Category Archives: கேரளா

அருள்மிகு பகவதி திருக்கோயில், குமாரநல்லூர்

அருள்மிகு பகவதி திருக்கோயில், குமாரநல்லூர் – 680664, கோட்டயம் மாவட்டம், கேரளா மாநிலம்.

+91-481-231 2737

காலை 4 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்

மூலவர் பகவதி அம்மன்

பழமை – 2000-3000 வருடங்களுக்கு முன்

ஊர் குமாரநல்லலூர்

மாவட்டம் கோட்டயம்

மாநிலம் கேரளா

பகவான் பரசுராமர் சகல சக்திகளும் நிறைந்த பகவதியை பிரதிட்டை செய்ய விரும்பி ஒரு சிலை வடித்தார். இதை நீரில் மூழ்க வைத்து வேதகிரி மலையில் தவம் இருந்தார்.

கேரளாவை ஆண்டு வந்த சேரமான் பெருமாள் என்ற மன்னன் குமாரநல்லூரில் முருகனுக்கும், வைக்கத்தில் பகவதிக்கும் கோயில் அமைக்க முடிவு செய்தான்.

அருள்மிகு பகவதியம்மன் கோயில், செங்கன்னூர்

அருள்மிகு பகவதியம்மன் கோயில், *********************************************************

செங்கன்னூர், கேரள மாநிலம் 

************************************************

கேரள மாநிலம் செங்கன்னூரில் வீற்றிருக்கும் பகவதியம்மன் உருவத்துக்கு சராசரி பெண்களுக்கு ஏற்படுவது போல மாத விலக்கு ஏற்படுகிறது. அதிசயம்தான். அற்புதம்தான். அறிவுக்கு அப்பாற்பட்ட நிகழ்வுதான். எங்குமே கேள்விப்படாத விஷயம்தான். மெய்சிலிர்க்க வைக்கும் சம்பவம்தான். நம்ப முடியாதுதான். ஆனால், நம்பித்தான் ஆக வேண்டும். காலம் காலமாய் நடந்து வரும் நிகழ்ச்சி இது.

செங்கன்னூர் பகவதியின் வரலாறு: ****************************************************   பார்வதியாம் தாட்சாயணியின் தந்தை தட்சன் ஒரு யாகம் நடத்தினான். அதற்கு சிவனைத் தவிற அனைவரையும் அழைத்தான். இது கேட்ட தாட்சாயணி அதிர்ச்சியுற்று சினம் மிகக் கொண்டாள். யாகத்தைத் தடுப்பதற்காக இறைவனிடம் சென்று தந்தை வீடு செல்ல அனுமதி கேட்டாள். இறைவனோ பின்னர் வரும் விளைவுகளை மனதில் கொண்டு அனுமதி தர மறுத்தார். இருவருக்கும் வாக்குவாதம் நடந்தது. “அவமானப்படப் போகிறாய்என்னும் எச்சரிக்கையையும் மீறி இறைவனின் அனுமதியின்றி யாகம் நடக்குமிடம் சென்ற தாட்சாயணியை அலட்சியப்படுத்தினான் தட்சன்.