Monthly Archives: November 2011

இளமையாக்கினார் கோயில், சிதம்பரம்

அருள்மிகு இளமையாக்கினார் கோயில், சிதம்பரம், கடலூர் மாவட்டம்.

+91 4144 – 220 500, 94426 12650

காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் திருப்புலீஸ்வரர்
அம்மன் திரிபுரசுந்தரி
தல விருட்சம் தில்லை மரம்
தீர்த்தம் இளமை தீர்த்தம்
ஆகமம் காமீகம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருப்புலீஸ்வரம்
ஊர் சிதம்பரம்
மாவட்டம் கடலூர்
மாநிலம் தமிழ்நாடு

சிவபெருமானின் நாட்டிய தரிசனம் காண விரும்பிய வியாக்ரபாதர், சிதம்பரம் வந்தார். இங்கிருந்த தீர்த்தக்கரையில் ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து, குடில் அமைத்து தவமிருந்தார். வியாக்ரபாதர், சிவனருளால் புலிக்கால் பெற்ற முனிவராவார். இவர் பூஜித்ததால் சிவனுக்கு திருப்புலீஸ்வரர்என்றும், சிதம்பரத்திற்கு திருப்புலீஸ்வரம்என்றும் பெயர் ஏற்பட்டது.

காயத்ரி லிங்கேஸ்வரர் திருக்கோயில், பவானி

அருள்மிகு காயத்ரி லிங்கேஸ்வரர் திருக்கோயில், பவானி, ஈரோடு மாவட்டம்.

+91-4256-230 192, 98432 48588

காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் காயத்ரி லிங்கேஸ்வரர்
தல விருட்சம் இலந்தை
ஊர் பவானி
மாவட்டம் ஈரோடு
மாநிலம் தமிழ்நாடு

இத்தலத்தின் தல விருட்சமான இலந்தை மரத்தின் அடியில்தான் பராசர முனிவர் தனது ஆசிரமத்தை நிறுவி, தினமும் இறைவனை வணங்கி வந்ததாக சொல்லப்படுகிறது. அவர் சங்மேஸ்வரரை வணங்குவதற்கு முன், சற்று தூரத்திலுள்ள காவிரியாற்று ஓரம் சென்று தினமும் நித்யகர்ம அனுஷ்டானத்தை தொடர்ந்து செய்து வந்தாராம். அதுபோல் அவர் தொடர்ந்து அந்த இடத்தில் காயத்ரி மந்திரத்தை தொடர்ந்து 12 ஆயிரம் கோடி முறை உச்சரித்த காரணத்தால், “காயத்ரி லிங்கேஸ்வரர்அங்கே தானாகவே தோன்றினார்.