அருள்மிகு பூமிபாலகர் திருக்கோயில், திருப்புளியங்குடி
அருள்மிகு பூமிபாலகர் திருக்கோயில், திருப்புளியங்குடி – 628 621, தூத்துக்குடி மாவட்டம்.
காலை 9 மணி முதல் 12 மணி வரை, மதியம் 1 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | பூமிபாலகர் |
உற்சவர் | – | காய்சினவேந்தன் |
தாயார் | – | மலர் மகள் நாச்சியார், நில மகள் நாச்சியார், புளியங்குடிவள்ளி |
தீர்த்தம் | – | வருணத்தீர்த்தம், நிருதி தீர்த்தம் |
பழமை | – | 1000-2000 வருடங்களுக்கு முன் |
புராணப் பெயர் | – | திருப்புளிங்குடி |
ஊர் | – | திருப்புளிங்குடி |
மாவட்டம் | – | தூத்துக்குடி |
மாநிலம் | – | தமிழ்நாடு |
இங்கு பெருமாள் நாபியில் இருந்து தாமரைக்கொடி தனியாகக் கிளம்பிச் சென்று சுவற்றில் உள்ள பிரம்மாவின் தாமரை மலருடன் இணைந்து கொள்கிறது. பாத தரிசனம் செய்ய வெளிப்பிரகாரத்தில் இருந்து ஜன்னல் வழியாகத் தரிசனம் செய்ய வேண்டும். இந்திரனுக்கு பிரம்மகத்தி தோஷம் நீங்கிய இடம். வசிஷ்ட புத்திரர்களால் சாபம் அடைந்து ராட்சசனாகத் திரிந்த யக்ஞசர்மா என்ற பிராமணன் பகவானால் சாப விமோசனம் பெற்ற தலம். வருணன், நிருதி, தர்மராஜன், நரர் ஆகியயோருக்கு காட்சி கொடுத்ததலம்.
அருள்மிகு அரவிந்த லோசனர் திருக்கோயில், திருத்தொலைவில்லி மங்கலம்
அருள்மிகு அரவிந்த லோசனர் திருக்கோயில், நவதிருப்பதி, திருத்தொலைவில்லி மங்கலம் – 628 752, தூத்துக்குடி மாவட்டம்.
காலை 8 மணி முதல் 12 மணி வரை, மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | அரவிந்த லோசனர் |
உற்சவர் | – | செந்தாமரைக் கண்ணன் |
தாயார் | – | கருந்தடங்கண்ணி |
தீர்த்தம் | – | தாமிரபரணி தீர்த்தம், வருண தீர்த்தம் |
பழமை | – | 1000-2000 வருடங்களுக்கு முன் |
ஊர் | – | திருத்தொலைவில்லி மங்கலம் |
மாவட்டம் | – | தூத்துக்குடி |
மாநிலம் | – | தமிழ்நாடு |
தென்திருப்பேரை அருகிலேயே உள்ளது. இங்கு இரண்டு கோயில்கள் உள்ளது. இவை இரண்டும் இரட்டைத்திருப்பதி என்று அழைக்கப்படுகிறது. ஷேத்திரத்திலேயே ஒரே திவ்ய தேசமாக கருதப்படுகிறது. கோயில் அடர்ந்த காட்டில் அமைந்துள்ளது. அருகில் வீடுகள் அதிகம் இல்லை. அர்ச்சகர்கள் வரும் நேரம் அறிந்து சென்று தரிசனம் செய்வது நல்லது. நம்மாழ்வார் 11 பாசுரங்களைப் பாடியுள்ளார். நவகிரகங்களில் ராகு கேது என்ற இரு சாயாகிரகங்களுக்கு உரிய தலங்களாக விளங்குகிறது.