ஆத்மநாதசுவாமி திருக்கோயில், திருப்பெருந்துறை, சிதம்பரம்

அருள்மிகு ஆத்மநாதசுவாமி திருக்கோயில், திருப்பெருந்துறை, சிதம்பரம், கடலூர் மாவட்டம்.

+91 94431 12098

காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் ஆத்மநாதசுவாமி
அம்மன் யோகாம்பாள்
தீர்த்தம் பாற்கடல் தீர்த்தம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் சிதம்பரம்
மாவட்டம் கடலூர்
மாநிலம் தமிழ்நாடு

மதுரையில் அரிமர்த்தன பாண்டியனின் அமைச்சராகப் பணியாற்றியவர் மாணிக்கவாசகர், திருப்பெருந்துறை என்னும் ஆவுடையார் கோவிலில் (புதுக்கோட்டை மாவட்டம்) சிவனிடம் உபதேசம் பெற்றார். இவருக்காக சிவபெருமான் மதுரையில் நரிகளை பரிகளாக்கியும், வைகையில் வெள்ளம் பெருக்கெடுக்கச் செய்தும் திருவிளையாடல் நிகழ்த்தினார். இவர் ஒருமுறை சிதம்பரம் வந்தார். முனிவர்கள் தங்கியிருந்த ஒரு பர்ணசாலையில் தங்கினார். ஆனாலும், திருப்பெருந்துறை ஆத்மநாதரை அவரால் மறக்க முடியவில்லை. எனவே, இங்கும் ஆத்மநாதருக்கு அளவில் சிறிய கோயில் கட்டினார். சுவாமிக்கு ஆத்மநாதர் என்றும், அம்பிகைக்கு யோகாம்பாள் என்றும் பெயர் சூட்டினார். இத்தலம்தில்லை திருப்பெருந்துறைஎன்றழைக்கப்பட்டது.

ஆத்மநாத சுவாமி திருக்கோயில், ஆவுடையார் கோயில்

அருள்மிகு ஆத்மநாத சுவாமி திருக்கோயில், ஆவுடையார் கோயில், புதுக்கோட்டை மாவட்டம்.

+91 4371 233301

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் ஆத்மநாதர்
அம்மன் யோகாம்பாள்
தல விருட்சம் குருந்த மரம்
தீர்த்தம் அக்னிதீர்த்தம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் சதுர்வேதிமங்கலம், சிவபுரம்
ஊர் ஆவுடையார்கோயில்
மாவட்டம் புதுக்கோட்டை
மாநிலம் தமிழ்நாடு

மதுரை பாண்டிய மன்னனின் சபையில் அமைச்சராக இருந்த மாணிக்க வாசகர். மன்னன் உத்தரவுப்படி குதிரை வாங்க இப்பகுதிக்கு (திருப்பெருந்துறை) வருகிறார். அப்போது இங்கு சிவாகமங்கள் ஒலிக்கும் ஒலி கேட்க அங்கு சென்று பார்க்கையில் ஞானகுருநாதர் ஒருவர் வீற்றிருப்பதைக் கண்டார்.