அருள்மிகு கற்பகநாதர் திருக்கோயில், கற்பகநாதர் குளம்

அருள்மிகு கற்பகநாதர் திருக்கோயில், கற்பகநாதர் குளம், தொண்டியக்காடு வழி, திருவாரூர் மாவட்டம்.

+91- 4369 – 240 632 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் கற்பக நாதர்
அம்மன் பாலசுந்தரி
தல விருட்சம் பலா
தீர்த்தம் விநாயகர் தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருக்கடிக்குளம்
ஊர் கற்பகநாதர்குளம்
மாவட்டம் திருவாரூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் சம்பந்தர்

கார்த்திகாசுரன் என்ற அரக்கன் இத்தல இறைவனை வழிபாடு செய்து வரங்கள் பல பெற்றான். தான் வேண்டும் போதெல்லாம் கற்பக விருட்சம் போல வரங்களை அள்ளித்தந்த இறைவனுக்கு கோயில் கட்டி வழிபாடு செய்தான். இதனால் இத்தல இறைவன் கற்பகநாதர்என வழங்கப்படுகிறார். கற்பக விநாயகர் கற்பகநாதரை வழிபட்டு மாங்கனி பெற்றுள்ளார். இத்தல சிவபெருமான் 8 முக பட்டை இலிங்கமாக அருள்பாலிக்கிறார்.

இராமர் சேது சமுத்திரத்தில் பாலம் கட்டும் முன்பாக இத்தலம் வந்து கற்பக விநாயகரையும், கற்பகநாதரையும் வழிபாடு செய்ததாக புராணம் கூறுகிறது. இதன் காரணமாக கோதண்டராமர் கோயில் இத்தலத்தின் அருகே உள்ளது. ஒரு அந்தணர் தன் தந்தைக்கு பிதுர்கடன் செய்வதற்காக கொண்டு வந்த அஸ்தி இத்தலத்திற்கு வந்தவுடன் கொன்றை மலராக மாறியது என்பர். இத்தல விநாயகர் மாங்கனி விநாயகர்என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

தேவாரப்பதிகம்:

பொடி கொண்மேனி வெண்ணூலினர் தோலினர் புலியுரியதளாடை கொடி கொளேற்றினர் மணிகிணி எனவரு குறைகழல் சிலம்பார்க்கக் கடிகொள் பூம்பொழில் சூழ்தரு கடிக்குளத் துறையும் கற்பகத்தைத்தம் முடிகள் சாய்த்தடி வீழ்தரும் அடியரை முன்வினை மூடாவே.

திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 109வது தலம்.

திருவிழா:

மகா சிவராத்திரி.

பிரார்த்தனை:

8 முக பட்டை இலிங்கமாக இருக்கும் இவரை தரிசிப்பதால் அஷ்டலட்சுமியின் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இவரை அஷ்டமி திதியிலும், சனிக்கிழமை புத ஹோரையிலும் குங்குமப்பூவுடன் வெண்ணெய் சேர்த்து காப்பிட்டு வணங்கினால் வேண்டும் வரம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இத்தலத்தில் வெண்ணெய் தானம் செய்வது சிறந்தது. சகல வரங்கள் பெற இங்கு வழிபாடு செய்யப்படுகிறது. பித்ருக்களுக்கு பரிகாரம் செய்ய ஏற்ற தலம்.

நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறியதும் வெண்ணெய் தானம் செய்து வழிபாடு செய்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *