பகை வெல்ல

பகை வெல்ல

பகைவரக் காரணம்:

தன்னைவிட வலியவரின் சொல்லை மறுத்துப் பேசுதல். யார்மீதும் அன்பு காட்டத் தெரியாமை. நல்ல துணை, நண்பர்கள் இல்லாமை. தான் செல்லும் வழியைக் கவனித்துச் செல்லாமை. வரப்போகும் பழிக்கு அஞ்சாமை. அடங்காத கோபம். தணிவற்ற காமம் உடைமை. குணமில்லாமை. குற்றம் பல புரிதல். சிறு பொருளுக்குக்கூட அறியாமையால் சண்டையிடும் தன்மை.

சரி. பகையோ வந்துவிட்டது. மேலே கூறியுள்ளவற்றைத் திருத்திக்கொள்ள முயலவேண்டும். அத்துடன் கீழ்கண்ட ஆலயங்களுக்குச் சென்று இறைவனை வழிபட, அறிவுபெற்று, தன்னைத் திருத்திக்கொள்ள வழி பிறக்கும்.

மலையாள பகவதி

கணக்கன்பாளையம்

ஈரோடு

பண்ணாரி மாரியம்மன்

சத்தியமங்கலம், பண்ணாரி

ஈரோடு

நெல்லிக்காட்டு பத்ரகாளி

கூத்தாட்டு குளம்

எர்ணாகுளம்

தில்லைக் காளி

சிதம்பரம்

கடலூர்

மாசாணியம்மன்

ஆனைமலை, பொள்ளாச்சி

கோயம்புத்தூர்

இலட்சுமி நரசிம்மர்

தாளக்கரை

கோயம்புத்தூர்

வனபத்ரகாளியம்மன்

தேக்கம்பட்டி

கோயம்புத்தூர்

வெட்டுடையா காளி

அரியாக்குறிச்சி

சிவகங்கை

பத்திர காளியம்மன் மடப்புரம் சிவகங்கை
கரபுரநாதர் உத்தமசோழபுரம் சேலம்

பிரத்யங்கிராதேவி

அய்யாவாடி

தஞ்சாவூர்

துர்க்கை

பட்டீசுவரம்

தஞ்சாவூர்

நரசிம்ம பெருமாள்

வேடசந்தூர்

திண்டுக்கல்

வீரபத்திரர் திருவானைக்காவல் திருச்சி
காட்டழகிய சிங்கர் ஸ்ரீரங்கம் திருச்சி
நரசிங்கப்பெருமாள் மேலமாட வீதி, திருநெல்வேலி திருநெல்வேலி
சற்குணநாதர் இடும்பாவனம் திருவாரூர்
அலங்கார செல்வி அம்மன் வசவப்புரம் தூத்துக்குடி

மூங்கிலணைக் காமாட்சி

தேவதானப்பட்டி

தேனி

நரசிம்மர் திருக்குறையலூர் நாகப்பட்டினம்
கருப்பண்ண சுவாமி ராங்கியம், உறங்காப்புளி புதுக்கோட்டை

பிரத்யங்கிராதேவி

மொரட்டாண்டி

புதுச்சேரி

வைகுண்ட மூர்த்தி கோட்டையூர், சுந்தரபாண்டியம் விருதுநகர்
அங்காளபரமேசுவரி மேல்மலையனூர் விழுப்புரம்
நரசிம்மர் அந்திலி விழுப்புரம்

4 Responses to பகை வெல்ல

  1. பகை வரக் காரணமாக நீங்கள் சொன்ன காரணங்கள் ஒவ்வொன்றும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டியவை. சில சமயம் ஊழ்வினையும் உறுத்து வந்து ஊட்டும். பகையை வெல்ல, இல்லையில்லை பகை விலக நீங்கள் தந்த கோயில் குறிப்புகள்
    உதவும். நன்றி!

  2. dharumi says:

    நிறைய கோவிலுக்குப் போகணும் போல இருக்கே!

  3. அன்பு தருமி,
    வணக்கம். வாங்க. வாங்க.
    சும்மா இருக்காம சண்டை போட்ட பகையை வெல்லணுமுன்னா கோயிலுக்குப் போயாகணுமில்ல.

  4. அன்பு இளங்கோ,
    //சில சமயம் ஊழ்வினையும் உறுத்து வந்து ஊட்டும்.//
    அதுவும் உண்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *