Monthly Archives: February 2012

அருள்மிகு சேர்மன் அருணாசல சுவாமி, ஏரல்

அருள்மிகு சேர்மன் அருணாசல சுவாமி, ஏரல், தூத்துக்குடி மாவட்டம்.

+91- 4630-271 281 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சேர்மன் அருணாசல சுவாமி
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் ஏரல்
மாவட்டம் தூத்துக்குடி
மாநிலம் தமிழ்நாடு

சேர்மன் அருணாசல சுவாமிகள், திருச்செந்தூர் அருகேயுள்ள மேலப்புதுக்குடியில் ராமசாமிசிவனனைந்த அம்மையாருக்கு 1880, அக்டோபர் 2ல் அவதரித்தார். இவரது பெற்றோர், பல கலைகளை சொல்லிக் கொடுக்க ஏற்பாடு செய்தார்கள். அனைத்து கலைகளையும் கற்ற சுவாமிகள், ஏரல் என்ற ஊருக்கு வந்து மவுன விரதம் இருந்து பக்தி யோகத்தை கடைப்பிடித்தார். அவரைக்காண வந்த பொதுமக்களுக்கும், நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஆறுதல் கூறி, அவர்களது பிரச்னைகளை தீர்த்து வந்தார். இவரது நீதியையும், நேர்மையையும், திறமையையும் கண்ட அப்போதைய ஆங்கில ஆட்சியாளர்கள், இவரை ஏரல் பேரூராட்சியின் சேர்மனாகப் பதவி ஏற்கும்படி வேண்டினார்கள். 1906, செப்டம்பர் 5ல் சேர்மனாக பதவி ஏற்றார். 1908, ஜூலை 27 வரை சேர்மனாக பணியாற்றிய அவர் சேர்மன் அருணாசலம்என்ற பெயரைப் பெற்றார். தனது 28வயது வரையிலும் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஒரு நாள் இவர் தனது சகோதரர் கருத்தப் பாண்டியனை அழைத்து அவருக்கு நல்லாசி கூறி, “தம்பி. நான் 1908, ஜூலை 28 ஆடி அமாவாசை பகல் 12 மணிக்கு இறைவன் திருவடி சேருவேன். ஏரலுக்கு தென்மேற்கில் தாமிர பரணி ஆற்றின் வடகரை ஓரமாக நிற்கும் ஆலமரத்தின் அருகில் என்னை சமாதியில் வைத்து மலர்களும் மண்ணும் போட்டு மூடுங்கள். அப்போது மேலே கருடன் வட்டமிடும்என்று கூறினார். அதன்படியே அவர் இறைவனடி சேர்ந்தார். அவர் கூறியபடியே அவரது தம்பியும் செய்தார். அன்று முதல் ஏரல் சேர்மன் அருணாசல சுவாமிகள் தன்னை நாடி வரும் பக்தர்களின் குறைகளை தீர்த்து அருளாசி வழங்கி வருகிறார். குறிப்பாக மன நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து தங்கி குணமடைந்து செல்கிறார்கள். பிரசாதமாக கோயில் திருமண்ணும் தண்ணீரும் தருகிறார்கள். தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ளது ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோயில். நவ திருப்பதிகளும், திருச்செந்தூர் தலமும் அருகில் உள்ளன.

அருள்மிகு பிரம்மன் திருக்கோயில், கும்பகோணம்

அருள்மிகு பிரம்மன் திருக்கோயில், கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம்.

+91- 94865 68160 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 8 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பிரம்மன்
அம்மன் சரஸ்வதி, காயத்ரி
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் கும்பகோணம்
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு

படைக்கும் தொழில் தன்னிடம் மட்டுமே உள்ளது; சிவன், விஷ்ணுவிடம் இந்த சக்தி இல்லை என்பது குறித்து பிரம்மனுக்கு கர்வம் ஏற்பட்டது. இதையறிந்த விஷ்ணு, ஒரு பூதத்தை பிரம்மனிடம் அனுப்பினார். பூதத்தை பார்த்து பயந்த பிரம்மா, விஷ்ணுவிடம் சென்று, தான் படைக்காத பூதம் ஒன்று தன்னை பயமுறுத்துவதாகவும், அதனிடமிருந்து தன்னை காப்பாற்றும்படியும் வேண்டினார். அதற்கு விஷ்ணு,”உனது கர்வத்தை அடக்குவதற்காகவே இந்த பூதத்தை அனுப்பினேன். உனக்கு ஏற்பட்ட அகங்காரத்தினால் படைக்கும் தொழில் மறந்து போகும்என்று சாபமிட்டார். வருந்திய பிரம்மா, விஷ்ணுவிடம் சாப விமோசனம் வேண்டினார். அதற்கு விஷ்ணு,”பூமியில் சென்று தவம் செய்தால் விமோசனம் கிடைக்கும்என்றார். பிரம்மனும் பிரளய காலத்திலும் அழியாத தலமான கும்பகோணம் வந்து தவம் செய்தார். யாகத்திற்கு முப்பத்து முக்கோடி தேவர்களும் முனிவர்களும் சேவை செய்தனர். அப்போது யாக குண்டத்தில் இருந்து, மகாலட்சுமி சமேதராக விஷ்ணு தோன்றினார். சாபவிமோசனம் கொடுத்து வேதங்களை மீண்டும் சொல்லித்தந்து வேத நாராயணன்என்று பெயர் பெற்றார். தாயார் வேதவல்லிஎனப்பட்டாள். யாகம் முடிந்தவுடன் இதில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் அவபிருத ஸ்நானம்செய்வதற்காக விஷ்ணு தன் கதாயுதத்தால் பூமியை பிளந்து ஒரு நதியை உருவாக்கினார். இந்த நதி ஹரி சொல்லாறுஎன்று அழைக்கப்பட்டது. இது காலப்போக்கில் மருவி அரசலாறு எனப்பட்டது.