அருள்மிகு திரிவிக்கிரமன் திருக்கோயில், காழிச்சீராம விண்ணகரம், சீர்காழி

அருள்மிகு திரிவிக்கிரமன் திருக்கோயில், காழிச்சீராம விண்ணகரம், சீர்காழி – 609 110. நாகப்பட்டினம் மாவட்டம்.

+91- 4364 – 270 207, 94424 – 19989 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 7.30 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் திரிவிக்கிரம நாராயணர்
உற்சவர் தாடாளன்
தாயார் லோகநாயகி
தல விருட்சம் பலா
தீர்த்தம் சங்கு, சக்கர தீர்த்தம்
ஆகமம்/பூசை வைகானஸம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் பாடலிகவனம்
ஊர் சீர்காழி
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு

படைக்கும் கடவுளான பிரம்மா பல யுகங்கள் வாழும்படி சாகாவரம் பெற்றிருந்தார். இதனால் அவர் மனதில் கர்வம் உண்டாகவே, தனது பணியை அவர் சரியாகச் செய்யவில்லை. விஷ்ணு அவரது கர்வத்தை அடக்க எண்ணம் கொண்டார். இதனிடையே, மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்து திரிவிக்கிரமனாக காலைத்தூக்கி மூவுலகத்தையும் அளந்து காட்டிய கோலத்தைக் காண வேண்டும் என உரோமச முனிவருக்கு ஆசை எழுந்தது. சுவாமியை வேண்டி இத்தலத்தில் தவம் இருந்தார். அவருக்கு காட்சி தந்த மகாவிஷ்ணு, தன் இடக் காலை தூக்கி திரிவிக்கிரம அவதாரத்தை காட்டியருளினார். பின் அவர் உரோமசரிடம், “என் ஏகாந்த நிலையைத் தரிசித்த நீங்கள் பெறுவதற்கு அரிய பல பேறுகளைப் பெற்று சிறப்பான நிலையை பெறுவீர்கள். மேலும், பிரம்மனை விட கூடுதலான ஆயுட்காலமும் பெற்று வாழ்வீர். உமது உடலில் இருக்கும் ஒரு முடி உதிர்ந்தால் பிரம்மாவின் ஆயுட்காலத்தில் ஒரு வருடம் முடியும்என்று கூறி இத்தலத்தில் திரிவிக்கிரமனாக எழுந்தருளினார். மகாவிஷ்ணு சூட்சுமமாக தன் ஆயுளைக் குறைத்ததை அறிந்த பிரம்மா தன் கர்வம் அழியப்பெற்றார்.

அருள்மிகு தெய்வநாயகப்பெருமாள் திருக்கோயில், திருநாங்கூர்

அருள்மிகு தெய்வநாயகப்பெருமாள் திருக்கோயில், திருநாங்கூர்-609 106 நாகப்பட்டினம் மாவட்டம்.

+91- 4364-266 542 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் தெய்வநாயகப்பெருமாள்
உற்சவர் மாதவப்பெருமாள்
தாயார் கடல் மகள் நாச்சியார்
தீர்த்தம் சோபன, தேவசபா புஷ்கரிணி
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் கீழச்சாலை
ஊர் திருத்தேவனார்த்தொகை, (திருநாங்கூர்)
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு

துர்வாச முனிவர், வைகுண்டத்தில் தனக்கு கிடைத்த பெருமாளின் மாலையை இந்திரனிடம் கொடுத்தார். அவன் அதை ஐராவத யானையின் மீது தூக்கி எறிந்தான். இதனால் ஆத்திரமடைந்த துர்வாசர், “பெருமாள் மார்பில் வாசம் செய்பவள் மகாலட்சுமி. அங்கிருந்து கிடைத்த மாலையை அவமதித்து விட்டாய். எனவே லட்சுமியாகிய செல்வம் உன்னை விட்டு வைகுண்டம் செல்லட்டும். உனக்கு தரித்திரம் பிடிக்கட்டும்என்று சாபம் கொடுத்தார்.

அதிர்ந்து போனான் இந்திரன். ஐராவதம் மறைந்தது. மாலையை பணிவாக ஏற்றதால் அது வைகுண்டம் சென்றது. துர்வாசரிடம் மன்னிப்பு கேட்டான் இந்திரன். துர்வாசரும், “இந்திரனே! இறைவனது பிரசாதமும், இறைவனும் ஒன்று தான். இறைவனது பிரசாதப்பொருள்களை அவமதிக்ககூடாது. இதை உனது குரு உனக்கு சொல்லி தரவில்லையா? நீ அவரிடமே சாப விமோசனம் கேள்என கூறிச் சென்று விட்டார்.