முக்தி கிடைக்க

முக்தி கிடைக்க

முக்தி பெற வேண்டும் என்பதே மனிதர்களாகப் பிறந்தவர்களின் ஒரே ஆசை. ஆனால் முக்தி எப்படி இருக்கும் என்பது யாருக்கும் தெரியாது. எப்படி அடைவது என்பது தெரியாது. ஆனால் அடைவது மட்டும் வெகு கடினம் என்று சொல்லக் கேள்வி.

முக்தி அடையத் தகுதிகள்:

திருவாரூரில் பிறக்கவேண்டும். சிதம்பரத்தில் நடராஜரைத் தரிசிக்கவேண்டும். திருவண்ணாமலையை (அண்ணா மலையை) நினைக்கவேண்டும். காசியில் இறக்கவேண்டும்.

பிறப்பது, இறப்பது நம்மிடம் இல்லை. சிதம்பரம் வழியாக 50 தடவை சென்றாலும், இறங்கி, நடராஜரைப் பார்க்க இயலாது; அவ்வளவு வேலை. அட; சரிதான்; அண்ணாமலையையாவது நினைக்கலாமென்றால் முடியவில்லை. நமக்கு ஆயிரத்தெட்டு கவலைகள். ஆனால் முக்தி மட்டும் வேண்டும்.

ஆன்மிகவாதிகள் முக்தியைப் பற்றி என்னென்னவோ கூறுவார்கள். சாமானியனுக்குப் புரியாது. அவர்கள் சொல்லும் வழியில் செல்லுவதும் முடியாது. முக்தி எப்படிக் கிட்டும்?

கீழுள்ள ஆலயங்களுக்குச் சென்று, “அடுத்த பிறவி எனக்கு வேண்டாம்என்று மனமுருக வேண்டிக்கொண்டால் முக்தி கிட்டுமென பக்தர்கள் கூறுகின்றனர்.

ஆத்மநாதசுவாமி திருப்பெருந்துறை சிதம்பரம் கடலூர்
ஏகாம்பரநாதர் காஞ்சிபுரம் காஞ்சிபுரம்
பரமபதநாதர் பரமேஸ்வர விண்ணகரம் காஞ்சிபுரம்
அற்புத நாராயணன் திருக்கடித்தானம் கோட்டயம்
அவிநாசியப்பர் அவிநாசி கோயம்புத்தூர்
பட்டீஸ்வரர் பேரூர் கோயம்புத்தூர்
பாலசுப்ரமணியன் சிறுவாபுரி சென்னை
விஸ்வநாதர் கண்ணாபட்டி திண்டுக்கல்
அரங்கநாதப் பெருமாள் ஸ்ரீரங்கம் திருச்சி
அழகிய நம்பிராயர் திருக்குறுங்குடி திருநெல்வேலி
அருணாச்சலேஸ்வரர் திருவண்ணாமலை திருவண்ணாமலை
முக்தீஸ்வரர் சிதலப்பதி திருவாரூர்
சிவலோகத்தியாகர் ஆச்சாள்புரம் நாகப்பட்டினம்
முல்லைவன நாதர் திருமுல்லைவாசல் நாகப்பட்டினம்
காயாரோகணேஸ்வரர் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
காளமேகப்பெருமாள் திருமோகூர் மதுரை
வாலீஸ்வரர் கோலியனூர் விழுப்புரம்
இலட்சுமி நரசிம்மர் பூவரசன்குப்பம் விழுப்புரம்

2 Responses to முக்தி கிடைக்க

  1. ஹாட்லிங்க்ஸ்இன் இணையதளத்தில் தங்கள் பதிவுகளை இணைத்து வரும் தங்களுக்கு மிக்க நன்றி. hotlinksin.com முகப்பு பகுதி ஆங்கிலத்திற்கு என ஒதுக்கப்பட்டுள்ளதால், ஹாட்லிங்க்ஸ்இன் தமிழ் பகுதியான, http://tamil.hotlinksin.com/ இணையதளத்தில் சென்று பதிவு செய்து பதிவுகளை இணைத்திடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

  2. அன்புடையீர்,
    மிக்க நன்றி. தாங்கள் தந்துள்ள பாஸ்வோர்ட் 1bb5d096 என்பதை மற்ற என்ன செய்யவேண்டும். உதவுங்களேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *