Monthly Archives: November 2011

ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், சவுகார்பேட்டை, சென்னை

அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், சவுகார்பேட்டை, சென்னை மாவட்டம்.

+91-44 – 2522 7177, 2535 2933

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் ஏகாம்பரேஸ்வரர்
அம்மன் காமாட்சி
தல விருட்சம் மாமரம்
தீர்த்தம் கம்பாநதி
ஆகமம் காமிகம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் சவுகார்பேட்டை, சென்னை
மாவட்டம் திருவள்ளூர்
மாநிலம் தமிழ்நாடு

பல்லாண்டுகளுக்கு முன்பு, காஞ்சிபுரத்தில் கோயில் கொண்டுள்ள ஏகாம்பரேஸ்வரரின் தீவிர பக்தராக ஒருவர் வசித்தார். ஒரு பிரதோஷ தினத்தன்று அவர் கோயிலுக்கு செல்ல எண்ணியபோது, பல தடைகள் ஏற்பட்டது. பணியில் ஏற்பட்ட சிறிய சுணக்கம் காரணமாக அவரது முதலாளியும் கோயிலுக்கு செல்லக்கூடாது என தடுத்தார். பக்தரோ அதை மீறிக் கோயிலுக்கு சென்றார். வழியில் களைப்படைந்த அவர் இத்தலத்தில் சற்றுநேரம் ஓய்வெடுத்தார். அப்போது, சிவன் அம்பாளுடன் காட்சிதந்து, “இனி என்னை வழிபட நெடுதூரம் வரவேண்டாம்; நீ ஓய்வெடுத்த இடத்திலேயே நான் சுயம்புவாக இருக்கிறேன்; என்னை இங்கேயே வழிபடுஎன்றாராம். அதன்பின், இவ்விடத்தில் இக்கோயில் கட்டப்பட்டதென வரலாறு கூறுகிறது.

தர்மேஸ்வரசுவாமி திருக்கோயில், மணிமங்கலம்

அருள்மிகு தர்மேஸ்வரசுவாமி திருக்கோயில், மணிமங்கலம், காஞ்சிபுரம் மாவட்டம்.

+91- 44 – 2717 8157, 98400 24594

காலை 8 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 6 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் தர்மேஸ்வரர்
அம்மன் வேதாம்பிகை
தல விருட்சம் சரக்கொன்றை
தீர்த்தம் சிவபுஷ்கரணி
ஆகமம் சிவாகமம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் வேதமங்கலம்
ஊர் மணிமங்கலம்
மாவட்டம் காஞ்சிபுரம்
மாநிலம் தமிழ்நாடு

முற்காலத்தில் இப்பகுதியை பல்லவ மன்னன் ஒருவன் ஆண்டு வந்தான். சிவபக்தனான அம்மன்னன், தானதர்மங்கள் செய்வதில் சிறந்தவனாகத் திகழ்ந்தான். அவனுக்கு நீண்ட நாட்களாக, சிவாலயம் எழுப்பி வழிபட வேண்டுமென்ற ஆசை இருந்தது. ஆனால், எவ்விடத்தில், எப்படி கோயில் அமைப்பது என அவனுக்குத் தெரியவில்லை.

ஒருசமயம் சிவன், அடியார் வேடத்தில் அவனிடம் சென்றார். தான் பரம ஏழை என்றும், தனக்கு ஏதாவது தர்மம் செய்யும்படியும் வேண்டி நின்றார். மன்னன், அவருக்கு தானம் செய்ய முயன்றான்.