அமணலிங்கேஸ்வரர் திருக்கோயில், தளி – திருமூர்த்தி மலை
அருள்மிகு அமணலிங்கேஸ்வரர் திருக்கோயில், தளி – திருமூர்த்தி மலை, உடுமலைப்பேட்டை, கோயம்புத்தூர் மாவட்டம்.
+91-4252 – 265 440
காலை 6.30 மணியிலிருந்து மாலை 6.30 வரை தொடர்ச்சியாகக் கோயில் திறந்திருக்கும்.
மூலவர் | – | பிரம்மா,திருமால்,சிவன் (மும்மூர்த்தி,திருமூர்த்தி) |
உற்சவர் | – | பிரம்மா,திருமால்,சிவன் |
தல விருட்சம் | – | அரச மரம் |
தீர்த்தம் | – | தோணி ஆறு |
பழமை | – | 1000-2000 வருடங்களுக்கு முன் |
ஊர் | – | தளி – திருமூர்த்தி மலை |
மாவட்டம் | – | கோயம்புத்தூர் |
மாநிலம் | – | தமிழ்நாடு |
எல்லாம் வல்ல இறைவன் உறைகின்ற திருத்தலங்களில் இந்த திருமூர்த்தி மலை மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இத்தலத்தில் இறைவன் குழந்தை வடிவில் அருள்பாலிப்பதாக ஐதீகம். எனவே கேட்டதெல்லாம் கிடைக்கும். அகத்திய முனிவர் இறைவனின் திருமணக்கோலத்தை பொதிய மலையில் கண்டு களித்ததை மீண்டும் ஒரு முறை காண வேண்டி அதற்கான இடத்தை இறைவன் குறிப்பால் உணர்த்திய இடமே திருமூரத்தி மலை.
ஐராவதேஸ்வரர் திருக்கோயில், தாராசுரம்
அருள்மிகு ஐராவதேஸ்வரர் திருக்கோயில், தாராசுரம், தஞ்சை மாவட்டம்.
இறைவன் |
ஐராவதேஸ்வரர் |
இறைவி |
தேவநாயகி அம்பாள் |
தல விருட்சம் | வில்வமரம். |
கும்பகோணத்திலிருந்து தஞ்சை செல்லும் வழியில் அரசலாற்றைக் கடந்தால் தெற்கே தாராசுரம் உள்ளது. இக்கோயில் மிகச்சிறந்த கலைவளம் கொண்ட கோயிலாகும். இங்குள்ள சிற்பங்கள் உயிருடன் நம்முடன் கொஞ்சுபவை.