விவசாயம் செழிக்க

விவசாயம் செழிக்க

பிஜப்பூர்: சத்தீஷ்கர் மாநிலத்தில் விவசாயம் செழிக்க வேண்டி 7 வயது சிறுமி நரபலி கொடுக்கப்பட்டதாக எழுந்த புகாரினை தொடர்ந்து இரு விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். சத்தீஷ்கர் மாநிலம் ராய்ப்பூரின் பிஜப்பூர் மாவட்டம் மிகவும் பின்தங்கிய மாவட்டமான இங்கு விவசாயம் சரிவர நடக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நி‌லையில் இம்மாவட்டத்தைச் சேர்ந்த லலிதாதாட்டி,7 என்ற சிறுமி கடந்த அக்டோபர் மாதம் முதல் காணாமல் போனார். இவரை விவசாயம் செழிக்கவேண்டிப் பலிகொடுத்துள்ளனர். என்ன கொடுமை! அறியாமை!

உலகம் முழுவதும் இயற்கை பேரிடர்கள் அடிக்கடி ஏற்படுகின்றன. பூமி சூடாகுதல், பருவகால மாற்றம், பனி மலை உருகுதல், கடல்மட்டம் உயர்தல், சுனாமி, நிலநடுக்கம் போன்றவை இயற்கையாக ஏற்படும் பேரிடர்கள் இல்லை. மனிதனின் தவறான நடவடிக்கைகளாலேயே இவை ஏற்படுகின்றன. மரங்களை வெட்டுதல், காடுகளை அழித்தல், மலைகளை குடைதல் போன்ற, மனிதர்களின் தவறான நடவடிக்கைகள் காரணமாகவே இது போன்ற நிலை ஏற்படுகிறது. நன்செய் நிலங்கள் தற்போது குறைந்துள்ளது. விளை நிலங்களை விவசாயம் அல்லாத தேவைகளுக்கு பயன்படுத்துவது சட்டவிரோதம். தடை செய்யப்பட்ட விதை, ரசாயன உரம் இவற்றைவிட, இயற்கைச் சூழலை ஆழ்ந்து புரிந்துகொண்டு, அதற்கேற்ற வகையில் விவசாயம் செய்ய வேண்டும்.”

நம்மாழ்வார்

விவசாயம் செழிக்க நிலம் வளமானதாக இருக்க வேண்டும். நிலத்தின் வளத்தை கடந்த ஐம்பது ஆண்டு காலமாக நாம் இரசாயன உரம், பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்தி மண்ணை மலட்டுத் தன்மைக்கு கொண்டு வந்துவிட்டோம்.

மக்கள் தொகை வளர்ச்சிக்கேற்ப உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக பசுமைப் புரட்சிஎன்ற பெயரில் நவீன இரசாயன முறைகள் விவசாயத்தில் புகுத்தப்பட்டுள்ளன. இதனால் மண்ணின் அமைப்பும் அதில் உள்ள நீரும் விஷமாக மாறுகின்றது. இரசாயனப் பூச்சிக் கொல்லிகளை பயிர்களுக்குத் தெளிப்பதால் அது காற்றில் பரவி அதை சுவாசிக்கும் மனிதனுக்கு ஆஸ்துமா, சைனஸ் போன்ற வியாதிகளை உருவாக்குகின்றன. செயற்கை உரங்களை இடுவதால் பயிர்கள் பசுமையாக, மிருதுவாகப் பூச்சி எதிர்ப்பு திறனின்றி வளர்கின்றன. பயிர்கள், பூச்சிகள் தாக்குதலுக்கு உள்ளாகிறது. இந்த பூச்சிகளை அழிக்க மீண்டும் இராசயனப் பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்துகின்றோம். இதனால் மண் கார அமிலத் தன்மை அவ்வப்போது மாற்றப்படுகின்றது. மண்ணில் உள்ள பயன்தரக் கூடிய நுண்ணுயிர்கள், மண் புழுக்கள் அழிக்கப்படுகின்றன. இதனால் மண் வளம் குறைந்து உப்பு மண்ணாக மாறி வளம் குறைந்து பலனற்ற மண்ணாகி மாறிவரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

எனவே விவசாயிகள் குறுகிய கால நன்மைக்காக இரசாயன உரங்களைப் பயன்படுத்துவதை தவிர்த்து இயற்கை உரங்களைத் தயாரித்துப் பயன்படுத்த முன் வரவேண்டும். இயற்கை உரம் பயன்படுத்தும்போது பக்க விளைவுகள் அற்ற, உயிராற்றல் கொண்ட, நீண்ட நாள் பயன்தரக்கூடிய இயற்கை விவசாய வாழ்வு முறை கிடைக்கும்.

வேளாண் பயிர்களில் ஏற்படும் பூச்சிகள் அவைகளை எதிர் கொள்ளும் விதம் பற்றி இனி காண்போம்.

பூச்சிகள், கரையான்கள் மற்றும் புழுக்கள் முதலியன தாவரங்களுக்கு பாதிப்பை விளைவிக்கின்றன. எனவே இவைகள் பெஸ்ட் (Pest) எனப்படும். மனிதனின் இயல்பான சுகாதாரத்தையும், பொருளாதார நிலையையும், தாவர வளர்ச்சியையும் குறைக்கின்ற பூச்சியினங்கள் ‘பெஸ்ட்ஸ்’ என வரையறுக்கலாம். இவைகள் உற்பத்தியின் அளவையும், அதன் தன்மையையும் குறைக்கின்றன. தானிய உற்பத்தியில் 30% பூச்சிகளின் செயல்களினால் அழிக்கப்படுகின்றது.

மேலும் பூச்சிகள் வேளாண் பயிர்களை உணவிற்காக நாடுகின்றன. மேற்கண்ட பூச்சி வகைகள் தாவரங்களின் பல பாகங்களில் அழிவை உண்டு பண்ணுகின்றன. அதாவது விதைகள், தாவரத்தின் தண்டுகள், வேர்கள், மலர், மொட்டுகள், கனிகள் ஆகிய பாகங்களில் தாவர வளர்ச்சியை சிதைக்கின்றன.

பயிர்களுக்கு சேதத்தை உண்டுபண்ணும் இவ்வகைப் பூச்சிகளை அழிக்க நாம் பொதுவாக இரசாயண பூச்சி கொல்லி மருந்துகளை பயன்படுத்துகின்றோம். (.ம்.) டயல்டிரின், எண்ட்ரின், ம்ம்வீ, யக்ஷிளீ, டயாசினோன், பெனிட்ரோதியான், பென்தியான், டெமக்ரான், எக்காளஸ், மானோ குட்டபாஸ், டைத்தீன், செவீன் பவுடர், எண்டோசல்பான் இன்னும் எத்தனை வகையோ

பயிர்களுக்கு இரசாயனப் பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்துவதற்கு பதிலாக மூலிகை மூலம் பூச்சி விரட்டி கசாயம்பயன்படுத்துவது மிகவும் நல்லது. அவை தயாரிப்பது மிகவும் எளிது, சிக்கனமானதும் கூட; பக்க விளைவு இல்லாதது.

பூச்சி விரட்டி செய்முறையை வேளாண் அலுவலகங்களிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

இதன் பயன்கள் :-

இக் கரைசலை பயன்படுத்துவதால் நன்மை தரும் பூச்சிகள் அழிவதில்லை. பயிர்களுக்குக் கேடு விளைவிக்கும் பூச்சிகள் விரட்டியடிக்கப்படுகின்றன.

பயிருக்கு இக் கரைசல் உரமாகவும் பயன்படுகின்றது (75% தாழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து; 25% பூச்சி விரட்டியாக பயன்படுகின்றது). மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் பாதுகாக்கப்படுகின்றன.

பயிர் கருமையாகவும், விளைச்சல் அமோகமாகவும் இருக்க இக் கரைசல் உதவுகின்றது. மண் வளம் பாதுகாக்கப்பட்டு நஞ்சு இல்லாத உணவு கிடைக்கின்றது. இரசாயனப் பூச்சி கொல்லி மருந்து செலவைவிட இக் கசாயம் தயாரிக்க செலவு மிகவும் குறைவு.

அத்துடன் கீழ்கண்ட ஆலயங்களுக்குச் சென்று இறைவனை வழிபடப் பலன் கூடுமென்பது நம்பிக்கை.

அருள்மிகு கலியுகவரதராஜப் பெருமாள் கல்லங்குறிச்சி அரியலூர்

கொண்டத்து காளியம்மன்

பாரியூர்

ஈரோடு

சிவக்கொழுந்தீஸ்வரர் தீர்த்தனகிரி கடலூர்
அருங்கரையம்மன் சின்னதாராபுரம் கரூர்

பாலசுப்ரமணிய சுவாமி

வேலாயுதம்பாளையம்

கரூர்

கொண்டத்துக் காளியம்மன்

பெருமாநல்லூர்

கோயம்புத்தூர்

காரணவிநாயகர் மத்தம்பாளையம் கோயம்புத்தூர்

கொப்புடை நாயகி அம்மன்

காரைக்குடி

சிவகங்கை

முத்துமாரியம்மன்

தாயமங்கலம்

சிவகங்கை

சேவுகப் பெருமாள்

சிங்கம்புணரி

சிவகங்கை

பால சுப்பிரமணியர்

சீலநாயக்கன்பட்டி

சேலம்

ஜம்புகேஸ்வரர் திருவானைக்கா(வல்) திருச்சி
மிளகு பிள்ளையார் சேரன்மகாதேவி திருநெல்வேலி

முத்துக்குமாரசுவாமி

பண்பொழி

திருநெல்வேலி
சொரிமுத்து அய்யனார் காரையார் திருநெல்வேலி
நீள்நெறிநாதர் தண்டலச்சேரி திருவாரூர்
இரத்தினபுரீஸ்வரர் திருநாட்டியத்தான்குடி திருவாரூர்

கற்குவேல் அய்யனார்

காயாமொழி

தூத்துக்குடி

காளியம்மன்

ஆண்டிப்பட்டி

தேனி

கவுமாரியம்மன்

பெரியகுளம்

தேனி

இலட்சுமி நாராயணப்பெருமாள் சின்னமனூர் தேனி
திருப்பயற்றுநாதர் திருப்பயத்தங்குடி நாகப்பட்டினம்
சண்முக நாதர் விராலிமலை புதுக்கோட்டை
மொட்டை விநாயகர் கீழமாசி வீதி மதுரை
ஜெனகை நாராயணப் பெருமாள் சோழவந்தான் மதுரை
சொர்ணபுரீஸ்வரர் தென்பொன்பரப்பி விழுப்புரம்
நிதீஸ்வரர் அன்னம்புத்தூர் விழுப்புரம்
சலநாதீஸ்வரர் தக்கோலம் வேலூர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *