Category Archives: சக்தி ஆலயங்கள்

அருள்மிகு இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோயில், இருக்கன்குடி

அருள்மிகு இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோயில், இருக்கன்குடி, விருதுநகர் மாவட்டம்.
*****************************************************************************************************

+91-4562 259 614, 259 864, 94424 24084

(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 5.30-மதியம் 1 மணி, மாலை 4- இரவு 8 மணி. செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 5.30-இரவு 8.30 மணி.

மூலவர்: – மாரியம்மன்

தீர்த்தம்: – அர்ச்சுனா, வைப்பாறு

பழமை: – 500 வருடங்களுக்கு முன்

ஊர்: – இருக்கன்குடி

மாவட்டம்: – விருதுநகர்

மாநிலம்: – தமிழ்நாடு

மதுரை அருகிலுள்ள சதுரகிரி மலையில் தவமிருந்த சித்தர் ஒருவர், அம்மனின் தரிசனம் வேண்டி தவமிருந்தார். அப்போது அசரீரி ஒலித்தது. “சித்தரே! அர்ச்சுனா நதி மற்றும் வைப்பாறுக்கிடையே உள்ள மேட்டுப்பகுதிக்கு வாஎன்றது. அங்கே சென்ற சித்தருக்கு அம்பாள் காட்சி தந்தாள். தான் பார்த்த வடிவத்தை அவர் சிலையாகப் பிரதிட்டை செய்தார். பிற்காலத்தில் இந்த சிலை, ஆற்று மண்ணில் புதைந்து போனது.

பிற்காலத்தில், இப்பகுதியில் வசித்த சிறுமி பசுஞ்சாணம் சேகரிக்கும் தொழில் செய்தாள். ஒரு சமயம் தரையில் வைத்த சாணக்கூடையை தூக்க முடியவில்லை. பெரியோரை அழைத்து வந்தாள். அப்போது, அந்த சிறுமியின் மூலமாக வெளிப்பட்ட மாரியம்மன், அவ்விடத்தில் தனது சிலை வடிவம் இருப்பதாகக் கூறினாள். அதன்படி அங்கு கிடைத்த சிலையை, பிரதிட்டை செய்து கோயில் எழுப்பினர்.

மாரியின் கோயிலுக்கு வடக்கே ஒடும் அர்ச்சுனா நதியானது, வத்திராயிருப்பிலுள்ள மகாலிங்க மலையில் இருந்து உற்பத்தியாகிறது. இந்த அர்ச்சுனா நதிக்கு ஒரு புராணக் கதை உண்டு. முன்னொரு காலத்தில் பஞ்சபாண்டவர்கள் காடுகளில் சுற்றித் திரிந்து பின் இந்த மலையடிவாரத்திற்கு வந்து குளிக்க நினைத்தார்கள். ஆனால், அவர்கள் குளிப்பதற்குரிய இடம் இல்லாததால் அர்ச்சுனன் கங்கா தேவியை வணங்கி, தன் அம்பால் பூமியை பிளந்தான். அந்த பிளவிலிருந்து தோன்றிய ஆற்தான் அர்ச்சுனா ஆறு எனப்பட்டது. இந்த ஆற்றுநீரில் பஞ்சபாண்டவர்கள் திரவுபதியுடன் நீராடி மகிழ்ந்தனர்.

அருள்மிகு கோவர்த்தனாம்பிகை திருக்கோயில், பெருமாநல்லூர்

அருள்மிகு கோவர்த்தனாம்பிகை திருக்கோயில், பெருமாநல்லூர்– 641 666. திருப்பூர் மாவட்டம்.
*********************************************************************************************************

+91 – 421 235 0544, 235 1396 (மாற்றங்களுட்பட்டவை)

காலை 7.30 மணி முதல் 1 மணி வரை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – கோவர்த்தனாம்பிகை

பழமை: – 500 வருடங்களுக்கு முன்

ஊர்: – பெருமாநல்லூர்

மாவட்டம்: – திருப்பூர்

மாநிலம்: – தமிழ்நாடு

ஒரு காலத்தில் மக்கள் தெய்வ பக்தியை அறவே மறந்து வெறுக்கத்தக்க பாவச்செயல்களில் ஈடுபட்டனர். நல்லோர் அழிந்து, தீயோர் பெருகினர். இதனால், கடுங்கோபங்கொண்ட சிவபெருமான் மனிதர்களின் மீது மண்மாரியை பொழிவித்தார்.

பூமியே அழியும் நிலைக்கு வந்தது. அப்போது சிவபக்தர்கள் சிலர், மக்களின் பாவங்களை மன்னித்து அவர்களுக்கு நற்புத்தி கொடுத்து பாவ விமோசனம் தந்து அழிவிலிருந்து காத்தருளும்படி பார்வதி தேவியிடம் வேண்டினர்.

கருணை கொண்ட அம்மன், மக்களுக்காக சிவனிடம் வேண்டினாள். ஆனால், அவளது வேண்டுதலுக்கு சிவன் இணங்கவில்லை. இதனால் அம்மன் கைலாயத்தை விட்டு பூமிக்கு வந்து பெரும்பழனம் என்ற வில்வமர காட்டில், சிவனை நோக்கி மேற்கு திசையைப் பார்த்தபடி கடுந்தவம் இருந்தாள். அவளது தவத்திற்கு மதிப்பளித்த சிவபெருமான் இவ்விடத்தில் அம்பாளுக்கு காட்சி தந்தார்.

அம்பாள் அங்கு கோவர்த்தனாம்பிகை என்ற பெயருடன் அமர்ந்தாள். சிவன் உத்தமலிங்கேசுவரர் என்ற பெயரில் லிங்க வடிவானார். பிற்காலத்தில் சோழமன்னர்கள் இங்கு கோயில் எழுப்பினர்.