குடும்பம் செழிக்க

குடும்பம் செழிக்க

தேவையற்ற பொருட்கள்மீது ஆசை கொள்ளாதே! வரவுக்கு மீறி செலவு செய்யாதே!

தேவையற்ற செலவுகளைச் சுருக்குங்கள். பொருள் சேர்க்க சிறந்த வழி சிக்கனம்தான். நீங்கள் நீண்டகால பண சேமிப்புத் திட்டத்தில் சேருவதைவிட, தினமும் சிறுதொகை சிக்கனம் பிடிப்பதே பெரிய பலன் தரக்கூடியதாகும்.

முதலில் நீங்கள் பணத்தை எந்த வழியில் செலவு செய்கிறீர்கள் என்பதைக் கவனித்து தவிர்க்க வேண்டியதை தவிருங்கள். பிறகு தானாக செல்வம் பெருகத் தொடங்கும். செல்போன் அழைப்புகளை தேவையான நேரத்தில் மட்டும் பேசுங்கள். கண்டிப்பாக குறிபிட்ட தொகை மிஞ்சும். ஒரு நாளில் பலமுறை காபி குடிப்பவராக இருந்தால் பிளாஸ்க்கில் எடுத்துச் சென்று பயன்படுத்துங்கள். வங்கி சேமிப்புத் திட்டங்களில் சேர்ந்து பணத்தை சேமிப்பது நல்ல வழி.

சேமிப்பு பழக்கத்தை கடைபிடிப்பதன் முலம் உங்களின் கடனைத் தீர்க்கும் நோக்கம் எளிமையாக நிறைவேறும். வீட்டுச் செலவுக் கணக்கை எழுதுங்கள். பணத்தைச் சேமிக்க இதைவிட சிறந்த வழியில்லை. பணம் வரும் வழியும், போகும் வழியும் தெரிந்தால்தான் `பணம் எப்படித்தான் காலியாகுதோ’ என்று புலம்பும் நிலைமையைத் தவிர்க்க முடியும்.

வீட்டு மளிகைச் சாமான்களை மொத்தமாக வாங்கி விடுவதும் பணத்தைச் சேமிக்கும் சிறந்த வழியே. மொத்தமாக வாங்கிய சமையல் பொருட்களையும் தேவைக்கு ஏற்ப பக்குவமாக பயன்படுத்த வேண்டும். தேவைக்கு அதிகமாக சமைத்து வீணாக்கக் கூடாது. அடிக்கடி ஓட்டலில் சாப்பிடுவது, உங்கள் பணத்தைக் காலியாக்கி விடும். வீட்டிலேயே சமைத்து சாப்பிடுவது பணத்தைச் சேமிக்கும் சிறந்த சக்தியாகும். இதனால் உடல்நலமும் பாதுகாக்கப்படும். ஏமாறாமல் இருப்பதுவும் சேமிப்பு வழிகளில் ஒன்றாகும். இப்போதெல்லாம் எங்கு பார்த்தாலும் சலுகை அறிவிப்புகள் வருவதை பார்க்கலாம். ஒன்று எடுத்தால் ஒன்று இலவசம், 50 சதவீதம் தள்ளுபடி என்று கவர்ச்சி அறிவிப்புகள் வருகின்றன. இவையெல்லாம் வியாபார தந்திரம் தான்.

கவர்ச்சிகரமான அறிவிப்புகளால் உங்கள் சிந்தனை மழுங்கடிக்கபடுகிறது என்பதை மறந்துவிடாதீர்கள். ஆழமாக சிந்தித்து பார்த்தால் உண்மை விலை, தள்ளுபடி விலையை விடக் குறைவாக இருக்கும். ஏற்கனவே பயன்படுத்தபட்ட பொருட்களை செகட் ஹேண்டாக வாங்குவது பணத்தை மிச்சம் பிடிக்கும் சிறந்த வழியாகும்.

வாங்கிய ஓராண்டு காலத்திற்குள்ளாக புதிய காரின் விலை முன்றில் ஒரு பங்கு குறைந்து விடுகிறது. தரமும் தாழ்ந்து போவதில்லை. அப்படி இருக்கும்போது இரண்டாம் தரமாக வாங்கி பயன்படுத்துவதில் என்ன பிழையிருக்கிறது? போதிய அளவு சோதனை செய்து பார்த்து வாங்கி பயன்படுத்தினால் நமக்குத்தானே லாபம். எலக்ட்ரானிக் சாதனங்களையும், வீட்டு உபயோக பொருட்களையும் கூட இந்தப்பட்டியலில் சேர்க்கலாம். மேற்படிப்பை தொடர்கிறவர்கள் தங்கள் பொருளாதார நிலையை உத்தேசித்து புதிய புத்தகங்களை விலைக்கு வாங்கிப் படிப்பதை விட, பொதுநுலகத்தைப் பயன்படுத்தினால் செலவு கட்டுப்படும். ஆனால் அத்தியாவசியம் என்னும் புத்தகங்களை மட்டும் விலை கொடுத்து சொந்தமாக வாங்கி விடுவது நல்லது.

வீணாக்காமல் பயன்படுத்துவதும் ஒரு சேமிப்புதான். நாம் வாழ்க்கை முழுவதும் நுகர்வோராகவே இருக்கிறோம். மற்றவைகளை அனுபவிப்பதன் முலமே நமது வாழ்க்கை நகர்கிறது. வாழ்வில் சிலவற்றை வீணாக்காமல் பயன்படுத்த வேண்டும். சிலவற்றைக் குறைவாக பயன்படுத்த வேண்டும். இன்னும் சிலவற்றை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இந்த மூன்றையும் சரியாகச் செய்வதுதான் உண்மையான சேமிப்பாகும்.

மின்விளக்கு, விசிறி, .சி. போன்ற சாதனங்களை தேவைக்கேற்ப குறைவாக பயன்படுத்துவதன் முலம் நிறைய சேமிக்கலாம். மற்றவர்களுக்காக பகட்டாக காட்டிக் கொள்ளவும், அலங்காரத்திற்காகவும் கவர்ச்சிக்காகவும் பொருட்களை வாங்காமல் இருந்தால், அதுவும் சேமிப்புதான்.

அதிர்ஷ்டமானாலும் நிதானமாகவே வரும். கைக்கு மெய்யாய் கிடைப்பதே மேல். எதற்கும் ஓர் அளவுண்டு, எவர்க்கும் ஓர் அளவுண்டு. பெற்றோரைத் திருப்தி செய்ய வேண்டும். தவறான செலவு சொத்தை அழிக்கும். நல்ல செலவை அறிவோடு செய்ய ஒருவன் கற்றுக்கொண்டால், அந்தச் செலவு சொத்தைச் சேர்க்கும். தன்னைப் போல் மற்றவர்களிருப்பார்கள் என்பதை மறந்து விடாதே. தெய்வத்திடம் கேட்கும் மனப்பான்மை தவறானால், கேட்பது தவறு.”

 

சிக்கனம் என்னும் சொல்லிலேயே கெளரவம் நிறைந்து இருக்கிறது. இதனால், அத்தியாவசியத் தேவைகளைத் தவிர மற்றவற்றை வேண்டாம் என்று ஒதுக்கித் தள்ளும் மனோபாவம் வளர்ந்து மனிதனின் குணநலன்களை ஊன்று கோலாகிறது. இதுவும் தவிர பண்பட்ட மனத்தையும் அது உருவாக்குகிறது. இன்றைக்கும், நாளைக்கும் பாதுகாப்பு அளிக்கும் பொருளாதாரத் திட்டம்தான் சிக்கனம். செல்வம் உழைப்பால் சேருகிறது , சேமிப்பால் காப்பாற்றப்படுகிறது. விடாமுயற்சியால் அது வளர்க்கப்படுகிறது. சிக்கன உணர்வு, பிறவியில் தோன்றும் ஒரு குணம் அல்ல. அனுபவத்தாலும்,உதாரணங்களாலும் முன் யோசனையாலும் வளர்க்கப்படும் ஒன்றுதான் அது. மனிதன் புத்திசாலியாக சிந்தனையாளனாக மாறும் போதுதான் அவன் சிக்கனத்தைக் கடைப்பிடிக்கிறான். ஒருவன் எவ்வளவு செலவழித்தான், எப்படிச் செலவழித்தான் என்பதைக் கொண்டு தான் அவனது தகுதி நிர்ணயிக்கப்படுகிறது.

வித்யாராணி

இப்படியெல்லாம் சேமித்தால் குடும்பம் செழிக்கும்.

இதோடு கீழ்கண்ட ஆலயங்களுக்கும் சென்றூ வாருங்கள்(சிக்கனமாக!)

மலையாள மகாலட்சுமி

பள்ளிப்புரம்

ஆலப்புழை

அருங்கரையம்மன் சின்னதாராபுரம் கரூர்

மகாலட்சுமி

மேட்டு மகாதானபுரம்

கரூர்

ஆதிகாமாட்சி காஞ்சிபுரம் காஞ்சிபுரம்

மாரியம்மன்

கொழுமம்

கோயம்புத்தூர்

தண்டுமாரியம்மன்

கோயம்புத்தூர்

கோயம்புத்தூர்

இலட்சுமி நரசிம்மர்

தாளக்கரை

கோயம்புத்தூர்
திருப்பதி வெங்கடாசலபதி மேல்திருப்பதி சித்தூர்
இலட்சுமி நாராயண பெருமாள் வேப்பஞ்சேரி சித்தூர்
திருத்தளிநாதர் திருப்புத்தூர் சிவகங்கை

செல்வலலிதாம்பிகை அம்மன்

செல்லப்பிராட்டி

செஞ்சி

அட்டலட்சுமி

பெசன்ட் நகர்சென்னை

சென்னை

இலட்சுமி கோபாலர் ஏத்தாப்பூர் சேலம்
இலட்சுமிநாராயணர் வரகூர் தஞ்சாவூர்
மாற்றுரைவரதீஸ்வரர் திருவாசி திருச்சி
லட்சுமிநாராயணப்பெருமாள் அம்பாசமுத்திரம் திருநெல்வேலி
சொரிமுத்து அய்யனார் காரையார் திருநெல்வேலி

கோட்டைமாரியம்மன்

திருப்பூர்

திருப்பூர்

அனந்த பத்மநாபசுவாமி திருவனந்தபுரம் திருவனந்தபுரம்
பதினெட்டுக்கை(அஷ்டதசபுஜ) மகாலட்சுமி துர்க்கை குறிச்சி புதுக்கோட்டை
அழகிய சாந்த மணவாளப் பெருமாள் அர்ஜுனாபுரம், வத்திராயிருப்பு விருதுநகர்

லட்சுமி நாராயணி

திருமலைக்கோடி (ஸ்ரீபுரம்)

வேலூர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *