Monthly Archives: November 2011

அருள்மிகு வில்வநாதேஸ்வரர் திருகோயில், திருவல்லம்

அருள்மிகு வில்வநாதேஸ்வரர் திருகோயில், திருவல்லம், வேலூர் மாவட்டம்.

91- 416-223 6088 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் வில்வநாதேஸ்வரர்
அம்மன் வல்லாம்பிகை
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் நீவாநதி, கவுரி தீர்த்தம்
ஆகமம் சிவாகமம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருவலம்
ஊர் திருவல்லம்
மாவட்டம் வேலூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் திருநாவுக்கரசர், சம்பந்தர்

திருவல்லத்தில் வாழ்ந்த அர்ச்சகர் ஒருவர், அருகில் உள்ள கஞ்சன் மலையிலிருந்து சிவனின் அபிஷேகத்திற்காக தீர்த்தம் கொண்டு வருவது வழக்கம். அந்த மலையில் இருந்த கஞ்சன் என்ற முரடன் தொல்லை கொடுத்து வந்தான். அர்ச்சகரும் இறைவனிடம் முறையிட, ஈசன் தன் வாகனமான நந்தியிடம் அந்த முரடனை அடக்குமாறு கட்டளையிட்டார். நந்தி, அரக்கனை எட்டு பாகங்களாக கிழித்துப் போட்டது. சிவனிடம் சாகா வரம் பெற்றிருந்த அந்த முரடன், நந்தியின் தாக்குதலில் இருந்து தப்பி விட்டான். அவன் மீண்டும் வருகிறானா என்பதை கண்காணிக்கும் வகையில், நந்தி சிவனை நோக்கி இராமல், கோயில் வாசலை நோக்கி திரும்பியுள்ளது.

முழு முதற்கடவுளான விநாயகர் அம்மையப்பன் தான் உலகம்,” “உலகம் தான் அம்மையப்பன்,” என உலகிற்கு அறிவித்த தலமே திருவல்லம். “வலம்வந்ததை உணர்த்துவதால், “திருவலம்என்றாகி, நாளடைவில் திருவல்லம்ஆயிற்று. இங்குள்ள தலவிநாயகர் கனிவாங்கிய பிள்ளையார்என அழைக்கப்படுகிறார். அதற்கேற்றாற் போல் துதிக்கையில் மாங்கனியை வைத்து வடக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். தன் வாகனமான மூஞ்சூரின் மீது அமர்ந்திருக்கிறார். முருகனுக்கும், விநாயகருக்கும் சிவன் வைத்த போட்டியில் வென்ற விநாயகர் ஞானப்பழத்துடன் இத்தலத்தில் வந்து அமர்ந்ததாக வரலாறு. எனவே, இவரை வணங்குவோர் பிறப்பற்ற நிலையை அடைவர். இத்தல முருகனை அருணகிரிநாதர் தன் திருப்புகழில் பாடியுள்ளார்.

சுவாமி சன்னதியின் வலது பக்கம் தொட்டி போன்ற அமைப்பில் ஜலகண்டேஸ்வரர் என்னும் பாதாளேஸ்வரர் எழுந்தருளியுள்ளார். மழை வேண்டி இவருக்கு வழிபாடு செய்யப்படுகிறது. சிவபெருமானின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களுல் இதுவும் ஒன்று.

அருள்மிகு ஆட்சீஸ்வரர் திருக்கோயில், அச்சிறுபாக்கம்

அருள்மிகு ஆட்சீஸ்வரர் திருக்கோயில், அச்சிறுபாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம்.

+91- 44 – 2752 3019, 98423 – 09534 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் ஆட்சிபுரீஸ்வரர், உமைஆட்சீஸ்வரர் என இரண்டு மூலவர்கள்
அம்மன் இளங்கிளிஅம்மை, உமையாம்பிகை என இரண்டு அம்மன்கள்
தல விருட்சம் சரக்கொன்றை
தீர்த்தம் தேவ, பானு மற்றும் சங்கு தீர்த்தம்
ஆகமம் காமீகம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் அச்சுஇறுபாகம்
ஊர் அச்சிறுபாக்கம்
மாவட்டம் காஞ்சிபுரம்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் திருஞானசம்பந்தர்

பிரம்மாவிடம் வரம் பெற்ற தாரகன், கமலாட்சன், வித்வன்மாலி ஆகிய திரிபுர(மூன்று) அசுரர்கள் சேர்ந்துகொண்டு தேவர்களை கொடுமைப்படுத்தி வந்தனர். அசுரர்களை எதிர்க்க முடியாத தேவர்கள், அவர்களை அழித்து தங்களை காக்கும்படி சிவனிடம் வேண்டினர். தேவர்களுக்கு இரங்கிய சிவன், வானுலகு மற்றும் பாதாள உலகை இணைத்துத் தேராக்கி, அதில் ஏறி அசுரர்களை அழிக்கச் சென்றார்.

எந்த ஒரு செயலை செய்யும் முன்பாக முழு முதற்கடவுளான விநாயகரை வணங்கிவிட்டு அல்லது மனதில் நினைத்துவிட்டோதான் செல்ல வேண்டும் என்பது நியதி. சிவனுக்கும் இந்த நியதி பொருந்தும். ஆனால் அசுரர்களை அழிக்க வேண்டும் என்ற வேகத்தில் விநாயகரை நினைக்காமல் சென்றார் சிவன். அவருடன் சென்ற தேவர்களோ சிவனே நம்முடன் இருக்கும்போது வேறென்ன துணை வேண்டும்என்ற எண்ணத்தில் அவரை வணங்காமல் சென்றனர். கோபம் கொண்ட விநாயகர், தேரின் அச்சை முறித்து, சிவனை செல்லவிடாமல் தடுத்து விட்டார். தேர் அங்கேயே நின்றது. இது விநாயகரின் செயல்தான் என உணர்ந்த சிவன், அவரை மனதில் நினைத்து, செல்லும் செயல் சிறப்பாய் நடந்திடக் காவலனாய் இருக்கும்படி வேண்டினார். தந்தை சொல்கேட்ட விநாயகர் தேர் அச்சை சரியாக்கினார். பின் சிவன் திரிபுர அசுரர்களை அழித்தார். தேர் அச்சு இற்று(முறிந்து) நின்ற இடமென்பதால் இத்தலம் அச்சு இறு பாகம்என்றழைக்கப்பட்டு காலப்போக்கில் அச்சிறுப்பாக்கம்என்றானது. சிவன் அட்சீஸ்வரர்என்றும், “ஆட்சிபுரீஸ்வரர்என்றும் அழைக்கப்படுகிறார். கண்ணுவ முனிவர், கவுதம முனிவர் இங்கு வழிபட்டுள்ளனர்.

பாண்டிய மன்னன் ஒருவன் சிவதல யாத்திரை சென்று கொண்டிருந்தபோது இத்தலத்தின் அருகே அவனது தேர் அச்சு முறிந்தது. பணியாளர்கள் சக்கரத்தை சரிசெய்து கொண்டிருந்த போது தங்க நிறமான உடும்பு ஒன்று சென்றதைக் கண்ட மன்னன், அதனை பிடிக்கச் சென்றான். உடும்போ, ஒரு சரக்கொன்றை மரத்தினுள் புகுந்து கொண்டது. காவலர்கள் மரத்தை வெட்டியபோது, ரத்தம் வெளிப்பட்டது. உடும்பு வெட்டுப் பட்டதாக நினைத்த மன்னன் மரத்தின் அடியில் தோண்டிப்பார்த்தான். எவ்வளவோ தேடியும் உடும்பு மட்டும் அகப்படவில்லை. அன்றிரவில் மன்னனுக்கு காட்சி தந்த சிவன், உடும்பு மூலமாக தான் திருவிளையாடல் புரிந்ததை வெளிக்காட்டி இவ்விடத்தில் சுயம்புவாக எழுந்தருளியிருப்பதை உணர்த்தினார். அவருக்கு இங்கேயே கோயில் கட்ட விருப்பம் கொண்டான் மன்னன்.