Monthly Archives: November 2011

சோலிங்கசுவாமி திருக்கோயில், சோமலிங்கபுரம்

அருள்மிகு சோலிங்கசுவாமி திருக்கோயில், சோமலிங்கபுரம், கன்னிவாடி, திண்டுக்கல் மாவட்டம்.

+91 99769 62536

காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சோலிங்கசுவாமி
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் வேதி தீர்த்தம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் சோமலிங்கபுரம்
மாவட்டம் திண்டுக்கல்
மாநிலம் தமிழ்நாடு

சித்தர்களான மெய்கண்டர், குண்டலி சித்தர், வாழையானந்தர், முத்தானந்தர் ஆகியோர் தங்களுக்கு சிவனருள் கிடைக்கவும், சித்துக்கள் கைகூடவும் மலைப்பகுதியில் தவமிருக்க ஆயத்தமாயினர். இதற்காக இங்கு வந்தவர்கள், மலையில் ஒரு சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தனர். அவர்களுக்கு அருளிய சிவன் இங்கேயே எழுந்தருளினார். இவருக்கு சோமலிங்கசுவாமி என்ற பெயர் ஏற்பட்டது.

அரிகேசபர்வதம் என்னும் மலையின் அடிவாரத்தில் அமைந்த கோயில் இது. சிவலிங்கம் போன்று அமைந்த குன்றுக்கு, ஆதிசேஷன் என்னும் நாகம் குடை பிடிப்பது போல அமைந்த மலை இது. பாறையை ஒட்டி சிறிய சன்னதியில் சிவன் காட்சி தருகிறார். பிரதோஷம், பவுர்ணமி, அமாவாசை, சிவராத்திரி நாட்களில் இங்கு விசேஷ பூஜை நடக்கும். கோயிலுக்கு அருகில் அகத்தியர் உருவாக்கியதாகக் கருதப்படும் வேதி தீர்த்தம் உள்ளது. பல மூலிகைகள் கலந்த அற்புத தீர்த்தம் இது. வயிற்று வலி, தீராத நோயால் அவதிப்படுவோர் நிவர்த்திக்காக இந்த தீர்த்தத்தை சிறிது குடித்துவிட்டுச் செல்கின்றனர்.

சொக்கநாதர் திருக்கோயில், திருமங்கலம்

அருள்மிகு சொக்கநாதர் திருக்கோயில், திருமங்கலம், மதுரை மாவட்டம்.

+91- 452 – 234 2782.

காலை 6.30 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சொக்கநாதர்
அம்மன் மீனாட்சி
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் ஆகாயகங்கை
ஆகமம் காரணாகமம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருமாங்கல்யபுரம்
ஊர் திருமங்கலம்
மாவட்டம் மதுரை
மாநிலம் தமிழ்நாடு

மீனாட்சியைத் திருமணம் செய்ய, கயிலையில் இருந்த சிவன் மதுரைக்கு வந்தார். அவர்களின் திருமணம் மதுரையில் நடந்தது. திருமணத்திற்கு முன்பு, தேவர்கள் மதுரை அருகிலுள்ள ஒரு பகுதிக்கு வந்தனர். பொன்னை உருக்கி மாங்கல்யம் செய்தனர். மாங்கல்யம் செய்வதற்கு முன்பு, சிவனை வழிபட, தேவர்கள் விரும்பினர். அவர்களின் விருப்பத்தை உணர்ந்த சிவன், இவ்விடத்தில் தனது திருமணத்திற்கு முன்பே பார்வதி சமேதராக எழுந்தருளி, காட்சி தந்தார். எனவே இங்கும் இறைவனை சுந்தரேஸ்வரர் என்றும், சக்தியை மீனாட்சி என்றும் அழைத்து, அந்த இடத்திலும் தங்க வேண்டும் என தேவர்கள் கேட்டுக் கொண்டனர். அங்கு திருமாங்கல்யம் செய்யப்பட்டதால், அப்பகுதியை தேவர்கள் திருமாங்கல்யபுரம்என அழைத்தனர். காலப்போக்கில் திருமங்கலம்எனப் பெயர் மாறியது. பிற்காலத்தில், மன்னர்கள் இங்கு கோயில் கட்டினர்.

இத்தலத்தில், யோகசனீஸ்வரர் தனிச்சன்னதியில் தெற்குநோக்கியபடி அருளுகிறார். இவரை, சனி தோஷம் உள்ளவர்கள் சனிக்கிழமைகளில் எள்விளக்கு போட்டு, காக்கைக்கு அன்னமிட்டு மனமுருக வேண்டிக்கொண்டால், துன்பங்கள் நீங்கி நல்வாழ்வு கிடைக்கும்.