Category Archives: சிவ ஆலயங்கள்

முக்தீஸ்வரர் திருக்கோயில், தெப்பக்குளம், மதுரை

அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயில், தெப்பக்குளம், மதுரை.

+91- 452-234 9868, 234 4360

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் முக்தீஸ்வரர்
அம்மன் மரகதவல்லி
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் தெப்பக்குளம்
ஆகமம் சிவாகமம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் தெப்பக்குளம், மதுரை
மாவட்டம் மதுரை
மாநிலம் தமிழ்நாடு

ஒருமுறை துர்வாச முனிவர், சிவபூஜை செய்த மலர் மாலையை இந்திரனிடம் கொடுத்தார். அவன் அம்மலரை தனது வாகனமான ஐராவதத்தின் மீது வைக்க, ஐராவதம் அதைக் கீழே வீசியது. புனிதம் மிக்க மலரை இந்திரனும், ஐராவதமும் அலட்சியப்படுத்தியதால் கோபம் கொண்ட முனிவர், சாபமிட்டார். இந்திரன் தேவதலைவன் பதவியை இழந்தான், ஐராவதம் காட்டு யானையாக வாழ்ந்தது. சாபத்தின் பலனை அனுபவித்த ஐராவதம், வில்வவனமாக இருந்த இங்கு சிவனைப் பூஜித்தது. மனம் இரங்கிய சிவன், அதற்கு காட்சி தந்து முக்தி கொடுத்தார். பிற்காலத்தில், இவ்விடத்தில் திருமலைநாயக்கரின் அண்ணன் முத்துவீரப்ப நாயக்கர் ஆலயம் எழுப்பினார்.

முக்தீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்

அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டம்.

காலை 7.30 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் முக்தீஸ்வரர்
தீர்த்தம் சிவதீர்த்தம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் காஞ்சிபுரம்
மாவட்டம் காஞ்சிபுரம்
மாநிலம் தமிழ்நாடு

காஞ்சியில் ஏகாலியர் குலத்தில் தோன்றியவர் திருக்குறிப்பு தொண்டர். இவர் சிவனடியார்களின் குறிப்பறிந்து செயல்பட்டதால் இந்த பெயர் வந்தது. “அடியார்களது ஆடைகளின் மாசு கழிப்பதாலே தம்முடைய பிறப்பின் மாசு கழியும்என்ற தத்துவத்தை இவர் உணர்ந்தார். சலவைத்தொழிலில் இப்பேர்ப்பட்ட தத்துவம் உள்ளது.

தங்கள் ஊருக்கு வரும் சிவனடியார்களின் துணிகளை வெளுத்து கொடுக்கும் பணியில் ஈடுபட்டார். இவரது பெருமையை இறைவன் உலகறிய செய்ய விரும்பினார். ஒரு நாள் சிவன் கிழிந்த உடையை உடுத்தி கொண்டு விபூதி பூசிய உடலுடன் குளிரில் நடுங்கிக் கொண்டே திருக்குறிப்பு தொண்டரின் இல்லத்திற்கு வந்தார். அவரை வரவேற்று உபசரித்த திருக்குறிப்பு தொண்டர், சிவனடியாரின் அழுக்கடைந்த கந்தல் துணியையும், மெலிந்த உடலையும் கண்டு வருத்தமடைந்து, உடல் இளைத்திருக்க காரணம் கேட்டார். இறைவன் சிரித்தார்.