Monthly Archives: January 2012

அருள்மிகு குமரக்கோட்ட முருகன் கோயில், காஞ்சிபுரம்

அருள்மிகு குமரக்கோட்ட முருகன் கோயில், காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டம்.

+91- 44 – 2722 2049 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 5 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். ஆறுகால பூஜை நடக்கிறது.

மூலவர்

முருகன்

பழமை

1000 வருடங்களுக்கு முன்

புராணப்பெயர்

கச்சி

ஊர்

காஞ்சிபுரம்

மாவட்டம்

காஞ்சிபுரம்

மாநிலம்

தமிழ்நாடு

ஓம்என்னும் பிரணவத்தின் பொருளறியாத பிரம்மனை முருகன் சிறையிலடைத்தார். அதன் பின், பிரம்மனின் உருத்ராட்ச மாலை, கமண்டலத்தை பெற்று பிரம்ம சாஸ்தா கோலத்தில் படைப்புத் தொழிலை ஆரம்பித்தார். அவ்வாறு படைப்பை இத்தலத்தில் நடத்தியதாக நம்பிக்கை.

மேற்கு நோக்கியுள்ள இந்த முருகனை தரிசித்தால் பிரம்மா, விஷ்ணு, சிவனை தரிசித்த பலன் கிடைக்கும். எனவே இவரை ஒருவரில் மூவர்என விசேஷ பெயரிட்டு அழைப்பர்.

நாக வழிபாடு மிகவும் தொன்மையானது. இந்த வழிபாடு அனைத்து சமயங்களிலும் பரவிக்கிடக்கிறது. பொதுவாக பெருமாளுக்குத்தான் ஐந்துதலை நாகம் குடை பிடிப்பதை பார்த்திருப்போம். இங்கே முருகனுக்கு ஐந்துதலை நாகம் குடைபிடிக்கிறது. வள்ளி தெய்வானைக்கு மூன்று தலை நாகமும் குடை பிடிக்கிறது. இவரை குமரக்கோட்ட கல்யாணசுந்தரர்என அழைக்கிறார்கள்.

அருள்மிகு குக்கி சுப்ரமண்யா திருக்கோயில், குக்கி சுப்ரமண்யா

அருள்மிகு குக்கி சுப்ரமண்யா திருக்கோயில், குக்கி சுப்ரமண்யா, தட்ஷிண கன்னடா மாவட்டம், கர்நாடகா மாநிலம்.

+91- 8257 – 281 224, 281 700

(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 1.30 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

குக்கி சுப்ரமண்யர்

தீர்த்தம்

குமாரதாரா

ஆகமம்

வைகானசம்

பழமை 1000 வருடங்களுக்கு முன்
ஊர்

குக்கி சுப்ரமண்யா

மாவட்டம்

தட்ஷிண கன்னடா

மாநிலம்

கர்நாடகா

காசியப முனிவரின் மனைவியரான கத்ரு, வினதா என்பவர்களுக்கு இடையே குதிரைகள் பற்றிய சர்ச்சை எழுந்தது. இருவரும் தங்கள் கருத்தே சரியென வாதம் புரிந்தனர். முடிவில், யாருடைய கருத்து சரியானதோ, அவர் மற்றவருக்கு அடிமைப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இந்த பந்தயத்தில், கத்ரு தோற்றாள். ஒப்பந்தப்படி கத்ருவும், அவளது குழந்தைகளான நாகங்களும் வினதாவிற்கு அடிமையாயின. வினதாவின் குழந்தையான கருடன், நாகங்களை துன்புறுத்தி வந்தது. வருந்திய நாகங்கள், வாசுகி என்ற பாம்பின் தலைமையில் குமாரதாரா என்ற நதியின் அருகிலிருந்த குகையில் வந்து தங்கின. அங்கிருந்தபடியே தங்களைக் காக்கும்படி அவை சிவனை வேண்டின. சிவபெருமான் அந்தப் பாம்புகள் முன்தோன்றி, “எனது மகன் சுப்பிரமணியனிடம் உங்கள் குறைகளைக் கூறுங்கள். அவன் உங்களைக் காப்பாற்றுவான்என்றார். அதன்படி பாம்புகள் குமாரதாரா நதியில் நீராடி, சுப்ரமணியரை வழிபாடு செய்தன. இதனால் மகிழ்ந்த சுப்பிரமணியர் நாகங்களைக் காப்பாற்றினார். இதற்கு நன்றிக்கடனாக வாசுகி பாம்பு, தனது ஐந்து தலைகளையும் விரித்து சுப்பிரமணியருக்கு குடையானது. இந்த நதி தற்போது கர்நாடகத்தில் ஓடுகிறது. அந்த நதிக்கரையில் சுப்பிரமணியருக்கு கோயில் எழுப்பப்பட்டது. ஊரின் பெயரே சுப்ரமண்யாஎன்பதுதான். சேவல் கொடி வைத்துள்ள இத்தல முருகன், “குக்குட த்வஜ கந்தஸ்வாமிஎன அழைக்கப்படுகிறார். இக்கோயிலை ஒட்டி பள்ளூஸ் என்ற இடத்திலுள்ள குகையில், சிவபார்வதி அருள்பாலிக்கின்றனர். தமிழகத்தில் பழநி முருகன் கோயில் பிரசித்தமாக இருப்பது போல, கர்நாடக மாநில முருக ஸ்தலங்களில் பிரபலமானது குக்கி சுப்ரமண்யாகோயிலாகும். இது பல யுகம் கண்ட கோயிலாகும்.