Category Archives: ஆலயங்கள்

அருள்மிகு லட்சுமி நாராயணி கோயில், திருமலைக்கோடி (ஸ்ரீபுரம்)

அருள்மிகு லட்சுமி நாராயணி கோயில், திருமலைக்கோடி (ஸ்ரீபுரம்), வேலூர் – 632 055, வேலூர் மாவட்டம்
*************************************************************************************************************

+0416 227 1855, 227 1202 (மாற்றங்களுக்குட்பட்டவை)

சிதம்பரம் நடராசர் சன்னதியின் மேற்கூரை தங்கத்தால் வேயப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சி, பழநி முருகன், புதுச்சேரி மணக்குள விநாயகர், திருப்பதி வெங்கடாசலபதி போன்ற பல பெரிய கோயில்களில் கருவறை விமானங்கள் தங்கத்தால் அமைக்கப்பட்டுள்ளன. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் சீக்கியர்களுக்குப் பொற்கோயில் உள்ளது.

பச்சைப்பசேலென்று பரந்து விரிந்த புல்வெளியினூடே கிட்டத்தட்ட 100 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது ஸ்ரீநாராயணி ஆலயம்.

வேலூர் ஸ்ரீபுரம் லட்சுமி நாராயணிகோயில் 5ஆயிரம் சதுர அடிபரப்பளவும் தங்கத்தால் இழைக்கப்பட்டுள்ளது. 1500 கிலோ தங்கத்தில், ரூ.350 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.

ஏழுமலையானின் பார்வையில் திருமகள்

வேலூர் மகாலட்சுமி, திருமலையில் அருளும் திருப்பதி வெங்கடாசலபதியின் கடைக்கண் பார்வைபடும்படியாக அமைக்கப்பட்டிருக்கிறாள். ஆரம்பகாலத்தில், இப்பகுதி திருமலைக்கோடி என்று அழைக்கப்பட்டது. மகாலட்சுமி கோயில் கட்டியபிறகு ஸ்ரீபுரம்என்று பெயர் மாற்றப்பட்டது. “ஸ்ரீஎன்பது மகாலட்சுமியை குறிக்கும். திருப்பதி வெங்கடாசலபதியைத் தரிசிப்பவர்கள், அவரது துணைவி மகாலட்சுமி வாசம் செய்யும் வேலூர் நாராயணி பீடத்தையும் தரிசிப்பது அவசியம்.

அருள்மிகு கும்மாளம்மன் கோயில், தண்டையார்பேட்டை

அருள்மிகு கும்மாளம்மன் கோயில், சென்னை தண்டையார்பேட்டை
*****************************************************************************
காலரா மருத்துவமனை அருகில்

காலை 6 முதல் 10 மணி வரையிலும்; மாலை 5 முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

கும்மாளம்மனை மனமுருகி வணங்குபவர்கள், தங்கள் வாழ்வில் துன்பங்கள் விலகி, விரைவில் வித்தியாசத்தை உணர்வது நிச்சயம்.

அன்னை பராசக்தியின் ஓர் அம்சம்தான் கும்மாளம்மன். இந்த அம்மனே வடக்கில் சந்தோஷிமாதா என்று அழைக்கப்படுகிறாள்.

பூஜைகள், யாகங்களின் போது, தெய்வங்களை கலசத்தில் இருத்தியே வழிபடுவது ஆகமவிதி. அந்த முறைப்படியே சந்தோஷிமாதா வழிபாடும் நடத்தப்படுகிறது. அப்படிக் கும்பத்தில் ஆவாகனம் செய்யப்படுபவள் என்பதால் கும்பத்தை ஆளும் அம்மன் என்ற பொருளில் கும்பாளம்மன் என்றழைக்கப்பட்டவளே, இன்று மருவி, கும்மாளம்மன் என்ற திருப்பெயரோடு அழைக்கப்படுகிறாள்.

சுமார் நூற்றைம்பது ஆண்டுகள் பழமையான ஆலயம். அக்காலத்தில் தென்னந்தோப்புகள் நிறைந்த இப்பகுதியில், கடற்கரையை நோக்கி எழுப்பப்பட்ட இவ்வாலயத்தில், கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளாக பல சன்னதிகள் கட்டப்பட்டு சிறப்புடன் விளங்கிவருகிறது.