Monthly Archives: November 2011

அருள்மிகு சலநாதீஸ்வரர் உடனுறை கிரிராஜ கன்னிகாம்பாள் திருக்கோயில், தக்கோலம்

அருள்மிகு சலநாதீஸ்வரர் உடனுறை கிரிராஜ கன்னிகாம்பாள் திருக்கோயில், தக்கோலம், வேலூர் மாவட்டம்.

+91- 4177-246 427 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 7 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 5 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சலநாதீஸ்வரர்
அம்மன் கிரிராஜ கன்னிகாம்பாள்
தல விருட்சம் தக்கோலம்
தீர்த்தம் பார்வதி சத்ய கங்கை தீர்த்தம், குசத்தலை நதி
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருவூறல்
ஊர் தக்கோலம்
மாவட்டம் வேலூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் அப்பர், சம்பந்தர், சுந்தரர்

தேவகுருவாகிய வியாழனின் தம்பி உததி முனிவர். இவருக்கும் மனைவி மமதைக்கும் மகனாக தீர்க்கதர் தோன்றினார். ஒரு நாள் தீர்க்கதர் தன் ஆசிரமத்தின் அருகே தெய்வப்பசுவாகிய காமதேனு வரக்கண்டார். தாம் நடத்தும் வேள்விக்கு வந்தவர்களை உபசரிப்பதற்காக காமதேனுவை தம்முடன் இருக்குமாறு அவர் வேண்டினார். இந்திரன் கூறாமல் தங்க மாட்டேன் என காமதேனு மறுத்தது. முனிவர் அதை கட்டிப்போட முயன்றார். காமதேனு அவரை இழிந்த தொழில்களைச் செய்யும் நிலை ஏற்படும் என்று சபித்தது. முனிவரும் காமதேனுவை சாதாரணப்பசுவாக போகும்படி சபித்தார். உததி முனிவர் தன் மகன் இழிந்த செயல்கள் செய்வது கண்டு வருந்தினார்.

நாரதரின் அறிவுரைப்படி தன் மகனுக்காக இத்தலம் வந்து சிவனை வழிபட்டார். இறைவன் வெளிப்பட்டு,”இக்குறை தீர நந்தியை வழிபட்டு, அவர் வாயிலிருந்து தெய்வகங்கையை வரவழைத்து, அதன் மூலம் தமக்கு அபிஷேகம் செய்தால் பாவம் நீங்கும்எனக் கூறி மறைந்தார்.

அருள்மிகு மணிகண்டீஸ்வரர் கோயில், திருமால்பூர்

அருள்மிகு மணிகண்டீஸ்வரர் கோயில், திருமால்பூர், திருமாற்பேறு, வேலூர் மாவட்டம்.

காலை 6 மணி முதல் மதியம் 12மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் மணிகண்டீஸ்வரர்
அம்மன் அஞ்சனாட்சி
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் சக்கர தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் ஹரிசக்கரபும், திருமாற்பேறு
ஊர் திருமால்பூர்
மாவட்டம் வேலூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் திருநாவுக்கரசர், சம்பந்தர்

குபன் என்ற அரசனுக்காக திருமால், துதீசி முனிவர் மீது தனது சக்கரத்தை வீசினார். ஆனால், அது முனிவரின் தெய்வீக உடம்பில் பட்டு முனை மழுங்கிவிட்டது. கவலையடைந்தார் திருமால். என்ன செய்வதென்று தேவர்களுடன் கலந்தாலோசித்து, சலந்தராசுரனை அழிப்பதற்காக உண்டாக்கிய சுதர்சன சக்கரம் சிவனிடம் உள்ளதை அறிந்தார். உடனே இத்தலம் வந்து அம்பிகை பூஜித்த இந்த இலிங்கத்தை தினமும் ஆயிரம் தாமரை மலர்களால் பூஜை செய்தார். ஒரு நாள் சிவன், திருமாலின் பக்தியை சோதிக்க, பூஜைக்கான ஆயிரம் மலர்களில் ஒன்றை மறைத்துவிட்டார். திருமால் பூஜை செய்யும் போது மலர் ஒன்று குறைய, தனது கண்ணைப்பறித்து இறைவனின் திருவடியில் அர்ப்பணித்தார். இந்த பூஜைக்கு மகிழ்ந்த சிவன், “தாமரை மலருக்காக உனது கண்ணை எடுத்து பூஜித்ததால், தாமரை போலவே உனக்கு கண் கொடுக்கிறேன்.

இதனால் உன்னை பதுமாஷன்என அழைப்பார்கள். இத்தலமும் திருமாற்பேறுஎன அழைக்கப்படும்எனக்கூறி திருமால் வேண்டிய சக்கரத்தை கொடுத்தருளினார். மேலும் அவர் திருமாலிடம்,”நீ கூறி வழிபட்ட ஆயிரம் நாமங்களால் என்னை பூஜிப்பவர்களுக்கு முக்தியை கொடுப்பேன். அதைச் சொல்ல இயலாதவர்கள் என்னை, தீண்டச்சிவந்தார், சாதரூபர், மணிகண்டர், தயாநிதியார், பவளமலையார், வாட்டந்தவிர்த்தார், சாகிசனர் ஆகிய திருநாமங்கள் சொல்லி பூஜித்தால் வேண்டிய வரம் தருவேன்என்று அருளினார். “இத்தலத்தில் ஒரு கண நேரம் தங்கியவர்களுக்கும் முக்தியளிக்க வேண்டும் எனவும், இங்கு வழிபட்டால் அனைத்துக் கோயில்களிலுள்ள இலிங்கங்களையும் வழிபட்ட பலன் கிடைக்க வேண்டும்எனவும் வரம் பெற்றார். சிவன் மகிழ்ந்து திருமால் கேட்ட வரம் தந்தருளியதாக வரலாறு.