Category Archives: ஆலயங்கள்

அருள்மிகு அரசுரி அம்பே மா (அம்பாஜி) அம்மன் திருக்கோயில், அம்பாஜி, பனஸ்கந்தா

அருள்மிகு அரசுரி அம்பே மா (அம்பாஜி) அம்மன் திருக்கோயில் அம்பாஜி, பனஸ்கந்தா-385 110. அகமதாபாத் மாவட்டம். குஜராத் மாநிலம்.

+91-2749-262 136,264 536,262 626, 262 930

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – அம்பே மா அம்மன் (“சச்சார் சவுக்வாலி‘)

தல விருட்சம்: – அரசமரம்

பழமை: – 1000-2000 வருடங்களுக்கு முன்

ஊர்: – அம்பாஜி, பனஸ்கந்தா

மாவட்டம்: – அகமதாபாத்

மாநிலம்: – குஜராத்

மகிஷாசுரன் என்ற அரக்கன் தன் தவ வலி மையால், எந்த ஆயுதத்தாலும் தனக்கு அழிவு வரக்கூடாது என அக்னிதேவனிடம் வரம் வாங்கினான். இந்த வரத்தின் வலிமையால் இந்திர லோகத்தை வளைத்தான். பின்னர் ஆசை மிகுதியால் வைகுண்டத்தையும், கைலா யத்தையும் பிடிக்க எண்ணினான். வரத்தின் பலத்தால் சிவ நாராயணர்களால் அவனை ஏதும் செய்ய முடியவில்லை.

இந்த நேரத்தில், வரங்களைத் தவறாகப் பயன் படுத்துவோரை அழித்து ஒழிக்கும் தேவி பகவதியை அவர்கள் வேண்டினர். அவள் அந்த அசுரனைக் கொன்று இத்தலத்தில் தங்கிப் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறாள்.

அருள்மிகு அரைக்காசு அம்மன் திருக்கோயில், ரத்னமங்கலம்

அருள்மிகு அரைக்காசு அம்மன் திருக்கோயில், ரத்னமங்கலம், வண்டலூர்-600 048. சென்னை .

+9144 2431 4572, 94440 20084 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 5.30 மணி முதல் மதியம் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்

மூலவர்: – அரைக்காசு அம்மன்

தல விருட்சம்: – வில்வம்

பழமை: – 500 வருடங்களுக்கு முன்

ஊர்: – ரத்னமங்கலம், வண்டலூர் அருகில்

மாவட்டம்: – சென்னை

மாநிலம்: – தமிழ்நாடு

புதுக்கோட்டைப் பகுதியில் ஆட்சி செய்து வந்த மன்னர்கள், திருக்கோகர்ணம் பிரகதாம்பாளை விருப்ப தெய்வமாக வணங்கி வந்தனர். இவளுக்கு நவராத்திரி விழா கொண்டாடியபோது, பக்தர்களுக்கு பிரசாதமாக அரிசி, வெல்லம் மற்றும் அப்போது புழக்கத்தில் இருந்த அரைக்காசில், அம்பாள் உருவத்தை பொறித்துக் கொடுத்தனர். இதனால் இந்த அம்பிகைக்கு, “அரைக்காசு அம்மன்என்ற பெயர் ஏற்பட்டு விட்டது.

ஒருமுறை, மன்னர் ஒருவர் தான் தொலைத்த பொருள் மீண்டும் கிடைக்க வேண்டி இந்த அம்பாளிடம் வேண்டினார். அதுவும் கிடைத்து விட்டது. அன்றுமுதல் தொலைந்த பொருளை மீட்டுத்தரும் தெய்வமாகவே இவளை மக்கள் கருதினர்.