அருள்மிகு பிரத்யங்கிராதேவி திருக்கோயில், அய்யாவாடி

அருள்மிகு பிரத்யங்கிராதேவி திருக்கோயில், அய்யாவாடி, தஞ்சாவூர் மாவட்டம்.
******************************************************************************************

+91 – 435- 246 3414, 94431 24347 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பிரத்யங்கிராதேவி
தல விருட்சம் ஆலமரம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்பு
ஊர் அய்யாவாடி
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு

திருமால் இராமாவதாரம் எடுத்து பூமிக்கு வந்த போது, சீதையை ராவணன் கடத்திச் சென்று விட்டான். இராமன் அவனுடன் போரிட இலங்கை சென்றார்.

தன் சகோதரர்களையும், மகன்களையும் வரிசையாக இராமனுடன் போரிட அனுப்பிய ராவணன், எல்லாரையும் இழந்தான். மிகுந்த பலசாலியான இந்திரஜித் ஒருவன் எஞ்சியிருந்தான்.

காளி பக்தனான அவன், இராமனைப் போரில் தோற்கடிப்பதற்காக காளியை வேண்டினான். மன்னர்கள் அக்காலத்தில் போரில் வெற்றி பெறுவதற்காக, எட்டுத்திசைகளிலும் மயான பூமியை தோற்றுவித்து அதர்வணகாளியான பிரத்யங்கிரா தேவிக்கு நிகும்பலா யாகம் நடத்துவார்கள்.

அந்த யாகத்தை இந்திரஜித்தும் பிரம்மாண்டமாக நடத்தினான். நிகும்பலா யாகம் மட்டும் முடிந்து விட்டால் இந்திரஜித் மாபெரும் சக்தியை அடைந்து விடுவான். அதன் பின் அவனைப் போரில் வெல்ல யாராலும் முடியாது. இந்த விஷயம் இராமனுக்குத் தெரிந்து விட்டது. இராமபிரானும் பிரத்யங்கிரா தேவிக்கு சிறப்பு பூஜைகள் செய்தார்.


இந்திரஜித் அநியாய வெற்றி பெறுவதற்காக யாகம் நடத்துவதையும், பரமாத்மாவான இராமன் நியாயத்திற்காக யாகம் நடத்துவதையும் அறிந்து கொண்டாள் பிரத்யங்கிரா. இராமரின் யாகத்திற்கும், அவரது நியாயமான கோரிக்கைக்கும் செவி சாய்த்த தேவி அவருக்கு அருள் புரிந்தாள்.

தன் நீண்ட நாள் பக்தனாயினும், அநியாயத்துக்குத் துணைபோன இந்திரஜித்தின் பூசையை ஏற்க மறுத்துவிட்டாள். எனவே இந்திரஜித் போரில் தோற்றான். இருந்தாலும், தன் பக்தன் என்ற முறையில், அவனது வீரம் இராமாயணத்தில் புகழப்படும் வகையில் ஆசி தந்தாள்.

கோயில் விமானம் வடமாநில பாணியில் அமைக்கப்பட்டுள்ளது. பிரத்யங்கிரா தேவி தனி சன்னதி கொண்டு வடக்கு பார்த்து அருள்பாலிக்கிறாள்.

தேவாரப்பாடல் பெற்ற சிவத்தலங்களில் இதுவும் ஒன்று. சம்பந்தர் இத்தல சிவனை குறித்து பாடியுள்ளார்.

மூலவராக அகத்தீசுவரர் கிழக்கு நோக்கி உள்ளார். அம்மன் தர்மசம்வர்த்தினி தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறாள். தலவிருட்சம் ஆலமரம்.

இதில் ஆல், அரசு, புரசு, இச்சி, மா இலைகள் இருப்பது விசேடம்.

பிரத்யங்கிராதேவி:

இவள் சரபேசுவரரின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றியவள். சிம்ம முகம், 18 கரம், சிரித்த முகத்துடன் அருள்பாலிக்கிறாள். கரிய நிறத்துடன் தலையில் சந்திரகலை அணிந்து சூலம், பாசம், டமருகத்துடன் இருபுறமும் லட்சுமி, சரசுவதி தேவியுடன் அட்டகாசமாக வீற்றிருக்கிறாள்.

மிளகாய் வத்தல் யாகம்:

இங்கு அமாவாசை தோறும் காலை 8 மணியிலிருந்து மதியம் 2 மணிவரை நிகும்பலா யாகம் நடக்கிறது. மிளகாய் வத்தலை யாக குண்டத்தில் கொட்டுவார்கள்.

சாதாரணமாக ஒரு மிளகாய் வத்தலை தீயில் போட்டாலே நெடி இருக்கும். ஆனால், நிகும்பலா யாகத்தில் மூடை மூடையாக போடப்படும் மிளகாய் வத்தலிலிருந்து சிறிது நெடி கூட இருக்காது. கலியுகத்தில் இது மாபெரும் அதிசயம்.

மேலும் 108 வகை ஹோம சாமான்கள் குண்டத்தில் இடப்படும். பட்டு புடவை, பழ வகைகளும் இதில் அடக்கம். யாகம் முடிந்ததும், புனித கலசநீரால் சரபேசுவரருக்கும், பிரத்யங்கிரா தேவிக்கும் அபிசேகம் நடத்தப்படுகிறது.

சனிபகவானின் மகன் குளிகன் இங்கு வழிபாடு செய்துள்ளதால் சோதிட ரீதியாக சனி தோசம் உள்ளவர்களும் யாகத்தில் பங்கேற்கின்றனர்.

ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தில் நடக்கும் இந்த யாகத்தில் சுமார் 40 ஆயிரம் பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.

நிகும்பலா யாகத்தில் கலந்து கொண்டால்:

இழந்த பதவி மீண்டும் கிடைக்கும்.

எதிரிகளின் தொல்லை விலகும்.

கடன் தொல்லை தீரும்.

உத்தியோக உயர்வு கிடைக்கும்.

புதிய வேலை வாய்ப்பு உருவாகும்.

திருமணம் விரைவில் நடக்கும்.

வியாபாரம் செழிக்கும்.

இவையெல்லாம் நம்பிக்கை.

சனி தோசம் உள்ளவர்களும் யாகத்தில் பங்கேற்கின்றனர்.

அம்மனுக்கு முழுக்காட்டு செய்தும், புத்தாடை அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

6 Responses to அருள்மிகு பிரத்யங்கிராதேவி திருக்கோயில், அய்யாவாடி

  1. subbiah says:

    hai, i need your help please your contact no

  2. subbiah says:

    வணக்கம்
    எங்கள் குடும்பத்துக்கு எதிரிகள் உள்ளன அவர்களால் எங்களுக்கு தீமைகள் செய்துள்ளார் (செய்வினை, குலதெய்வத்தை கட்டுதல்.) இதை சரி செய்து பின்னர் அவர்களால் எந்த தீமைகளூம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்.

  3. வணக்கம். மதுரை-தொண்டி சாலையில் உள்ள வெட்டுடையாகாளி ஆலயம் சென்று வாருங்கள். தாங்கள் புதுக்கோட்டையா? நான் பிறந்தது புதுக்கோட்டைதான்.

  4. பாலசுப்பிரமணியம் says:

    குடும்பபிரச்சனை கனவன் மனைவி பிரிவு 5 மாதம் பிரிந்து வாழ்கிறோம் சேர்ந்து வாழ நான் ஆசை படுகிறேன் என்ன வழி அய்யா மிகவும் மனவேதனை அடைகிறேன் பேன்நெம்பர் 9750553103 ஈரோடு மாவட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *