பிதுர் கடன் தீர்க்க

பிதுர் கடன் தீர்க்க

பிதுர்களுக்குச் செய்யக்கூடிய, தர்ப்பணம், சிரார்த்தம், பிண்டம் முதலியவற்றால் பிதுர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடன் நிவர்த்தியாகும். இந்த மூன்று கடன்களும் ஆண்கள் பெண்கள் இருபாலர்களுக்கும் பொதுவானவையாக இருந்தாலும் பெண்களுக்கு தர்ப்பணம், சிரார்த்தம் (திவசம்), பிண்டம் செய்வதிலிருந்து தர்ம சாஸ்திரம் விலக்களிக்கிறது. பெண்கள் வேறு கோத்திரத்திற்கு திருமணமாகி சென்று விடுவதாலும் பெண்கள் இளமைப் பருவத்தில் தாய் தந்தையின் கட்டுப்பாட்டிலும் யௌவனப் (வாலிப) பருவத்தில், தன் கணவன் கட்டுப்பாட்டிலும், வயோதிகப் பருவத்தில் தன் மக்களின் (பிள்ளைகள்) கட்டுப்பாட்டிலும் இருந்துவர வேணுமென தர்மசாஸ்திரம் கூறுவதாலும், கணவன் அனுமதியில்லாமல் எந்தக் காரியங்களும் செய்யக்கூடாது, என்ற சாஸ்திர வாக்ய பிரகாரம், சிரார்த்தம், தர்ப்பணம், பிண்டம் செய்ய அனுமதியில்லாமல் உள்ளது. ஆனால் முக்கடன் தீர்த்தால்தான் முக்திபெற முடியும் என்ற வாக்கு ஆண்கள் பெண்கள் இருவருக்கும் பொதுவாக உள்ளதால், எப்படி, என்ன செய்தால், அதன் பயனை பெண்கள் அடையமுடியும் என்பதை நம் மூதாதையரான ஞானிகள் இதற்கு ஒரு வழி கண்டார்கள்.”

  • நன்றி அம்மன் தரிசனம்

அதெல்லாம் சரி. பெற்றோர்கள் இறந்துவிட்டதும் அவர்களின் ஆன்மா உடனே வேறு பிறப்பெடுத்து விடுகிறது என்கின்றனர். அப்படியேயாயின் நாம் கொடுக்கும் தர்ப்பணம், சிரார்த்தம், பிண்டம் ஆகியவைகளை யாருக்குத் தருகிறோம். அவர்கள் நம்மைப் பெற்றது கடன் என ஏன் சொல்லவேண்டும். காதலின் விளைவல்லவா?

இருபாலர்களுக்கும் பொதுவானவையாக இருந்தாலும் பெண்களுக்கு பிதுர்கடன் செய்வதிலிருந்து தர்ம சாஸ்திரம் விலக்களிக்கிறது.” அவர்களுக்கு மட்டும் என்ன விதிவிலக்கு? நியாமான வினாக்கள்தானே!

எது எப்படியாயினும் தர்மா சாத்திரம் அறிந்தோர் சொல்வதற்காக, கீழ்கண்ட ஆலயங்களுக்குச் சென்று விழிபடக் கடன் தீரும். வழிபட்டதற்குப் பலன் உண்டே!

நவபாஷாண நவக்கிரக கோயில் தேவிபட்டிணம் இராமநாதபுரம்
சரநாராயணப் பெருமாள் திருவதிகை கடலூர்
விஜயராகவப் பெருமாள் திருப்புட்குழி காஞ்சிபுரம்
மகாதேவர் (இரட்டையப்பன்) சேர்பு பெருவனம் கேரளா
வல்வில்ராமன் திருப்புள்ளம் பூதங்குடி தஞ்சாவூர்
பாஸ்கரேஸ்வரர் பரிதியப்பர்கோவில் தஞ்சாவூர்
இராமலிங்கசுவாமி பாபநாசம் தஞ்சாவூர்
புஷ்பவனேஸ்வரர் மேலைத்திருப்பூந்

துருத்தி

தஞ்சாவூர்
சீனிவாசப்பெருமாள் திண்டுக்கல் திண்டுக்கல்
வெங்கடாசலபதி திம்மராஜபுரம் திருநெல்வேலி
பாபநாசநாதர் பாபநாசம் திருநெல்வேலி
கற்பகநாதர் கற்பகநாதர்குளம் திருவாரூர்
உய்யவந்தபெருமாள் திருவித்துவக்கோடு பாலக்காடு
முக்தீஸ்வரர் தெப்பக்குளம், மதுரை மதுரை
நாவாய் முகுந்தன் திருநாவாய் மலப்புரம்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *