Category Archives: வகையிடப்படாதவை

அருள்மிகு ஏரிகாத்த இராமர் திருக்கோயில், மதுராந்தகம்

அருள்மிகு ஏரிகாத்த இராமர் திருக்கோயில், மதுராந்தகம், காஞ்சிபுரம் மாவட்டம்

திரேதா யுகத்தில் வாழ்ந்தவர் மகத்தான தவச்சிலரான விபண்டக மகரிஷி. ஸ்ரீ ராமபிரான், சீதாபிராட்டி, இளைய பெருமாளான இலக்குவனுடன் வனவாசம் செய்தபோது விபண்டக மகரிஷியின் ஆசிரமத்தில் சிறிது காலம் தங்கியிருந்தார். ஸ்ரீராமனையும், ஸ்ரீஜானகியையும் தரிசித்த விபண்டகர், ஸ்ரீராமபிரானின் திருக்கல்யாண தரிசனத்தைப் பெறாமல் இருந்துவிட்டோமே என்று தன் மனத்திற்குள்ளேயே வருந்தினார். அதனைத் தன் திருவுள்ளத்தில் அறிந்த ராமபிரான் தான் மீண்டும் அயோத்திக்குத் திரும்பும்போது திருக்கல்யாண தரிசனம் தருவதாக வாக்களித்தார்.

ஸ்ரீ ராமபிரான் புஷ்பக விமானத்தில் அயோத்தி திரும்பும்போது, மதுராந்தகம் திருத்தலத்திற்கு உயரே விமானம் நின்றதாகவும், அப்போது விபண்டக மகரிஷிக்கு ஸ்ரீராமர், ஸ்ரீசீதாபிராட்டியின் திருக்கரத்தைப் பற்றியவாறு இலக்குவனுடன் திருக்கல்யாண கோலத்தில் சேவை சாதித்ததாகவும் தலபுராணம் கூறுகிறது.

அருள்மிகு வேதநாராயணப் பெருமாள் திருக்கோயில், திருநாராயணபுரம்

அருள்மிகு வேதநாராயணப் பெருமாள் திருக்கோயில், திருநாராயணபுரம் – 621 203. திருச்சி மாவட்டம்.

+91- 99766 11898 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் வேதநாராயணப்பெருமாள்
உற்சவர்
தாயார் வேதநாயகி
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் காவிரி
ஆகமம்/பூசை பாஞ்சராத்ரம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் வேதபுரி
ஊர் திருநாராயணபுரம்
மாவட்டம் திருச்சி
மாநிலம் தமிழ்நாடு

கர்வத்தால் பதவி இழந்து, மீண்டும் படைக்கும் பொறுப்பேற்ற பிரம்மா, தனக்கு வேதங்களை உபதேசிக்கும்படி பெருமாளை வேண்டினார். அவருக்கு வேதத்தை உபதேசித்த பெருமாள், இங்கேயே பள்ளி கொண்டார். சுவாமிக்கு வேதநாராயணர்என்ற பெயர் ஏற்பட்டது. பிற்காலத்தில் சுவாமி சிலை மண்ணால் மூடப்பட்டது. வானவராயர் என்ற மன்னர், ஒருமுறை இவ்வூர் வந்து தங்கினார். அவரது கனவில் தோன்றிய சுவாமி, தனது சிலை மண்ணில் புதைந்திருப்பதைக் கூறினார். சிலையைக் கண்டெடுத்த மன்னர், கோயில் எழுப்பினார்.