அருள்மிகு கஜேந்திரவரதர் சுவாமி திருக்கோயில், அத்தாளநல்லூர்
அருள்மிகு கஜேந்திரவரதர் சுவாமி திருக்கோயில், அத்தாளநல்லூர் – 627 426 திருநெல்வேலி மாவட்டம்.
+91- 4634 – 287195 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 6 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | ஆதிமூலம் |
உற்சவர் | – | கஜேந்திவரதன் |
தாயார் | – | ஆண்டாள் |
தீர்த்தம் | – | தாமிரபரணி |
ஆகமம்/பூசை | – | பாஞ்சராத்ரம் |
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் |
புராணப் பெயர் | – | யானைகாத்தநல்லூர் |
ஊர் | – | அத்தாளநல்லூர் |
மாவட்டம் | – | திருநெல்வேலி |
மாநிலம் | – | தமிழ்நாடு |
சிறந்த பெருமாள் பக்தனாக இருந்த இந்திரதிம்னன் எனும் மன்னன், அகத்தியரைத் தனது குருவாக ஏற்றுக்கொண்டு அவரது ஆலோசனைப்படி ஆட்சி புரிந்து வந்தான். ஒருமுறை தன் அவைக்கு வந்த அகத்தியரை வரவேற்காமல், கேளிக்கையில் மூழ்கியிருந்தான். இதனைக்கண்டு மனம் குமுறிய அகத்தியர், தனது சீடராக இருந்து கொண்டு தம்மை மதிக்காமல் இருந்ததற்குத் தண்டனையாக அவரை யானையாக மாறி, வனத்தில் சுற்றித்திரிந்து பின் மோட்சம் பெறுவாய் என சபித்தார். அகத்தியரிடம் சாபம் பெற்ற அவன் காட்டில் யானைகளின் தலைவனாக கஜேந்திரன் என்ற பெயரில் வாழ்ந்து வந்தான்.
அருள்மிகு ஜயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் திருக்கோயில், பஞ்சவடீ
அருள்மிகு ஜயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் திருக்கோயில், பஞ்சவடீ – 605 111. விழுப்புரம் மாவட்டம்.
+91- 413 – 267 1232, 267 1262, 267 8823 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 7 முதல் இரவு 8 மணி வரை
மூலவர் | – | ஜயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் |
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் |
ஊர் | – | பஞ்சவடீ |
மாவட்டம் | – | விழுப்புரம் |
மாநிலம் | – | தமிழ்நாடு |
“ரமணி அண்ணா” இவர் தான் இத்தலம் உருவாவதற்கு முழு காரணமானவர். இவர் கூறுகையில்,”பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே இந்த பஞ்சவடீயில் பல சித்தர்களும், முனிவர்களும் தவம் செய்து வந்துள்ளனர். இங்கிருந்தபடியே பல ரிஷிகள் வேதசாஸ்திரங்களை பலருக்கு உபதேசம் செய்துள்ளதாகவும் தேவபிரசன்னத்தில் தெரிந்தது. இதன் அடிப்படையில் கோயில் திருப்பணி ஆரம்பிக்கப்பட்டது.
ஆஞ்சநேயர் என்றாலே மாபெரும் சக்திபடைத்தவர் என்பதற்கேற்ப, ஆசியாவிலேயே மிகப்பெரிய சிலை அமைக்கவேண்டும் என முடிவு செய்யப்பட்டது. அதன் பின் இவருக்கான சிலை அமைக்க 150 டன் எடை கொண்ட கருங்கல், செங்கல்பட்டு அருகே சிறுதாமூர் எனும் ஊரில் கிடைத்தது. இந்த கல்லைக்கொண்டு மகாபலிபுரம் அருகே கேளம்பாக்கத்தில் முத்தையா ஸ்தபதி 36 அடி உயர பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலையை உருவாக்கினார். இந்த சிலை பிரதிஷ்டைக்கு முன்பாக 11 கிலோ எடையுள்ள யந்திரம் தயார் செய்து அதை திருப்பதி, காஞ்சிபுரம், சிருங்கேரி, அஹோபிலம் ஆகிய புண்ணிய தலங்களுக்கு கொண்டு சென்று பூஜை செய்யப்பட்டு, ஆஞ்சநேயரின் சிலைக்கு அடியில் வைத்து ஜுன் 12, 2003 காலை 5.55 மணிக்கு ஜயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது“என்றார்.