Category Archives: சிவ ஆலயங்கள்

பூலாநந்தீஸ்வரர் திருக்கோயில், சின்னமனூர்

அருள்மிகு பூலாநந்தீஸ்வரர் திருக்கோயில், சின்னமனூர், தேனி மாவட்டம்.

காலை6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பூலாநந்தீஸ்வரர் (அளவுக்களவானவர்)
அம்மன் சிவகாமி
தல விருட்சம் பூலா மரம்
தீர்த்தம் சுரபி தீர்த்தம்
புராணப் பெயர் அரிகேசநல்லூர்
ஊர் சின்னமனூர்
மாவட்டம் தேனி
மாநிலம் தமிழ்நாடு


சிவபெருமான் பல இடங்களில் சுயம்புவாய் தோன்றுவது போல் சுரபி நதி அருகிலும் சுயம்புவாய் முளைத்துள்ளார். வீரபத்திரர் சாபம் பெற்ற கற்பகதரு இலிங்கத்தின் அருகில் முட்பூலாவாக தோன்றி, பூலாவனமாக ஆகி சிவலிங்கத்திற்கு நிழல் தந்தது. அப்பகுதியை ஆண்ட இராச சிங்க பாண்டியன் சுரபி நதிக்கருகில் தங்கியிருந்தபோது, அவனுக்கு பால் கொடுக்க வரும் இடையன் தினமும் அந்த பூலா மரத்தருகே தடுக்கி விழந்ததனால் கோபம் கொண்டு பூலாமரத்தின் வேரைக் கோடாரியால் வெட்ட ரத்தம் பீறிட்டது. இச்செய்திகேட்டு இராச சிங்கன் அந்த இடம் சென்று உண்மை உணர்ந்தான். அந்த வேரின் அடியில் இருந்த இலிங்கத்தை வணங்கினான். உடனே குருதி மாறி விசுவரூபமெடுத்த இறைவன், மன்னனின் வேண்டுகோளுக்காக,”அளவுக்கு அளவாகக்குறுகி நின்றருளினார். ஆனந்தம் பொங்க இலிங்க வடிவான இறைவனை மன்னன் கட்டித் தழுவினான்.

பொன்னம்பலநாதர் என்ற சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், நல்லாத்தூர்

அருள்மிகு பொன்னம்பலநாதர் என்ற சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், நல்லாத்தூர், கடலூர் மாவட்டம்.

+91- 413 – 269 9422, 94427 86351

காலை 7 மணி முதல் 11.30 மணி வரை மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பொன்னம்பலநாதர் என்ற சொர்ணபுரீஸ்வரர்
அம்மன் திரிபுர சுந்தரி
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் நல்லாத்தூர்
மாவட்டம் கடலூர்
மாநிலம் தமிழ்நாடு

திருநாவுக்கரசர் பாடிய வைப்புத்தலம்.

பழமையான கோயில் என்பதால் இத்தலத்தின் வரலாறை தெளிவாகச் சொல்ல முடியவில்லை. ஆனால், கோயிலின் அமைப்பு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. பலகணி வழியாகப் பார்க்கின்ற சிவலிங்கங்கள், அக்னியின் சொரூபம் என்று சொல்லப்படுகிறது. இவரை நேரடியாக தரிசிப்பதற்கான உடல் வலிமை பக்தனுக்கு இருக்காது. எனவே பலகணி வழியாக வழிபாடு செய்தால், அவரவர் உடல் நிலைக்கு தகுந்தாற் போல் தீக்கதிர்கள் இறைவனிடமிருந்து வெளிப்பட்டு உடல் பலமும் மனபலமும் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.