Monthly Archives: February 2012

அருள்மிகு கல்யாணராமர் திருக்கோயில், மீமிசல்

அருள்மிகு கல்யாணராமர் திருக்கோயில், மீமிசல், புதுக்கோட்டை மாவட்டம்.

+91 99658- 64048 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

கல்யாணராமர்

தீர்த்தம்

கல்யாண புஷ்கரணி

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

மீமிசல்

மாவட்டம்

புதுக்கோட்டை

மாநிலம்

தமிழ்நாடு

இலங்கையில் இருந்த சீதையை மீட்க வானரப்படை சகிதமாக இராம, இலட்சுமணர்கள் சென்றனர். அவர்கள் மீமிசல் பகுதிக்கு வந்தனர். அப்பகுதி மக்கள் இராமருக்கு உதவி செய்தனர். இதற்கு கைமாறாக சீதையை மீட்டு வரும் போது, மீமிசலில் திருமணக் கோலத்தில் இராமர், சீதை ஆகியோர் இலட்சுமணனுடன் இங்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அந்த இடத்தில் சரபோஜி மன்னர் கல்யாணராமர் சுவாமி கோயிலைக் கட்டி திருப்பணிகள் செய்தார். இராவணனிடம் போரிட்டு வெற்றி பெற்ற கல்யாணராமர் எழுந்தருளியிருப்பதால், தினமும் கடலுடன் போராடி தங்கள் வாழ்க்கையை ஓட்டும் மீனவ சமுதாயத்தினரும் தங்களுக்கும், தொழிலுக்கும் பங்கம் ஏற்படாமல் இருக்க இவரை வழிபாடு செய்கின்றனர். இலங்கை இருக்கும் திசை நோக்கி காட்சியளிக்கும் இராமர் கோயில் கர்ப்பக் கிரகத்தில் இராமர், சீதை, இலட்சுமணன் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கின்றனர். அருகில் ஆஞ்சநேயரும் எழுந்தருளியுள்ளார். இதேவடிவில் உற்சவ மூர்த்திகளும் காணப்படுகின்றனர்.

அருள்மிகு சகஸ்ரலட்சுமீஸ்வரர் திருக்கோயில், தீயத்தூர்

அருள்மிகு சகஸ்ரலட்சுமீஸ்வரர் திருக்கோயில், தீயத்தூர், ஆவுடையார் கோவில் தாலுக்கா, புதுக்கோட்டை மாவட்டம்.

+91 4371-239 212, 99652 11768, 97861 57348

(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

சகஸ்ரலட்சுமீஸ்வரர்

தாயார்

பிரகன்நாயகி, பெரியநாயகி

தல விருட்சம்

வேம்பு

தீர்த்தம்

தாமரைக்குளம்

ஆகமம்

காமிகம்

பழமை

1000 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்

தீ அயனூர்

ஊர்

தீயத்தூர்

மாவட்டம்

புதுக்கோட்டை

மாநிலம்

தமிழ்நாடு

திருமால் தினமும் ஆயிரம் தாமரை மலர்களைக் கொண்டு இலிங்க பூஜை செய்து வந்தார். ஒருமுறை ஒரு பூ குறைந்தது. எனவே, தன் கண்ணையே ஒரு மலராக நினைத்து, அதை எடுக்க முயன்றபோது, சிவன் அவர் முன் தோன்றித் தடுத்தார். இதையறிந்த இலட்சுமிக்கும், சிவதரிசனம் பெறும் எண்ணம் ஏற்பட்டது. அகத்தியரின் ஆலோசனையின்படி, பூலோகம் வந்து, ஆயிரம் தாமரை மலர்களால் சிவனைப் பூஜை செய்தாள். இவளது பூஜையில் மகிழ்ந்த சிவன் மகாலட்சுமிக்கு தரிசனம் தந்தார். இதனால் இத்தல இறைவன், சகஸ்ரலட்சுமீஸ்வரர் ஆனார். சகஸ்ரம் என்றால் ஆயிரம்.

அகிர்புதன் மகரிஷி, தேவசிற்பி விஸ்வகர்மா, ஆங்கிரஸ மகரிஷி, அக்னி புராந்தக மகரிஷி, ஆகியோர் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள். இவர்கள் மகாலட்சுமிக்கு தரிசனம் தந்த சகஸ்ரலட்சுமீஸ்வரரைத் தரிசிக்க மாதம் தோறும் உத்திரட்டாதி நட்சத்திர நாளில் அரூப வடிவில் இத்தலம் வந்து சிவனை ஹோம பூஜை செய்து வழிபட வருவதாக ஐதீகம். எனவே உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்கள் வாழ்நாளில் அடிக்கடியோ, உத்திரட்டாதி நட்சத்திரத்திலோ வழிபாடு செய்ய வேண்டிய தலம் இது.