Category Archives: சிவ ஆலயங்கள்

சிவகாமி அம்பாள் உடனுறை வைத்தியநாதசுவாமி திருக்கோயில், மடவார்வளாகம்

அருள்மிகு சிவகாமி அம்பாள் உடனுறை வைத்தியநாதசுவாமி திருக்கோயில், மடவார்வளாகம், விருதுநகர் மாவட்டம்.

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் வைத்தியநாதசுவாமி
அம்மன் சிவகாமி அம்பாள்
ஊர் மடவார்வளாகம்
மாவட்டம் விருதுநகர்
மாநிலம் தமிழ்நாடு

முன் காலத்தில் புனல்வேலி என்னும் பகுதியில் ஏழை சிவபக்தன் தன் மனைவியுடன் நாள் தோறும் சிறப்பாக சிவ பூஜை செய்து வந்தான். இவனது மனைவிக்கு பேறுகால நேரம் வந்ததும் தன் தாய்க்கு சொல்லி அனுப்பினாள். ஆனால் பத்து மாதம் முடிவடைந்ததும் தாய் வரவில்லை. எனவே தானே தன் தாய் இருக்குமிடத்திற்கு சென்றாள். சிறிது தூரம் சென்றதும் அவளுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. சிவ பக்தையான அவள்,”ஈசனே. காப்பாற்றுஎன அழுது புலம்பினாள். இந்த அழு குரலைக்கேட்ட, தாயும் தந்தையுமான ஈசன் கர்ப்பிணியின் தாயாக மாறி, சிறிதும் வலி ஏற்படாமல் சிறப்பாக பிரசவம் பார்த்தார். அப்போது அந்த பெண்ணுக்கு தாகம் ஏற்பட்டது. தாகத்திற்கு தண்ணீர் கொடுக்க, தன் விரல் நுனியால் பூமியை கீற, அதிலிருந்து நீர் பீறிட்டு வந்தது. இந்த நீரே உனக்கு மருந்து என்று கூறியவுடன் அந்தப்பெண்ணும் நீரை பருகினாள். இது வரை தனக்கு பிரசவம் பார்த்தது வைத்தியநாதர் தான் என்பது அந்தப்பெண்ணுக்கு தெரியாது. இந்த சம்பவம் எல்லாம் முடிந்த பின் அந்த பெண்ணின் உண்மையான தாய் வந்து சேர்ந்தாள். அதற்குள் பிரசவம் முடிந்து விட்டதை ஆச்சரியத்துடன் தன் மகளிடம் கேட்ட போது, வைத்தியநாதப்பெருமான், அன்னை சிவகாமியுடன் விடை வாகனத்தில் காட்சி தந்தார். அத்துடன், “பெண்ணே உனது தவத்தினால்தான் யாமே உனக்க பிரசவம் பார்த்தோம். இந்த தீர்த்தம் உனது தாகம் தீர்த்து காயம் தீர்க்கவும் பயன் பட்டதால் இன்று முதல் இந்த தீர்த்தம் காயக்குடி ஆறுஎன அழைக்கப்படும். இதில் மூழ்கி எழுந்து என்னை வழிபடுபவர்கள் எல்லா பயமும் நீங்கி சுகபோக வாழ்வை அடைவர்என்று அருளினார்.

சித்தேஸ்வரர் திருக்கோயில், கஞ்சமலை

அருள்மிகு சித்தேஸ்வரர் திருக்கோயில், கஞ்சமலை, சேலம் மாவட்டம்.

+91 – 427- 249 1389

காலை 6.30 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சித்தேஸ்வரர்
தீர்த்தம் காந்ததீர்த்த குளம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் கஞ்சமலை
மாவட்டம் சேலம்
மாநிலம் தமிழ்நாடு

அனுமான் சஞ்சீவி மலையுடன், தென் இலங்கைக்கு செல்லும் வழியில், அதன் ஒரு பகுதி மிகமிக குறைந்த அளவில் கீழே விழுந்ததாகவும், அதுவே கஞ்சமலை ஆயிற்று என்றும் சொல்வர். குறைந்து விழுந்ததால் கஞ்சம்என்ற பொருளிலும் இந்த மலைக்கு பெயர் வந்திருக்கலாம். “கஞ்சம்என்றால் தாமரைஎனப் பொருள். மேலிருந்து பார்த்தால் தாமரை போன்ற தோற்றமுடையதால் இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம்.

காலங்கி சித்தர் என்பவர் பழநியில் நவபாஷாண முருகன் சிலையை பிரதிஷ்டை செய்த போகரின் குரு ஆவார். திருமந்திரம் எழுதிய திருமூலரின் மரபில் வந்தவர். கூடுவிட்டு கூடு பாய்வது உள்ளிட்ட அட்டமாசித்திகளை அறிந்தவர். ஏழு மடங்களை ஸ்தாபித்தவர். காலாங்கி சித்தரும், அவருடைய குரு திருமூலரும் மலைப்பகுதிகளில் மூலிகை தேடி அலைந்தனர்.