புத்திர தோஷம் நீங்க

புத்திர தோஷம் நீங்க

திருமணமாகி இரண்டு வருடங்களாகியும் குழந்தை உண்டாகாமல் இருந்தால்தான் தம்பதிகளில் யாருக்கேனும் பிரச்னை இருக்கமுடியும் என்று நம்மால் சொல்லமுடியும். சிலருக்கு அந்த உறவு பற்றிய போதிய அளவு விஷயம் தெரியாமல் இருக்கலாம். முட்டை வெளிப்படும் நேரம்தான் உறவுக்கு உகந்த சமயம். அந்தச் சமயத்தில் உறவு கொண்டால்தான் கருதரிப்பு ஏற்படும். அந்த தேதிகளைத் தவற விடும்போது சில தம்பதிகளுக்குக் கருதரிக்காமல் போகலாம்.
கணவன் மனைவி ஆகிய இருவரில் யாரேனும் அடிக்கடி வெளியூருக்கு டூர் போகும் நிலையிருந்தால் இவ்வாறு ஆகலாம். சிலருக்கு அல்லது தம்பதியர் இருவருக்குமே நடந்தது இரண்டாம் திருமணமாக இருக்கலாம். அவர்களில் கணவர் ஏற்கனவே குழந்தை பெற்றவராக இருந்தாலும் முன்பிருந்த உடல்நிலை போல அவருக்கு இப்போது இல்லாமல் போகலாம். அதுவும்கூட கருதரிக்காமல் போகக் காரணமாகலாம். சில நேரங்களில் குழந்தை இல்லையா என்ற சமூகத்தின் கேள்விகூடத் தம்பதிகள் மனதில் ஒருவித பாதிப்பு ஏற்படுத்தி, கருத்தரிப்பு உண்டாவதில் பிரச்னைகள் ஏற்படுத்தலாம். கூட்டுக் குடும்ப சூழல், தம்பதியரின் நெருக்கம் சற்றே குறைய வாய்ப்புள்ளது. அதனாலும் குழந்தைப்பேறு தள்ளிப் போகலாம். சிலர் அந்த உறவு முடிந்தவுடன் சுத்தம் கருதி, தங்கள் அந்தரங்க பாகங்களை தண்ணீராலோ வேறு கெமிக்கல் திரவத்தாலோ சுத்தப்படுத்தி வரலாம். இப்படி செய்யும்போது விந்தணு அழிந்துபோகும் வாய்ப்புள்ளது. இதனாலும் கருதரிப்பு தள்ளிப் போகலாம். இதுபோன்ற பல காரணங்களினால் உடலளவில் பிரச்னைகள் இல்லாத தம்பதிகளுக்கும் கூட கருத்தரிப்பதில் பிரச்னைகள் உண்டாகலாம். மருத்துவரிடம் இது பற்றி ஒளிவு மறைவில்லாமல் பேசி பிரச்னைக்கு உடனடித் தீர்வு காணுங்கள். செயற்கை முறை கருத்தரிப்பு கூட வந்துவிட்டதே!

செவ்வாய் தோஷம், புத்திர தோஷம், சர்ப்ப தோஷம், காலசர்ப்ப தோஷம், கால சர்ப்ப தோஷம்,களத்திர தோஷம், பிரம்ம ஹத்தி தோஷம், நவக்கிரகத் தோஷங்கள்; இன்னும் எத்தனையோ தோஷங்கள்.

சேர்த்து வைத்த புண்ணியம்தான் குழந்தையாகப் பிறக்கும் என்று பழமொழி உண்டு. “குழந்தை இல்லையெனில் அடுத்த பிறவி இல்லைஎன்பதும் ஒரு சாராரின் கருத்து. அந்த வகையில் 5ஆம் இடம் பூர்வ புண்ணிய ஸ்தானமாகவும் திகழ்கிறது. தாய்மாமன், தாய்வழி உறவுகள், மனப்பான்மை ஆகியவற்றைக் குறிப்பதும் 5ஆம் இடம்தான்.
ஐந்தாம் இடத்தில் பாவ கிரகங்கள் (ராகு, செவ்வாய், சனி) அல்லது சூரியன் அமர்ந்தால் ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் போகும் அல்லது தாமதமாக கிடைக்கும். ஒருவேளை 5ஆம் இடத்தில் உள்ள பாவ கிரகங்களை சுபக் கிரகங்கள் பார்த்தால் (ஒவ்வொரு லக்னத்திற்கும் சுபகிரகங்கள் வேறுபடும்மேஷத்திற்கு சந்திரனும் சுபக்கிரகம்) குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
ஐந்தாம் வீட்டிற்கு உரிய கிரகம் பாவ கிரகங்களுடன் சேர்ந்தாலும் புத்திர தோஷம் ஏற்படும். உதாரணமாக கடக லக்னத்தை உடைய ஒருவருக்கு 5ஆம் வீடு விருச்சிகம் (செவ்வாய்). அவருக்கு 5ஆம் இடத்தில் எந்தப் பாவ கிரகமும் கிடையாது. ஆனால் 5க்கு உரிய கிரகம் 8இல் மறைந்திருப்பதால், மனைவிக்கு கருக்கலைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இப்படி எத்தனையோ?

புத்திர தோஷவகைகளும் அதற்குச் சொல்லப்படும் காரணங்கள்:

முற்பிறவியில் பெற்ற தாய் தந்தையரை சரியாக கவனிக்காததாலும், அவர்களை வேதனைப் படுத்தியதாலும், அவர்களின் கடைசிக்காலத்தில் சரியான நேரத்தில் உணவு தராமலும் ஏற்படுவது பித்ரு அல்லது பிதுரு சாபம். இதனால் இப்பிறவியில் தன் தந்தையரோடும் தன் பிள்ளைகளோடும் ஒத்துப்போக முடியாது. எப்போதும் இரத்த உறவுகளான அப்பா மற்றும் பிள்ளைகளால் அவமானமும், வேதனையும் தினசரி நடக்கும். சகோதரர்களுக்குச் சேரவேண்டிய சொத்துக்களைத் தராமல் வஞ்சகம் செய்து எடுத்துக்கொள்வதாலும், சகோதரர்களைக் கொடுமைப்படுத்துவதாலும் ஏற்படுவது சகோதர சாபம். அந்த சாபத்தால் புத்திர தோஷம் ஏற்படுவது. சொத்துப்பிரச்னையில் தாய்மாமனை அவமானப்படுத்தியதலும், சண்டை போட்டதாலும் ஏற்படுவது தாய்மாமன் சாபம். அதனால் ஏற்பட்ட புத்திரதோஷம். இந்த சாபத்தால் தாய்வழிப்பகையும்,புத்திரர்கள் பகையும் அவமானமும் ஏற்படும். பெண் பிள்ளைகள் வாழாவெட்டியாவதும், விவாகரத்து ஆகி வாழ முடியாமல் தவிப்பதும் இந்த சாபத்தால் ஏற்படுகின்றது. சாதுக்கள், மகான்களையும் சிவனடியார்களையும் அவமானப்படுத்துவதால் ஏற்படுவது பிராம்மண சாபம். இந்த சாபத்தால் ஊனமுற்ற குழந்தைகள் பிறப்பது, மூளை வளர்ச்சி இல்லாத பிள்ளைகள் பிறப்பது, ஊமை, குருடு, செவிடு போன்ற குறையுள்ள குழந்தைகள் பிறப்பதும் உண்டு. மனைவியைக் கொடுமைப் படுத்துவதாலும், மனைவி குழந்தைகளை விட்டுவிட்டு வைப்பாட்டி வீடே கதி என இருப்பதாலும், பிள்ளைகளுக்குச் செய்ய வேண்டிய கடமைகளிலிருந்து விலகி குடும்பத்தை விட்டுப் பிரிவதாலும், மனைவியின் மனம் கொதித்து அந்த சாபத்தால் ஏற்படுவது பத்தினி சாபம். இதனால், மனைவி மக்களால் அவமானப்படுதலும், பண்டாரம், பரதேசியாகி பிச்சை எடுத்தலும், கடைசிக்காலத்தில் தன்னைக் கவனிக்க ஆளில்லையே என வருந்துதலும், குடும்பத்தோடு இருந்தாலும் குடும்பத்தை விட்டுப் பிரிந்துபோய் அனாதையாக இறந்து போகுதலும் ஏற்படும். மந்திர சாபம், பிரேத சாபம் இவற்றால் ஏற்படும் புத்திர தோஷம் என்பது மாந்தீரிகர்களைத் தேடிப் போய் நமக்கு வேண்டாதவர்களுக்கு பில்லி சூனியம் வைப்பதும், குல தெய்வத்தை மறந்து வணங்காமல் இருப்பதும் ஆகும்.
இந்த சாபத்தால் மருத்துவத்துக்குப் புலப்படாத நோய்கள் உருவாகுவதும், சம்பாதிக்கும் பணம் முழுவதும் அதற்கே செலவழிப்பதும், குடும்பம் விருத்தியில்லாமல் இருப்பதும், தொழில் நட்டம், தொழில் அமையாமலிருப்பது, பிள்ளைகளால் ஏற்படும் ஊதாரித்தனம், துஷ்ட குணமுள்ள பிள்ளைகளால் வரும் பிரச்னைகள் போன்ற பலன்கள் ஏற்படும்.

புத்திர தோஷத்தை நீக்கப் பரிகாரம் என்ன?

குருபகவானுக்கு வியாழக்கிழமையன்று அர்ச்சனை செய்யலாம். வியாழக்கிழமை திருச்செந்தூரில் அன்னதானம் செய்யலாம்.
எந்தக்கிரகம் புத்திர தோஷத்தை உருவாக்கியதோ அந்த கிரகத்தின் திசை அல்லது புக்திகாலத்தில் அந்தக் கிரகத்தின் அதிதேவதைக்கு அர்ச்சனை செய்யலாம்.
குலதெய்வம் கோவிலில் அவரவர் ஜன்ம நட்சத்திரம் அல்லது பவுர்ணமி அல்லது தமிழ் மாதப்பிறப்பு அல்லது தமிழ் வருடப்பிறப்பு அன்று அன்னதானம் ஒரு வருடம் வரை அல்லது ஆயுள் முழுவதும் செய்துவரலாம்.

பரிகாரம் செய்யவேண்டுமெனப் பணம் செலவு செய்யாதீர்கள். அன்னதானம் செய்யுங்கள். உடை தானம் செய்யுங்கள்.

தோஷங்களுக்குப் பரிகாரங்கள் செய்தால் தோஷங்கள் நீங்குமோ இல்லையோ தெரியாது. பொதுவாக ஜாதகத்தில் எந்த தோஷம் இருந்தாலும் பிரதோஷத்தில் எல்லா தோஷமும் நீங்கிவிடும். ஆனால் கீழ்கண்ட ஆலயங்களுக்குப் பிரதோஷத்தில் சென்று இறைவனை மனமுருக வேண்டிக்கொண்டாலே பலன் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

அமரபணீஸ்வரர் பாரியூர் ஈரோடு
கல்யாண விகிர்தீஸ்வரர் வெஞ்சமாங்கூடலூர் கரூர்
ஞானபுரீஸ்வரர் திருவடிசூலம் காஞ்சிபுரம்

மாசாணியம்மன்

ஆனைமலை, பொள்ளாச்சி

கோயம்புத்தூர்

வீரஆஞ்சநேயர் சண்முகபுரம் கோயம்புத்தூர்
ஆழிகண்டீஸ்வரர் இடைக்காட்டூர் சிவகங்கை
தான்தோன்றீஸ்வரர் இலுப்பைக்குடி சிவகங்கை
வீரசேகரர் சாக்கோட்டை சிவகங்கை
தீர்த்தபாலீஸ்வரர் திருவல்லிக்கேணி சென்னை
பிரம்மசிரகண்டீஸ்வர் திருக்கண்டியூர் தஞ்சாவூர்

செல்லாண்டியம்மன்

உறையூர்

திருச்சி

வெக்காளி அம்மன்

உறையூர்

திருச்சி

பாலசுப்பிரமணியர்

சிவகிரி

திருநெல்வேலி

தொண்டர்கள் நயினார் சுவாமி திருநெல்வேலி திருநெல்வேலி
பாடகலிங்கசுவாமி (பாடகப்பிள்ளையார்) மலையான்குளம் திருநெல்வேலி

பேரா(ற்று)த்து செல்வியம்மன்

வண்ணார்பேட்டை

திருநெல்வேலி

சிவந்தியப்பர் விக்கிரமசிங்கபுரம் திருநெல்வேலி
கல்யாண வீரபத்திரர் சென்னிவாக்கம் திருவள்ளூர்
கல்யாணசுந்தர வீரபத்திரர் மாநெல்லூர் திருவள்ளூர்
மாசிலாமணீஸ்வரர் வடதிருமுல்லைவாயில் திருவள்ளூர்
கோணேஸ்வரர் குடவாசல் திருவாரூர்
திருநேத்திரநாதர் திருப்பள்ளி முக்கூடல் திருவாரூர்
சோமநாதர் நீடூர் நாகப்பட்டினம்
கைலாசநாதர் இராசிபுரம் நாமக்கல்
யாழ்மூரிநாதர் தருமபுரம் புதுச்சேரி
பிரளயகால வீரபத்திர சுவாமி கவிப்புரம் குட்டஹள்ளி, பெங்களூரு
சத்தியகிரீஸ்வரர் திருப்பரங்குன்றம் மதுரை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *