்யப்படவேண்டும். இது மிகவும் அவசியம். ஆராதனை செய்பவர்கள் ஆசார்யர்களிடம் இதற்கான தீக்ஷை பெறவேண்டும். தீக்ஷை பெற்றவர்கள்தான் மூர்த்தியை ஆராதனை செய்யத் தகுதிபெற்றவர்கள்.
ஆனால் எம்பெருமானின் புனிதமுள்ள சாளக்கிராம மூர்த்தியை ஆராதிக்க பிரதிஷ்டையோ, இதற்கான விசேஷ தீக்ஷையோ பெற வேண்டிய அவசியம் இல்லை. ஆசார்ய அனுக்கிரகமும், மேலும் ஆசார்யன் மூலம் ஆராதனை மந்திரங்களை உபதேசம் பெற்று, ஆராதனை செய்யலாம்.
சாளக்கிராம மூர்த்திகள், இமாலயத்திலிருந்து (சாளக் கிராம சிகரம்) உற்பத்தியாகும் கண்டகி நதிப்படுகையில் சக்ர தீர்த்தம் என்ற புனிதமான இடத்தில் அதிக அளவில் கிடைக்கின்றன. இதன் அளவு சிறிய மிளகிலிருந்து பெரிய மாம்பழம் வரை பெரிதாகவும், அபூர்வமான சில சாளக்கிராம மூர்த்திகளில் ஸ்வர்ணரேகையும் இருக்கும். இதனால் அந்த நதி அங்கு “ஹிரண்யவதி” என்றும் கூறப்படுகிறது.
சில சாளக்கிராம மூர்த்திகள் அபூர்வமாக, வெள்ளை, நீலம், சிகப்பு வர்ணங்கள் உள்ளதாகவும் இருக்கும். இவைகளின் மதிப்பு நிர்ணயிக்க முடியாதது. இப்படிப்பட்ட சாளக்கிராம மூர்த்திகள் தெய்வ சங்கல்பம் இருந்தால்தான் கிடைக்கும்.