Monthly Archives: February 2012

அருள்மிகு அழகிரிநாதர் திருக்கோயில், சேலம்

அருள்மிகு அழகிரிநாதர் திருக்கோயில், சேலம், சேலம் மாவட்டம்.

+91- 427 – 222 1577 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

அழகிரிநாதர்

தாயார்

சுந்தரவல்லி

தீர்த்தம்

வஞ்சுளபுஷ்கரணி

ஆகமம்

வைகானசம்

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

சேலம்

மாவட்டம்

சேலம்

மாநிலம்

தமிழ்நாடு

மகாவிஷ்ணு, வைகுண்டத்தில் மகாலட்சுமியுடன் பேசிக்கொண்டிருந்தபோது, அவரைக்காண பிருகு முனிவர் வந்தார். முனிவரை கவனித்தாலும் கவனிக்காதது போல் நடித்த விஷ்ணு இலட்சுமியுடன் பேசிக்கொண்டே இருந்தார். தன்னை விஷ்ணு அவமதிக்கிறார் என்றெண்ணிய முனிவர், கோபம்கொண்டு அவரை உதைக்கச் சென்றார். தனது கண்முன்னேயே கணவரின் நெஞ்சில் முனிவர் உதைக்க வருவதைக்கண்டு வெகுண்ட மகாலட்சுமி கோபித்துக்கொண்டு சென்றார். பொறுமையுடன் இருந்த விஷ்ணு, முனிவரின் அகங்காரத்தை குறைக்க எண்ணி, முனிவரின் பாதத்தில் இருந்த ஞானக்கண்ணை பறித்து அவரது சக்தியை இழக்கச் செய்தார். தவறை உணர்ந்த பிருகுமுனிவர், தன்னை மன்னிக்கும்படி நாராயணனிடம் வேண்டினார். கோபித்துக் கொண்டு சென்ற தாயாரை எண்ணி தவம் செய்து வணங்கிவர, மன்னிப்பு கிட்டும் என்றார் விஷ்ணு. அதன்படி இத்தலத்துக்கு வந்த முனிவர் அங்கு தவமிருந்தார். ஒருநாள் வில்வமரத்தினடியில் யாருமில்லாமல் தனியே அழுதுகொண்டிருந்த குழந்தையைக் கண்டார். மிகவும் அழகாக இருந்த குழந்தைக்கு சுந்தரவல்லிஎனப்பெயரிட்டு வளர்த்தார். அவள் பருவ வயதை அடைந்தபோது, அவளை மணமுடிக்கும் தகுதி இறைவனுக்கு மட்டுமே உள்ளது என உணர்ந்த அவர், மகாவிஷ்ணுவை வேண்டினார். அழகியநாதராக வந்த மகாவிஷ்ணு, சுந்தரவல்லியைத் திருமணம் செய்து கொண்டார். பின், முனிவர் வளர்த்து வந்த குழந்தைதான் மகாலட்சுமி என உணர்த்திய விஷ்ணு, தாயாருடன் காட்சி தந்தார். தாயார் அவரை மன்னித்தார். தனக்கு திருமணக்காட்சி தந்து அருளியதைப்போல இங்கு வரும் மக்களுக்கும் அருள வேண்டுமென அவர் வேண்டியதால், இருவரும் இங்கு தங்கிவிட்டனர்.

அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில், செவ்வாய்ப்பேட்டை

அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில், செவ்வாய்ப்பேட்டை, சேலம் மாவட்டம்.

+91 94877 09883 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

பிரசன்ன வெங்கடாஜலபதி

உற்சவர்

பூதேவிஸ்ரீதேவி சமேத ஆதிபெருமாள்

தாயார்

அலமேலுமங்கைபத்மாவதி

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

செவ்வாய்ப்பேட்டை

மாவட்டம்

சேலம்

மாநிலம்

தமிழ்நாடு

பாண்டிய மன்னர் ஒருவர் தன்னுடைய குருவிடம், மந்திர உபதேசம் பெற்று, தனது ஆட்சிக்கு உட்பட்டிருந்த செவ்வாய்பேட்டையில் பெருமாள் எழுந்தருள பக்தர்களுடன் சேர்ந்து கடும் தவம் புரிந்தார். தவத்தை ஏற்ற பெருமாள், திருமணக்கோலத்தில் தாயார்களுடன் காட்சி தந்தார். தான் கண்ட பெருமாளுக்கு பிரசன்ன வெங்கடாஜலபதி என்று பெயரிட்ட மன்னர், தன் முன்னால் தோன்றிய பெருமாளைப் போலவே சிலை வடித்தார். பின்பு கோயில் கட்டப்பட்டது. மீன் சின்னத்தையும் பொறித்தார். திருப்பதி ஏழுமலையானுக்கு செலுத்த வேண்டிய காணிக்கை, நேர்த்திக் கடனைக் கூட பிரசன்ன வெங்கடாஜலபதிக்கு செலுத்துகின்றனர்.

இங்குள்ள கருடாழ்வாருக்கு வஸ்திரம் சாத்தி வணங்குவதால் தோஷங்கள் நீங்குவதாக நம்பிக்கை. இவருக்கு புரட்டாசி சனிக்கிழமைகளில் திருமஞ்சனமும், அலங்காரமும் செய்து வணங்குவதால் நல்ல பலன் கிடைக்கிறது. இங்குள்ள அனுமானை வழிபட்டால் அறிவு, பலம், தைரியம், கீர்த்தி, செல்வாக்கு வளரும்.