Monthly Archives: November 2011

இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில், மதுரை

அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில், மேலமாசி வீதி, மதுரை, மதுரை மாவட்டம்.

+91- 452- 6522 950, +91- 94434 55311,+91-93451 55311,+91- 92446 55311

காலை 6.15 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு மணி 9.30 வரை திறந்திருக்கும்.

மூலவர் இம்மையிலும் நன்மை தருவார்
உற்சவர் சோமாஸ்கந்தர்
அம்மன் மத்தியபுரி நாயகி
தல விருட்சம் தசதள வில்வம்
தீர்த்தம் ஸ்ரீபுஷ்கரணி
ஆகமம் காரணாகமம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் மதுரையம்பதி
ஊர் மதுரை
மாவட்டம் மதுரை
மாநிலம் தமிழ்நாடு

மதுரையை ஆண்ட மலையத்துவஜனின் மகளாகப் பிறந்த மீனாட்சியை, சிவபெருமான் மணந்த கொண்டார். பின்னர் மதுரையில் மன்னராக பொறுப்பேற்றார். எச்செயலையும் செய்யும் முன்பு சிவலிங்க பூஜை செய்ய வேண்டும் என்பது ஐதீகம். எனவே ஒரு இலிங்கத்தை ஸ்தாபித்து, அதற்கு பூஜித்தபின்பு பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த வரலாற்றின் அடிப்படையில் இங்கு சிவன், இலிங்கத்தை பூஜிக்கும் அமைப்பில் காட்சி தருகிறார்.

இளமீஸ்வரர் கோயில், தாரமங்கலம்

அருள்மிகு இளமீஸ்வரர் கோயில், தாரமங்கலம், சேலம் மாவட்டம்.

+91- 4290 – 252 100

காலை 6 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் இளமீஸ்வரர்
அம்மன் தையல்நாயகி
தல விருட்சம் வன்னி
தீர்த்தம் தெப்பம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் தாரமங்கலம்
மாவட்டம் சேலம்
மாநிலம் தமிழ்நாடு

தாருகாவனத்தை மையமாகக் கொண்டு ஆட்சி செய்த கெட்டிமுதலி என்ற குறுநில மன்னன், ஒரு காலத்தில் இப்பகுதிக்கு வந்தான். இங்குள்ள வனப்பகுதியைக் கண்டதும் வேட்டையாடும் ஆசை ஏற்பட்டது. நீண்ட நேரம் வனத்திற்குள் சுற்றியும் விலங்குகள் எதுவும் கண்ணில் தட்டுப்படவில்லை.

களைப்படைந்த மன்னன் ஒரு இடத்தில் அமர்ந்தான். அவனுடன் சென்ற சேவகர்கள், மன்னனின் குதிரையை ஒரு இடத்தில் கட்ட முயன்றனர். குதிரையோ அந்த இடத்தில் நிற்காமல் தாவிக்குதித்து வேறிடத்தில் போய் நின்றது. அந்த இடத்தில் அப்படி என்ன இருக்கிறது என ஆய்வு செய்தபோது ஏதும் புலப்படவில்லை. உடனே அந்த இடத்தை தோண்ட உத்தரவிட்டான். பூமிக்கடியில் ஒரு இலிங்கம் இருந்தது. பரவசமடைந்த மன்னன், அந்த சுயம்புலிங்கத்திற்கு பூஜை செய்து வணங்கினான். பிற்காலத்தில் அங்கு கோயில் எழுந்தது.