அருள்மிகு மணிகண்டீஸ்வரர் கோயில், திருமால்பூர்

அருள்மிகு மணிகண்டீஸ்வரர் கோயில், திருமால்பூர், திருமாற்பேறு, வேலூர் மாவட்டம்.

காலை 6 மணி முதல் மதியம் 12மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் மணிகண்டீஸ்வரர்
அம்மன் அஞ்சனாட்சி
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் சக்கர தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் ஹரிசக்கரபும், திருமாற்பேறு
ஊர் திருமால்பூர்
மாவட்டம் வேலூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் திருநாவுக்கரசர், சம்பந்தர்

குபன் என்ற அரசனுக்காக திருமால், துதீசி முனிவர் மீது தனது சக்கரத்தை வீசினார். ஆனால், அது முனிவரின் தெய்வீக உடம்பில் பட்டு முனை மழுங்கிவிட்டது. கவலையடைந்தார் திருமால். என்ன செய்வதென்று தேவர்களுடன் கலந்தாலோசித்து, சலந்தராசுரனை அழிப்பதற்காக உண்டாக்கிய சுதர்சன சக்கரம் சிவனிடம் உள்ளதை அறிந்தார். உடனே இத்தலம் வந்து அம்பிகை பூஜித்த இந்த இலிங்கத்தை தினமும் ஆயிரம் தாமரை மலர்களால் பூஜை செய்தார். ஒரு நாள் சிவன், திருமாலின் பக்தியை சோதிக்க, பூஜைக்கான ஆயிரம் மலர்களில் ஒன்றை மறைத்துவிட்டார். திருமால் பூஜை செய்யும் போது மலர் ஒன்று குறைய, தனது கண்ணைப்பறித்து இறைவனின் திருவடியில் அர்ப்பணித்தார். இந்த பூஜைக்கு மகிழ்ந்த சிவன், “தாமரை மலருக்காக உனது கண்ணை எடுத்து பூஜித்ததால், தாமரை போலவே உனக்கு கண் கொடுக்கிறேன்.

இதனால் உன்னை பதுமாஷன்என அழைப்பார்கள். இத்தலமும் திருமாற்பேறுஎன அழைக்கப்படும்எனக்கூறி திருமால் வேண்டிய சக்கரத்தை கொடுத்தருளினார். மேலும் அவர் திருமாலிடம்,”நீ கூறி வழிபட்ட ஆயிரம் நாமங்களால் என்னை பூஜிப்பவர்களுக்கு முக்தியை கொடுப்பேன். அதைச் சொல்ல இயலாதவர்கள் என்னை, தீண்டச்சிவந்தார், சாதரூபர், மணிகண்டர், தயாநிதியார், பவளமலையார், வாட்டந்தவிர்த்தார், சாகிசனர் ஆகிய திருநாமங்கள் சொல்லி பூஜித்தால் வேண்டிய வரம் தருவேன்என்று அருளினார். “இத்தலத்தில் ஒரு கண நேரம் தங்கியவர்களுக்கும் முக்தியளிக்க வேண்டும் எனவும், இங்கு வழிபட்டால் அனைத்துக் கோயில்களிலுள்ள இலிங்கங்களையும் வழிபட்ட பலன் கிடைக்க வேண்டும்எனவும் வரம் பெற்றார். சிவன் மகிழ்ந்து திருமால் கேட்ட வரம் தந்தருளியதாக வரலாறு.

பராந்தக சோழன் நினைவாக அமைக்கப்பட்ட சோளீஸ்வரர் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். எட்டு கரத்துடன் துர்க்கை நளினமாக காட்சி தருகிறாள். சிவன் கோயில் என்றாலும், பெருமாள் அருள் பெற்ற தலம் என்பதால் பிரம்மோற்ஸவ காலத்தில் கருடசேவை நடக்கிறது. பத்து கரங்களுடன் வல்லபை விநாயகரும் அனுக்கிரகம் புரிகிறார். சுமார் 1.20 ஏக்கர் அளவில் சுற்று மதில் சுவர்களுடன் கிழக்கு நோக்கிய ராஜகோபுரமும், இரண்டு பிரகாரங்களுடன் கோயில் அமைந்துள்ளது. கோயிலுக்கு எதிரில் சக்கர தீர்த்தம். சுவாமி சன்னதி கிழக்கு நோக்கியும், அம்மன் சன்னதி தெற்கு நோக்கியும் அமைந்துள்ளது. உள் பிரகாரத்தில் விநாயகர், சிதம்பரேஸ்வரர், சோமாஸ்கந்தர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், நடராஜர், கஜலட்சுமி முதலிய சன்னதிகள் உள்ளன.

பார்வதிதேவியால் விருதசீர நதிக்கரையில் மணலால் அமைக்கப்பட்ட இலிங்கம் இங்கு மூலவராக உள்ளது. அது கரைந்து விடாமல் இருக்க இலிங்கத்தின் மீது, குவளை (செம்பால் செய்யப்பட்ட கவசம்) சாத்தியே அபிஷேகம் செய்யப்படுகிறது. சிவபெருமானை மூலஸ்தானம் அருகே திருமால் கைகூப்பி வணங்கிய நிலையில் செந்தாமரைக்கண்ணப்பெருமாள்என்ற நாமத்துடன் உள்ளார். மூலவரின் அருகே அதிகார நந்தி நின்ற நிலையில் உள்ளார்.

தேவாரப்பதிகம்:

சாத்திரம் பேசும் சழக்கர்காள் கோத்திரமும் குலமும் கொண்டு என்செய்வீர் பாத்திரம் சிவம் என்று பணிதிரேல் மாத்திரைக்குள் அருளும் மாற்பேறரே.

திருநாவுக்கரசர்

தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 11வது தலம்.

திருவிழா:

மாசிமாதம் நடக்கும் 10 நாள் பிரமோற்ஸவத்தில் மகம் நட்சத்திரத்தன்று தீர்த்தவாரி நடக்கும். இந்த திருவிழாவில் தான் பெருமாளுக்குரிய கருட சேவையும் நடக்கிறது. ஆடி வெள்ளி, ஆடிப்பூரம், ஆனித்திருமஞ்சனம், திருக்கார்த்திகை, மார்கழி திருவாதிரையும் விசேஷம்.

பிரார்த்தனை:

பெருமாள் வணங்கி, சக்கரம் பெற்ற தலமாதலால், இங்கு வழிபடுவோருக்கு எதிரி பயம் இருக்காது. வழக்குகளில் வெற்றி பெறலாம் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள்நிறைவேறியவர்கள்றைவனுக்கு திருமுழுக்காட்டுசெய்து, புத்தாடைஅணிவித்து, சிறப்புபூசைகள் செய்து நேர்த்திக்கடன்செலுத்துகின்றனர்.

வழிகாட்டி :

காஞ்சிபுரத்திலிருந்து (22 கி.மீ) பனப்பாக்கம் வழியாக ஆற்காடு செல்லும் பஸ்சில் கோயிலுக்கு செல்லலாம். சென்னையிலிருந்து வருபவர்கள் அரக்கோணம் வழியாக காஞ்சிபுரம் வரும் வழியில் திருமால்பூரில் இறங்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *