அருள்மிகு ரகுமாயீ சமேத பாண்டுரங்கன் திருக்கோயில், தென்னாங்கூர்

அருள்மிகு ரகுமாயீ சமேத பாண்டுரங்கன் திருக்கோயில், தென்னாங்கூர் – 604 408. திருவண்ணாமலை மாவட்டம்

+91-4183-225 808 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பாண்டுரங்கன்
தாயார் ரகுமாயீ
தல விருட்சம் தமால மரம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் தென்னாங்கூர்
மாவட்டம் திருவண்ணாமலை
மாநிலம் தமிழ்நாடு

மகாராஷ்டிராவிலுள்ள பண்டரிபுரம் கோயிலைப் போன்றே வந்தவாசி அருகே தென்னாங்கூர் பாண்டுரங்கன் கோயில் உள்ளது. இங்கு ரகுமாயீ சமேத பாண்டுரங்கனை தரிசிக்கலாம். ஞானானந்த சுவாமிகளின் சீடர் ஹரிதாஸ்கிரி சுவாமிகளால் அமைக்கப்பட்ட இக்கோயில், நாமாநந்த கிரி சுவாமிகளால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இயந்திர வழிபாட்டின் அடிப்படையான ஸ்ரீசக்ர அதிதேவதைகள் அனைத்தும் இங்கு இருப்பது விசேஷம்.

அருள்மிகு ராஜகோபாலசுவாமி திருக்கோயில், மன்னார்குடி

அருள்மிகு ராஜகோபாலசுவாமி திருக்கோயில், மன்னார்குடி – 614 001, திருவாரூர் மாவட்டம்.

+91- 4367 – 222 276, +91- 94433 43363.

காலை 6.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் வாசுதேவப்பெருமாள்
உற்சவர் ராஜகோபாலர்
தாயார் செங்கமலத்தாயார்
தல விருட்சம் செண்பகமரம்
தீர்த்தம் 9 தீர்த்தங்கள்
ஆகமம்/பூசை பாஞ்சராத்ரம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் ராஜமன்னார்குடி
ஊர் மன்னார்குடி
மாவட்டம் திருவாரூர்
மாநிலம் தமிழ்நாடு

திருமால், கிருஷ்ணாவதாரம் எடுத்தபோது தென்பகுதியில் கோபிலர், கோபிரளயர் என்னும் இரண்டு முனிவர்கள் இருந்தனர். இவ்விருவரும் கண்ணனின் லீலைகளைக் கேட்டு, அவரைப் பார்க்க துவாரகை கிளம்பினர். வழியில் அவர்களை சந்தித்த நாரதர், கிருஷ்ணாவதாரம் முடிந்துவிட்டதாகக் கூறினார். அதைக்கேட்டதும் முனிவர்கள் மயக்கமாயினர். நாரதர் அவர்களை எழுப்பி, தேற்றினார். கண்ணனைக் காண அவரது ஆலோசனைப்படி தவமிருந்தனர். பகவான் கிருஷ்ணராகஅவர்களுக்கு காட்சி தந்தார்.

அவரிடம் தங்களுக்கு கிருஷ்ணலீலையைக் காட்டும்படி வேண்டினர். அவர் தனது 32 லீலைகளைக் காட்டியருளினார். அவர்களது வேண்டுதலுக்காக இத்தலத்தில் எழுந்தருளினார்.

கிருஷ்ணரின் பெற்றோர் வசுதேவர், தேவகி. இவ்விருவரையும் கம்சன் சிறையில் அடைத்தபோது பெருமாள் அவர்கள் முன்பு தோன்றி, தானே அவர்களுக்கு பிள்ளையாக பிறக்கப்போவதாக கூறினார். இதுவே அவரது முதல் லீலை. தனது லீலைகளை காண விரும்பிய கோபிலர், கோபிரளயருக்கு முதலில் வாசுதேவராக காட்சி தந்தார். 32ம் லீலையாக கோகுலத்தில் பசுக்கள் மேய்க்கும் இடையனாக காட்சி தந்தார்.