Monthly Archives: January 2012

அருள்மிகு முத்துக்குமர சுவாமி திருக்கோயில், பரங்கிப்பேட்டை

அருள்மிகு முத்துக்குமர சுவாமி திருக்கோயில், பரங்கிப்பேட்டை, கடலூர் மாவட்டம்.

+91 84184 11058, 98940 48206 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

முத்துக்குமரர்

உற்சவர்

முத்துக்குமரர்

அம்மன்

வள்ளி, தெய்வானை

தீர்த்தம்

சுவேதா நதி, வங்காள விரிகுடா கடல்

பழமை 1000 வருடங்களுக்கு முன்
ஊர்

பரங்கிப்பேட்டை

மாவட்டம் கடலூர்
மாநிலம் தமிழ்நாடு

நமுசி என்ற அசுரன், எத்தகைய பலமான ஆயுதத்தாலும் தனக்கு அழிவு வரக்கூடாது என்று வரம் பெற்றிருந்தான். இதனால், ஆணவத்துடன் தேவர்களைத் துன்புறுத்தினான். இந்திரன் அவனுடன் போரிட்டு தோற்றான். தனக்கு அருளும்படி சிவனை வேண்டினான். சிவன் அவனிடம், இங்குள்ள கடலில் நுரையை எடுத்து அதை அசுரன் மீது வீசும்படி கூறினார். அசுரன் பெற்ற வரத்தின்படி, ஆயுதங்களால் தான் அவனுக்கு அழிவு உண்டாகாது. கடல் நுரை என்பது ஆயுதமாக கருத முடியாதென்பதால், அசுரனை அழிக்க சிவன் இவ்வாறு ஒரு தந்திரம் செய்தார். அதன்படி, இந்திரன் கடல் நுரையை வீச, அசுரன் அழிந்தான். மகிழ்ந்த இந்திரன் இங்கு சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து பூஜித்தான். இவர் விஸ்வநாதர் எனப் பெயர் பெற்றார். இவருக்கு இந்திர இலிங்கம்என்றும் பெயருண்டு. காலப்போக்கில் இவரது பரிவார மூர்த்தியாக எழுப்பப்பட்ட முத்துக்குமர சுவாமி (முருகன்) சன்னதி எதிரில் கோபுரம், கொடிமரம் அமைக்கப்பட்டதால், இவர் பிரசித்தி பெற்று விட்டார். கோயிலும் அவரது பெயரிலேயே அழைக்கப்பட்டது.

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு ஈசான்ய திசையில் (வடகிழக்கு) அமைந்த தலம் இது. முருகன் சன்னதிக்கு வலப்புறம் விஸ்வநாதர் இருக்கிறர். அருகிலேயே தென்திசை நோக்கி விசாலாட்சி சன்னதி உள்ளது.

அருள்மிகு முருகன் திருக்கோயில், வேல்கோட்டம், மருதமலை

அருள்மிகு முருகன் திருக்கோயில், வேல்கோட்டம், மருதமலை, கோயம்புத்தூர் மாவட்டம்.

காலை 5.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

முருகனின் வேல்

பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர்

வேல்கோட்டம்

மாவட்டம்

கோயம்புத்தூர்

மாநிலம் தமிழ்நாடு

அருணகிரிநாதர் பாடிய கந்தரலங்காரத்தில் வேல் பற்றிய சிறப்புகளை ஏராளமான பாடல்களில் குறிப்பிட்டிருக்கிறார். உற்றார் உறவினர்கள் அனைவரும் கைவிட்ட நிலையில் துணையின்றி தனித்துச் செல்லுகின்ற வழியில் தனக்குத் துணையாக வந்து உதவுவன வடிவேலும் மயிலுமே எனப் பொருள்பட பாடலில் குறிப்பிட்டு உள்ளார். வேல் ஞானத்தில் அம்சம். அந்த வேலைத் தாங்கி இருக்கின்ற முருகப் பெருமானை, ஞான வேல் முருகன் என போற்றுகின்றனர். வேலை வழிபட்டால் ஞானம் உண்டாகும். குமரகுருபர சுவாமிகள் நீண்ட காலம் வாய் பேசமுடியாத நிலையில் இருந்தார். திருச்செந்தூர் முருகனை மனதார வேண்டி அவனே கதி என இருந்தார். ஒருநாள் தன் பக்தனின் வேண்டுதலை ஏற்று குமர குருபரனின் முன் தோன்றி, குருபரா, உனக்கு பேசுகின்ற திறனோடு என்னைப் பாடுகின்ற புலமையினையும் வழங்கினோம் எனக்கூறி அவரது ஞானவேல் கொண்டு எழுதினார். முருகனின் பேராற்றலால் குருபரன் கந்தர் கலிவெண்பாவை பாடினார்.