Monthly Archives: February 2012

அருள்மிகு ராதா கிருஷ்ணர் திருக்கோயில், புது நத்தம் ரோடு, திருப்பாலை

அருள்மிகு ராதா கிருஷ்ணர் திருக்கோயில், புது நத்தம் ரோடு, திருப்பாலை, மதுரை மாவட்டம்.

+91 452 2681079, 95850 46910 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 3 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

ராதா கிருஷ்ணர்

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

திருப்பாலை

மாவட்டம்

மதுரை

மாநிலம்

தமிழ்நாடு

ராதை கண்ணன் மீது கொண்ட காதலுக்கு அடையாளமாக பகவான் ராமகிருஷ்ணர் சொன்ன ஒரு கதை. ஒருசமயம் தன் கோபாலனைப் பற்றிய செய்தி ஒன்றுமே யசோதைக்கு தெரியாமல் போயிற்று. “கோபாலன் எங்கே போய் விட்டான். அவனை நீண்ட நாட்களாகக் காணவில்லையே அவனைப் பார்க்காமல் என்னால் இருக்க முடியாதே. அவன் பசி தாங்க மாட்டானே. இப்போது பெரியவன் ஆகி விட்டான். வெண்ணெய் திருட இப்போது போவதில்லையேஎன வருந்திக் கொண்டிருந்தவளுக்கு ராதையின் நினைவு வந்தது. “ராதாவிடம் கேட்டால் தெரிந்து விடும். இதற்குப் போய் கவலைப்பட்டோமே! அவளிடம் சொல்லாமல் இந்த மாயக்கண்ணன் எங்கும் போக மாட்டான். ராதையும் அவனது ஒவ்வொரு அசைவையும் கவனித்துக் கொண்டிருப்பவள். கண்ணன் இல்லா விட்டால் ராதை இல்லைஎனக் கருதியவள் ராதையின் வீட்டிற்குச் சென்றாள்.

ராதா. கண்ணனைப் பற்றிய சேதி எதாவது உனக்கு தெரியுமா? அவனைக் காணவில்லை. எங்கே போனான்? உன்னிடம் சொன்னானா?” பதைபதைப்புடன் கேட்டாள் யசோதா. அப்போது ராதை தெய்வீகப்பரவச நிலையில் ஆழ்ந்திருந்தாள். யசோதை கேட்டது அவள் காதில் விழவில்லை. யசோதை அவள் கண் விழிக்கட்டும் எனக் காத்திருந்தாள். சிறிது நேரத்திற்கு பிறகு ராதைக்கு மெல்ல மெல்ல தெய்வீகப் பரவச நிலை கலைந்து உலக நினைவு திரும்பியது. தன் முன்னால் அமர்த்திருந்த யசோதையைக் கண்டதும் அவள் முன் விழுந்து வணங்கினாள். பிறகு தன்னைத்தேடி வந்ததற்கான காரணத்தைக் கேட்டாள். யசோதை கண்ணனைக் காணவில்லை, அவன் எங்கே?” என பரபரப்பாகக் கேட்டாள். ராதா இதைக் கேட்டு எந்த பரபரப்பையும் முகத்தில் காட்டிக் கொள்ளவில்லை.

அருள்மிகு ஜெனகை நாராயணப் பெருமாள் திருக்கோயில், சோழவந்தான்

அருள்மிகு ஜெனகை நாராயணப் பெருமாள் திருக்கோயில், சோழவந்தான், மதுரை மாவட்டம்.

+91-4543-258987, 94867 31155 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

நாராயணன்

தாயார்

ஜெனகைவல்லி, ஸ்ரீ‌தேவி, பூதேவி

ஆகமம்

பாஞ்ராத்ரம்

பழமை

500 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்

ஜனகையம்பதி

ஊர்

சோழவந்தான்

மாவட்டம்

மதுரை

மாநிலம்

தமிழ்நாடு

ஜனகனின் மகள் சீதையாக மகாலட்சுமியே பிறந்து பெருமை சேர்த்தாள். மகரிஷியான ஜனகனுக்கோ தம்மிடம் வளரும் இந்தக் குழந்தை யார் என்பதை உணர முடிந்தது. மகாலட்சுமியை எந்த மனிதனுக்கு மணம் முடிப்பது என்பது பெரிய பாரமாகவே இருந்தது. சாதாரணமான பெண்ணைப் பெற்றவனுக்கே மாப்பிள்ளை கிடைக்க பாடாய்பட வேண்டியிருக்க திருமகளுக்கு எப்படி மாப்பிள்ளை தேடுவது என்ற கவலையில் ஜனகன் துடித்தார்.

இதற்காகவே நாராயணனே பிறப்பெடுத்து வந்து இந்தப் பெண்னண கல்யாணம் செய்து கொண்டால் பாரம் நீங்கும‌ே என்று கவலைப்பட்டு சோழவந்தானில் வந்து தவமிருந்தான். அதுவே இத்தலம் அமைய காரணமாக உள்ளது. ஸ்ரீமன் நாராயணனை மாப்பிள்ளையாக அடையவேண்டித் தவமிருந்த ஜனகனுக்கு நினைவுச் சின்னம் ஒன்று இருக்கிறது என்றால் அது சோழவந்தான் ஜனகை நாராயணன் கோயில்தான். ஜனகனின் தவப்பயனால் ஸ்ரீமன் நாராயணனே ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியாக வந்து சீ‌தை‌யைக் கைபிடித்தார். இந்த பெரும் செயல் செய்த ஜனகனுக்கு நன்றி உணர்வோடு உள்ள கோயில்தான் இது.