Category Archives: சிவ ஆலயங்கள்

இருதயாலீசுவரர் திருக்கோயில், திருநின்றவூர்

அருள்மிகு இருதயாலீசுவரர் திருக்கோயில், திருநின்றவூர், திருவள்ளூர் மாவட்டம்.

+91-94441 64108

காலை 6.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்    –         இருதயாலீஸ்வரர் (மன ஆலய ஈஸ்வரர்)
அம்மன்    –         மரகதாம்பிகை, மரகதவல்லி
தல விருட்சம்    –         வில்வம்
பழமை    –         1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர்    –         திருநின்றவூர்
மாவட்டம்    –         திருவள்ளூர்
மாநிலம்    –         தமிழ்நாடு

நாயன்மார்களில் ஒருவரான பூசலார் திருநின்றவூரில் பிறந்தவர். இவர் தினமும் அவ்வூரிலுள்ள சிவலிங்கம் ஒன்றைத் தரிசித்து வந்தார். மேற்கூரை இல்லாத அந்த இலிங்கம் வெயிலிலும், மழையிலும் நனைந்தது. இதைப்பார்த்த பூசலாருக்கு சிவனுக்கு கோயில் கட்ட ஆசை எழுந்தது. இவரோ பரம ஏழை. எனவே சிவனை தன் மனதில் இருத்தி, தன்னிடம் ஏராளமான பணம் இருப்பது போல் கற்பனை செய்து கொண்டார். மனதுக்குள்ளேயே கோயில் கட்ட ஆரம்பித்தார். அந்தக் கோயிலில் இல்லாத பொருளே இல்லை. செய்யாத வசதியே இல்லை.

இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில், மதுரை

அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில், மேலமாசி வீதி, மதுரை, மதுரை மாவட்டம்.

+91- 452- 6522 950, +91- 94434 55311,+91-93451 55311,+91- 92446 55311

காலை 6.15 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு மணி 9.30 வரை திறந்திருக்கும்.

மூலவர் இம்மையிலும் நன்மை தருவார்
உற்சவர் சோமாஸ்கந்தர்
அம்மன் மத்தியபுரி நாயகி
தல விருட்சம் தசதள வில்வம்
தீர்த்தம் ஸ்ரீபுஷ்கரணி
ஆகமம் காரணாகமம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் மதுரையம்பதி
ஊர் மதுரை
மாவட்டம் மதுரை
மாநிலம் தமிழ்நாடு

மதுரையை ஆண்ட மலையத்துவஜனின் மகளாகப் பிறந்த மீனாட்சியை, சிவபெருமான் மணந்த கொண்டார். பின்னர் மதுரையில் மன்னராக பொறுப்பேற்றார். எச்செயலையும் செய்யும் முன்பு சிவலிங்க பூஜை செய்ய வேண்டும் என்பது ஐதீகம். எனவே ஒரு இலிங்கத்தை ஸ்தாபித்து, அதற்கு பூஜித்தபின்பு பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த வரலாற்றின் அடிப்படையில் இங்கு சிவன், இலிங்கத்தை பூஜிக்கும் அமைப்பில் காட்சி தருகிறார்.