Category Archives: வகையிடப்படாதவை

அருள்மிகு ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கோயில், குடவாசல்

அருள்மிகு ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கோயில், குடவாசல், திருவாரூர் மாவட்டம்.

காலை 7.30 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

ஸ்ரீநிவாசப் பெருமாள்

தாயார்

ஸ்ரீதேவி, பூதேவி

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

குடவாசல்

மாவட்டம்

திருவாரூர்

மாநிலம்

தமிழ்நாடு

முன்னொரு காலத்தில், வடதிசைக்கு அதிபதியான குபேரன் மகாவிஷ்ணுவை வணங்கி, நான் எப்பொழுதும் தங்களைத் தரிசித்துக் கொண்டிருக்கும் பாக்கியத்தை அருள வேண்டும் என்று வரம் கேட்டார். அதற்கிணங்கிய மகாவிஷ்ணு, “கலியுகத்தில், கடத்துவாரபுர க்ஷேத்திரம் எனப்படும் திருக்குடவாயில் தலத்தில் வடக்கு நோக்கி எழுந்தருளி அனுக்ரகம் செய்கிறேன்என்று கூறினார். அதன்படியே ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீநிவாசராக திவ்ய மங்கள விக்ரக வடிவில் பூமிக்கடியில் எழுந்தருளினார். இந்நிலையில், விஜயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவராயர் இப்பகுதிக்கு வந்தபோது, இங்கே ஒரு வைணவ ஆலயம் அமைக்க வேண்டும் என்று எண்ணினார். அதற்காகத் தன்னுடன் வந்திருந்த வேத பண்டிதர்களுடன் ஆலோசனை செய்தார். பூமி பூஜை செய்து முதலில் குளம் வெட்ட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதற்கான நாளும் குறிக்கப்பட்டது. குறிப்பிட்ட நாளுக்கு முந்தைய இரவில், ஒரு வைணவ அன்பரின் கனவில் தோன்றிய திருப்பதி ஏழு மலையான், “குளம் வெட்ட நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் இடத்தில் ஈசான்ய பாகத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் விக்ரகமாக நான் பூமிக்கடியில் உள்ளேன். பாலை ஊற்றி மண்ணைக் கரைத்து விக்ரகத்தை சேதப்படுத்தாமல் வெளியில் எடுத்து, எளிமையாக கோயில் கட்டி வடக்கு நோக்கி பிரதிஷ்டை செய்யுங்கள். திருப்பதி பெருமாளுக்கு அண்ணன் என்னும் சம்பிரதாயத்துடன் பிரார்த்தனைத் தலமாக ஒப்பிலியப்பன் கோயிலும்; தம்பி என்ற சம்பிரதாயத்துடன் பிரார்த்தனைத் தலமாக இந்த குடவாயில் கோயிலும் பிற்காலத்தில் சிறப்பு பெறும்என்று கூறி மறைந்தார். கண்விழித்த அந்த அன்பர் ஓடிச்சென்று கிருஷ்ண தேவராயரிடம் தான் கண்ட கனவைக் கூற, அதிசயித்த மன்னன் குடம் குடமாகப் பால் கொண்டு வருமாறு உத்தரவிட்டார்.

அருள்மிகு வாசுதேவ பெருமாள் திருக்கோயில், கடகம்பாடி

அருள்மிகு வாசுதேவ பெருமாள் திருக்கோயில், கடகம்பாடி, திருவாரூர் மாவட்டம்.

+91 4366 273600 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

வாசுதேவபெருமாள்

தாயார்

ஸ்ரீதேவி, பூதேவி

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

கடகம்பாடி

மாவட்டம்

திருவாரூர்

மாநிலம்

தமிழ்நாடு

இராமபிரானுக்கு எவ்வித எதிர்பார்ப்புமின்றி சேவை செய்தவர் அனுமன். மற்றவர்களெல்லாம், இராமனின் மூலமான ஸ்ரீமன் நாராயணனிடம் வைகுண்டம் வேண்டி பிரார்த்தித்தனர். அனுமன் மட்டும் மறுத்து விட்டார். காரணம், பூலோகத்தில் இராமநாமம் சொல்ல வழியிருக்கிறது. வைகுண்டத்துக்குச் சென்றால் நாராயணாஎன்ற கோஷம் தானே கேட்கும் என்பதால், என்றும் அழியாத சிரஞ்சீவியாக பூலோகத்திலேயே தங்கியிருக்க ஸ்ரீராமனிடம் வரம் பெற்றார். சோழ மன்னர் ஒருவர் காவேரி ஆற்றின் கிளைநதியான அரசலாற்றின் கரையோரம் ஸ்ரீதேவி, பூதேவி தாயார் சமேத வாசுதேவபெருமாளுக்கு கோயில் எழுப்பினார். அங்கே பவ்ய ஆஞ்சநேயருக்கு சன்னதியும் எழுப்பப்பட்டது. இவர் பக்தர்களின் தேவையை நிறைவேற்றி வருகிறார். சரபோஜிராஜபுரம் என அழைக்கப்படும் கடகம்பாடியில் இக்கோயில் உள்ளது.