Category Archives: வகையிடப்படாதவை

அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில், முடிகொண்டான்

அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில், முடிகொண்டான், திருவாரூர் மாவட்டம்.

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

கோதண்டராமர்

தாயார்

சீதா

தீர்த்தம்

இராமதீர்த்தம்

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

முடிகொண்டான்

மாவட்டம்

திருவாரூர்

மாநிலம்

தமிழ்நாடு

இராமர் தனது அவதாரத்தின் நோக்கமான, இராவணனை வதம் பண்ணுவதற்கு இலங்கை செல்லும்முன் இத்தலத்திலுள்ள பரத்வாஜ முனிவர் ஆசிரமத்திற்கு வருகை தந்தார். அப்போது முனிவர் இராமரிடம் தான் விருந்து தர விரும்புவதாக கூறினார். ஆனால் இராமரோ தற்போது முடியாது, நான் இராவணனை வதம் செய்து விட்டு திரும்பும்போது இங்கு விருந்து சாப்பிடுகிறேன் என்று வாக்குறுதி தந்தார். அதேபோல் இராவணனை வதம் செய்து விட்டு திரும்புகையில் இராமனது புஷ்பக விமானம் தற்போது கோயில் உள்ள இடமான பரத்வாஜ முனிவரது ஆசிரமத்தில் தரை இறங்கியது. இராமரும் விருந்து உண்ண தயாராகிறார். அப்போது தாம் விருந்து சாப்பிடும் முன் ஸ்ரீரங்கநாதரைப் பூஜை செய்த பின்பே சாப்பிடுவது வழக்கம் என்று தெரிவிக்க பரத்வாஜ முனிவர் ஸ்ரீரங்கநாதரைப் பிரதிஷ்டை செய்கிறார். இராமரும் அவரை வழிபட்டுவிட்டு முனிவர் தந்த விருந்தை உண்டார். விருந்து உண்ட இராமர் பரத்வாஜ முனிவருக்கு பட்டாபிஷேகத்திற்கு முன்பே முடி(மகுடம்)யுடன் இத்தலத்தில் காட்சி தந்தார். எனவே இங்குள்ள கோதண்டராமர் முடிகொண்டான் இராமர் என்றழைக்கப்படுகிறார்.

அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில், வடுவூர்

அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில், வடுவூர், திருவாரூர் மாவட்டம்.

+91- 4367 – 267 110 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 7.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

கோதண்டராமர்

உற்சவர்

இராமர்

தல விருட்சம்

மகிழம்

தீர்த்தம்

சரயு

ஆகமம்

பாஞ்சராத்ரம்

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

வடுவூர்

மாவட்டம்

திருவாரூர்

மாநிலம்

தமிழ்நாடு

வனவாசம் முடித்தபிறகு, இராமபிரான் அயோத்திக்கு கிளம்பத் தயாரானார். அப்போது வனத்தில் அவரது தரிசனம் பெற்ற மகரிஷிகள், அவரைத் தங்களுடனேயே இருக்கும்படி வேண்டினர். அவர்களது கோரிக்கையை ஏற்ற இராமர், மறுநாள் அவர்களைச் சந்திப்பதாக சொன்னார். தனது உருவத்தை சிலையாக செய்து, தான் தங்கியிருந்த இடத்தின் வாசலில் வைத்து விட்டார். ரிஷிகள் அந்த சிலையைப் பார்த்தனர். அதன் அழகில் லயித்து, இராமபிரானிடம், “ராமா. இந்தச் சிலை உயிரோட்டம் உள்ளதாக உன்னைப் போலவே இருக்கிறது. இது எப்படி வந்தது? அதை நாங்கள் வைத்துக் கொள்ள விரும்புகிறோம்என்றனர். இராமர் ஒன்றும் தெரியாதவர் போல, “அப்படியா. அப்படியானால் உங்களுடன் நான் இருப்பதைவிட அந்தச் சிலை இருப்பதைத்தான் விரும்புகிறீர்கள் போலும்என்றார். சிலையில் அழகில் மயங்கியிருந்த ரிஷிகள், தாங்கள் பூஜிக்க அச்சிலையை தரும்படி கேட்டனர். அதன்படி இராமர் அவர்களிடம் சிலையை கொடுத்துவிட்டு, அயோத்தி திரும்பினார். பிற்காலத்தில், திருக்கண்ணபுரத்தைச் சேர்ந்த பெருமாள் பக்தர்கள் இந்த சிலையை பூஜித்து வந்தனர். மேலும் சீதை, இலட்சுமணர், பரதன், ஆஞ்சநேயருக்கும் சிலை வடித்தனர். அந்நியர் படையெடுப்பின்போது, பாதுகாப்பிற்காக இச்சிலையை தலைஞாயிறு என்னும் தலத்தில் மறைத்து வைத்தனர். தஞ்சையை சரபோஜி மன்னர்கள் ஆண்டுவந்தபோது, ஒருநாள் மன்னரின் கனவில் தோன்றிய இராமர், தான் இருக்கும் இடத்தை குறிப்பிட்டு தனக்கு கோயில் எழுப்பும்படி கூறினார்.