அருள்மிகு கிளியாளம்மன் திருக்கோயில், பெரியகுமட்டி
அருள்மிகு கிளியாளம்மன் திருக்கோயில், பெரியகுமட்டி-608 501, சிதம்பரம், கடலூர் மாவட்டம்.
***********************************************************************************************************
+91 4144 – 223 500 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.
பழமை: – 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர்: – பெரியகுமட்டி
மாநிலம்: – தமிழ்நாடு
சிதம்பரத்தில் சிவன், அம்பிகை இருவருக்கும் நடனப்போட்டி நடந்தது. அம்பிகை தன் ஒவ்வொரு அம்சத்தையும் ஒவ்வொரு வடிவமாக்கி, சிவனுக்கு ஈடு கொடுத்து நடனமாடினாள். அப்போது, அம்பிகை கிளி வடிவம் எடுத்தாள். சிவன், நாட்டியம் ஆடியபடியே கிளியை கையால் தட்டினார். வலியைத் தாங்காத கிளி, சிதம்பரத்தின் எல்லையில் இங்கு வனத்தில் விழுந்தது. இவளே இங்கு தங்கினாள். கிளி வடிவில் தங்கியதால் இவளுக்கு “கிளியாளம்மன்” என்ற பெயர் ஏற்பட்டது.
சிதம்பரம் நடராஜர் கோயிலின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில் இது. கோயில் எதிரே கிளி தீர்த்தம் உள்ளது. கோயில் வளாகத்தில் சப்தகன்னியர், பூரணா புஷ்கலாவுடன் அய்யனார் உள்ளனர்.
யோக பட்டை அணிந்து கைகளில் அட்சமாலை, சூலத்துடன் தெட்சிணாமூர்த்தியின் வித்தியாசமான வடிவம் இங்கு உள்ளது.
அருள்மிகு கவுமாரியம்மன் திருக்கோயில், வீரபாண்டி
அருள்மிகு கவுமாரியம்மன் திருக்கோயில், வீரபாண்டி – 625 534 தேனி மாவட்டம்.
*******************************************************************************************
+91-4546-246242 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
பழமை: – 500 வருடங்களுக்கு முன்
ஊர்: – வீரபாண்டி
மாநிலம்: – தமிழ்நாடு
முன்னொரு காலத்தில் வைகை வனத்தில் அரக்கன் ஒருவன் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும், மக்களுக்கும் மிகுந்த தொந்தரவு கொடுத்து வந்தான்.
அந்த அசுரனை அழிப்பதற்காக பராசக்தி இந்த வனத்திற்கு வந்து கண்ணீசுவரர் என்ற திருநாமத்துடன் ஒரு லிங்கத்தைப் பூசித்து தவம் இருந்தாள்.
அப்போது அசுரன் அன்னை பார்வதியை கடத்திச் செல்ல முயன்றான். இதனால் ஆத்திரம் அடைந்த பார்வதி அருகம்புல்லை எடுத்து அரக்கன் மீது வீச, அரக்கன் இரு துண்டுகளாகப் பிளந்து இறந்தான். இதனால் மகிழ்ந்த தேவர்கள் பார்வதியைக் கன்னித்தெய்வமாக்கி “கவுமாரி” எனத் திருநாமம் சூட்டி வழிபட்டார்கள்.
தேனி மாவட்டம் வீரபாண்டியில் வீற்றிருக்கும் கவுமாரியம்மன் கன்னித்தெய்வமாக வேண்டுபவர்களுக்கு வேண்டும் வரம் தந்து ஆட்சிசெய்து வருகிறாள்.
கவுமாரியின் கருணை:
அன்னை பார்வதி வைகை வனத்தில் தவம் செய்த அதே காலத்தில், மதுரையை ஆண்ட வீரபாண்டிய மன்னனுக்கு ஊழ்வினையால் பார்வை பறி போனது. மன்னனும் இறைவனை மனமுருகி வேண்டினான். அவனது கனவில் தோன்றிய இறைவன்,”வைகைக்கரை ஓரத்தில் அன்னை பார்வதி கவுமாரி என்ற திருநாமத்துடன் தவம் இருக்கிறாள். அவளை வழிபட்டால், உனது விழிக்கு ஒளி கிடைக்கும்” என்று கூறி மறைந்தார்.